அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 27 July 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow நாங்கள் பிரான்சின் நவீன அடிமைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நாங்கள் பிரான்சின் நவீன அடிமைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சகாயசீலன்  
Monday, 20 September 2004

நவீன அகதிகள்

தாயகம் வந்திருக்கும் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான பாலகனேசன் திருகோணமலை எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கு கொண்டார். அப்போதே 'நாங்கள் பிரான்சின் நவீன அடிமைகள்' என அவர் தெரிவித்தார். கடந்த 12.09.2004 அன்று திருமலை கிழக்கு புனர்வாழ்வு கழக மண்டபத்தில், அப்பால் தமிழின் பதிப்புத்துறைப் பொறுப்பாளர் வி.ஜெயமுருகனால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலில் கவிஞர் சு.வில்வரத்தினம், எழுத்தாளர்களான யதீந்திரா, வி.கௌரிபாலன் நாடகக் கலைஞர்களான தில்லைமுகிலன், பிலிப் ஜோன் முருகையா, ஆனந்த ரமணன், ஆகியோருடன் திருக்கோணமலையின் பல இலக்கிய ஆர்வலர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வு கவிஞர் சு.வில்வரத்தினத்தின், பாலகணேசன் பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பித்தது. பாலகணேசன் தனதுரையில் பிரதான இயங்கு தளமான நாடகத்துறை குறித்து தன்னிலை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தான் ஆரம்பத்தில் கவிதையையே பிரதான இயங்கு தளமாகக் கொண்டிருந்ததாகவும், எனினும் கவிதையின் மக்களைச் சென்றடையும் தன்மையின் போதாமையை உணர்ந்து நாடகத் துறையை தேர்ந்ததாகவும் தெரிவித்தார். நாடகமே புலம்பெயர் சூழலில் மக்களை ஒருமுகப் படுத்துவதற்குரிய சிறந்த ஊடகமாக இருப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். நாடகத்துறைசார்ந்தும் புலம்பெயர் சூழலில் அதன் எதிர்காலம் குறித்தும் ஆழமான கலந்துரையாடல் இடம்பெற்றது. ஒரு நம்பிக்கைதரத்தக்க இளையோர் அணியினரை தான் இனம்கண்டிருப்பதாகவும் பாலகணேசன் கூறினார்.

கலந்துரையாடலில் புலம்பெயர் சூழலில் நிலவும் அடையாளம் குறித்த தேடல், சாதியம் தொடர்பான பிரச்சனைகள், மாற்றுக் கருத்துக்கள், பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள் போன்றவையும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக புலம்பெயர் சூழலில் தற்போது பிரான்சில் மடடுமே ஓரளவு அரசியல் இலக்கியச் செயற்பாடுகள் இருக்கின்றன. பிரான்சிலும் ஆரம்பத்திலிருந்த முனைப்பு தற்போது வலுவாகக் குறைந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? அடையாளத்தை இழந்து அன்னியத்தோடு கலக்கும் நிலை உருவாகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என்ற அடிப்டையில் கேள்விகள் எழும்பின.

இது பற்றி பாலகணேசன் - யாழ்பாணத்து சமூகத்தை பெயர்த்து பிரான்சில் பொருத்தியதொரு நிலைதான் காணப்படுகிறது. இதன்காரணமாகத்தான் இத்தகையதொரு விவாதத்திற்கான அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. இன்று பிரான்சைப் பொறுத்தவரையில் எமது அடையாளத்தை பேணிக்கொள்வதென்பது பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது. அடையாளத்தை இழந்துபோதல் என்ற பிரச்சனை இருந்தாலும் பிரஞ்சு தேசியம் எம்மை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் எம்மை அகதி, கொள்ளைக்காரர், கரப்பான்பூச்சிகள் என்றெல்லாம் அழைத்தனர். இப்பொழுது நவீன அடிமைகள் என அழைக்கின்றனர். இடையே மாற்றுக் கருத்துக்கள் குறித்தும் கேள்வி எழும்பின. குறிப்பாக சமீபத்தில் புலம்பெயர் எழுத்தாளர்களில் ஒருவரான சோபாசக்தி தனது நேர்காணலில் (தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றில் வெளிவந்தது)  பிரான்சில் "கறுப்பு" தொகுப்பு விற்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறியிருப்பது தொடர்பிலும் கேட்கப்பட்டது. அவ்வாறான குற்றச்சாட்டுகள் எந்த அடிப்டையில் முன்வைக்கப் படுகின்றன? என்ற கேள்விக்கு பாலகணேசனின் பதில்:
'உண்மையில் அந்த தொகுப்பில் இடம்பெற்றிருந்த கவிதை ஒன்றுதான் பிரச்சனைக்குரியதாக இருந்தது. இதன் காரணமாக இயல்பாகவே பலரும் நூலை வாங்குவதை தவிர்த்துக் கொண்டனரே தவிர வேறு எந்தத் தடையும் விதிக்கப்படதாக நான் அறியவில்லை'. நிகழ்வு ஜெயமுருகனின் நன்றியுரையுடன் முடிவுற்றது.

 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 27 Jul 2024 14:39
TamilNet
HASH(0x557e71528cd0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 27 Jul 2024 14:39


புதினம்
Sat, 27 Jul 2024 14:39
















     இதுவரை:  25427697 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4505 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com