அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஊர்க்காவல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நாக.பத்மநாதன்  
Wednesday, 08 December 2004

அதே நாய்தான்!
இல்லை நாய்கள் எனக்கூறவேண்டும். அங்கு நின்றவை இரண்டு நாய்கள். நானும் எல்லோரும் பள்ளிக்கூட நாட்களில் சிறுகதையாய் படித்தறிந்த நாய்களே அவை இரண்டும்!
ஒன்று கொழுத்த நாய். கழுத்தில் தன் எஐமானன் கட்டிவிட்ட பட்டியை அது பெருமையோடு தாங்கிக் கொண்டிருந்தது.
மற்றது, ஒரு எசமானையும் அண்டி நிற்க முடியாத பரதேசி நாய்! சுதந்திரம் என்ற உணர்வின் பரிசாய் அது எலும்பு தெரிய மெலிந்து நின்றது. இருந்தும், அதிலும் அதற்கொரு மிடுக்கு!
பவிசுக்குரிய பெரிய நாய் அந்த ஊர் சுற்றி நாயுடன் தான் தான் கதைக்கப்போனது தவறு,
அதனைத் திருத்தமுடியாது என்ற முழு நினைவோடு தன் எசமானரிடம் போய்க்கொண்டிருந்தது. அந்த எசமானரும் எங்கள் சமூகத்தின் ஒரு 'பெரிய' மனிதர்தான்!
சாப்பிட்டு சுகமான உறக்கத்தில் அவர் ஆழந்து கொண்டிருந்தார். எசமானரைப் புரிந்த நாயல்லவா அது? எனவே தட்டாமல் குழப்பாமல் அவரது காலடியில் தலைவைத்து அது படுத்துக் கொண்டது.
திருப்தியின் முடிவு உறக்கம். அது இருவரையும் ஆட்கொண்டது. தணிந்தெரிந்த சிறுவிளக்கு அவற்றிற்கு அழகு செய்து கொண்டிருந்தது.
ஊரின் வெளியிலோ கும்மிருட்டு.
இப்போது நடுச்சாமம்.
பயங்கர நிசப்தம் குடிகொண்டிருந்த வேளை இவற்றிடையே...
ஏதோ ஒரு காலடிச்சத்தம் மெலலெனக் கேட்கிறது.
அந்த ஒலிதரும் விழிப்போடு பார்த்தால் ஓர் உருவம் தெரிகின்றது. அது மெல்லெனத் தெருவழியே பதுங்கி நகர்ந்து வருகின்றது. அது சந்தியில் வந்து திரும்பும்போது...
'வள்' என விழுகின்றது ஒரு குரல். தொடர்ந்தும் பெரும் கர்ச்சனையுடன் துரத்திக்கொண்டோடுகின்றது அந்த ஊர்சுற்றி நாய்!
அவன் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறான்! பெரிய வீட்டுக்கு அப்பாலுக்க்பாலும் அவன் ஓடி மறைந்த பின்னரே அது திரும்புகின்றது. கிளர்ந்தெழுந்த அந்த உளத்துடிப்பு ஒலிப்பெருக்காய் நின்று ஊரைக்காக்கின்றது.
சிரித்திரன்
ஐப்பசி 1970
(அதிர்ச்சிநோய் எமக்கல்ல! நாக.பத்மநாதனின் உருவகங்கள் என்னும் 1993ம் ஆண்டு தமிழ்தாய் வெளியீட்டில் இருந்து இப்படைப்பு நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.)


     இதுவரை:  24782934 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5889 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com