Tuesday, 03 August 2004

நிலாக் காய்ந்த இரவொன்றில் நீயும் நானும் விழித்துக் கிடந்தோம்.
பாலர் வகுப்பிலிருந்து பழகிய சிநேகிதம் பருவத்தின் வளர்ச்சியில் தானும் வளர்ந்து விட்டிருந்தது.
முதலாம் வகுப்பில் பென்சில் இல்லா எனக்கு உன்னதில் பாதியை முறித்துத் தந்ததில் ஆரம்பித்த நட்பு.
அன்று அந்த வெள்ளவத்தைக் கடற்கரையில் ஒரே குளிர்பானப் போத்தலை இருவரும் பங்கிட்டு பசியையும் நட்பையும் பரிமாறிக் கொண்டவரை வளர்ந்து விட்டது.
அடுத்த நாள் காலை ஏன் அன்றிரவே உனக்கோ அல்லது எனக்கோ அழைப்பு வரலாம் மூட்டை முடிச்சுகளுடன் புறப்படும் படி; எனக் காத்திருந்தோம்.
யார் முதலில் போனாலும் மற்றவனுக்கு உதவுவதென்ற எமது தீர்மானத்திற்கு சாட்சியாய்க் காய்ந்தது நிலா!
நண்பனே நீதான் முதலில் புறப்பட்டுப் போனாய். வாயில் நுழையாத ஏதோவொர் உறைபனி தேசத்தூடு ஐரோப்பா போக.
அதன் பின்னர் நான் வந்து சேற்ந்துவிட்டேன் இன்னோர் நாட்டுக்கு. கூடவே வந்தது அன்றைய நிலா! இன்று கூட நிலாக் காயும் இரவுதான் நீ மட்டும் எங்கே?
ஆகக் குறைந்தது உயிருடன் இருக்கிறாயா?
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts) |