அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 03 December 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கனவுகளில்....!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சாந்தி ரமேஷ் வவுனியன்  
Monday, 06 September 2004

கனவுகளில்

எனக்காய் உனக்காய்
எங்களது மண் ஒழுங்கைகள்
மரத்தடி நிழல்கள்
கோவில் வீதிகள்
எங்கள் வீட்டு வாசல்கள்
எங்கும் நானுமாய் நீயுமாய்....
14 வருடங்கள்
பறந்து போயிற்று....
அம்மா என்றென் மடியில்
ஆணுமாய்...பெண்ணுமாய்....
அழகான சித்திரங்கள்....
அதுபோல் உனக்கும்
அடுத்தடுத்து மூன்று
அழகான ஓவியங்கள்.....
அடியே என்னவளே !
அடிக்கடி உயிர் வருடும்
என்னவனின் மூச்சுக்குள்
சுவாசமாய் நிறைந்திருக்கும்
என் உயிருக்குள் கலந்திருக்கும்
உன் நினைவை மறக்கவா முடியும்....?
கடந்து போன நாளிகைகள்
நினைவுகளில் நனைந்தபடி....
இழந்து போன வசந்தங்களில்
இதயத்தைத் தொலைத்தபடி....
இருவருக்குள்ளும் ஒருகோடி
எண்ணச் சிதறல்கள்.
இருவரையும் சுமந்தோடிய
எனது லுமாலாவும்,
உனது ஏசியாவும்....
உன் வீட்டு மரநிழலிலும்
என் வீட்டு வேலியோரத்திலும்
எத்தனை பொழுதுகள்....!
ஒழிக்க மறைக்க
எதுவும் இருந்ததில்லை.
இருவருக்குள்ளும் இருந்த
எங்கள் உயிர் வேரின்
நேசத்து வாசமாய்....
நானும் நீயும் கொண்ட
நட்பின் ஆழம் யாரறிவார்....?
ஊர் கண்ணில் நானும் நீயும்
உறுத்தல்களாய் போனபோது
உனக்கு நானும், எனக்கு நீயுமே
ஒத்தடங்களாயிருந்தோம்....
உன் அம்மா...,
சொல்லத் தேவையில்லை
உன் மீதீருந்த நம்பிக்கையில்
எதுவுமே கதைக்கமாட்டார்.
என் வீடு எல்லாவற்றிற்கும் எதிர்மாறு
அந்தக் கணங்களிலெல்லாம் - என்
ஆன்மத் துடிப்பாயிருந்தவள் நீ.
பருவ வயதடைந்த எங்களுக்கு
பட்டுடுத்திச் சடங்குசெய்த
பெற்றவர்கள் பூரிப்பில்
பலியாகிப் போய்விடுவோம்
என்றா அறிந்திருந்தோம்....?
பழகிப்போன விழிகளுக்குள்
நாங்களென்ன பாரத்தைக் கொடுத்தோமோ.....?
பருவத்துக் கிறுக்கில் - எம்
பின்னால் அலைந்த சைக்கிள்களை
யார் அழைத்தோம் வாவென்று.....?
நீயுமில்லை....நானுமில்லை....
நம்மைப் பெரிதாக்கி நடந்த
சடங்கென்று இன்று சொன்னாலும்
ஒருவரும் நம்பமாட்டார்....!
பின்னலைந்த விழிப்பார்வைகட்கு
பெரும் தேவதைகள் நாங்களாய்
ஏன் தெரிந்து தொலைந்தோமோ....?
என்னும் தான் புரியவில்லை....
காதல் சொல்லி வந்தவரின்
கண்களையே மறந்து விட்டோம்.
பின் அவர் காதலியர் நாமாக
எப்படி இடம் பிடித்தோம்....?
எங்களுக்குள் ஒவ்வொருவர்
இருந்தார்கள் மறுக்கவில்லை - பின்
இவர்களை யார் நினைத்திருந்தோம்....?
என்னையும் உன்னையும்
பிரித்துப்போட்ட கொடுவிழிகள்
பார்வையிலே இடிவீழ....
விதியென்று சொல்லிவிட்டு
விலகிப் போனோம் - நம்
வாழ்வென்ன நீளமென்று
திரும்பிப் பார்க்க மறந்து போனோம்.
தொலைந்தது கல்வி,
கலைந்தது நம் நிம்மதி,
காலம் இட்ட கட்டளையை
ஏற்கக்கூட மறந்து போய்
நான் புலம் பெயர நீ ஊரோடு
அழிந்து போனோம் - எங்கள்
ஆசைக் கனவெல்லாம்
உடைந்து போக
பொசுங்கிப் போகிறது நினைவுகள்....
வருடங்களை விழுங்கிய காலம்
விரைகிறது தன் வழியில்....
நாங்கள் தவறவிட்ட காலம்
இறந்த காலமாய் எழுதப்பட்டாயிற்று....
தொலைந்த எங்கள் நாட்களின்
நினைவுகள் நெஞ்சின் அடிவேரில்....

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  19976970 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3293 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com