அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Monday, 31 May 2004
பக்கம் 4 of 5

வாடிய பயிர் கண்டு வாடினேன் என்ற வள்ளலாரையும் விஞ்சிவிடும் தனது நோக்கத்தையும்  வம்பவாரிசு கச்சிதமாகக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். 'எற்புத்துளைதொறும் லண்டன் குளிரில் பரமசிவனுக்கு பச்சைத்தண்ணீரில் அபிஷேகம் நடக்கிறது" என்ற கவலையையும், 'வெறும்மேலை, பனிக்குளிரும், பச்சைத்தண்ணீர்க் குளிரும் சேர்ந்து தாக்க நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார் பரமன்" என்ற பச்சாதாபத்தையும்  வெளியிட்டு குணம்குறியற்ற பரமனுக்கு குணம் வழங்கிய பாங்கில் சும்மா சொல்லக்கூடாது வள்ளலாரை ஓரங்கட்டி விட்டார் கம்பவாரிதி அடிகளார். சிறியோனாகிய எனது கருத்து என்னவெனில் கடையெழு வள்ளகளில் ஒருவராகிய பேகனையும் மிஞ்சக்கூடிய வாய்ப்பைக் கம்பவாரிதி தவறவிட்டுவிட்டார் என்பதே. பேகன் குளிரில் நடுங்கிய மயிலுக்குத் தன்போர்வையை வழங்கி இலக்கியத்தில் இடம் பெற்றான். கம்பவாரிதி குளிரில் நடுங்கிய பரமனைக் கல்லில் கண்டதும் தனது குளிராடையை வழங்கியிருப்பாரென்றால் இன்று தமிழ்கூறு நல்லுலகமும் பக்தகோடி உலகமும் கையேத்தித் தொழுதிருக்கும் தவறவிட்டுவிட்டார்.(கம்பவாரிதியும் குளிரின் குணத்தை அறிந்திருப்பார்) இதைவிட இன்னுமொரு பெருங்கவலையும் அவருக்கிருக்கின்றது. அதாவது இந்த புலம்பெயார்ந்த அற்பர்கள் அல்லது சூத்திரர்கள் 'வேதம் வழங்காத நாடுகளுக்கு வரமாட்டேன் என்றிருந்த அவரையும் கட்டாயம் அங்கு கொண்டுபோய் படுத்தும் பாடு.. பாவம் சிவனார்! அவரைப்பார்க்க அழுகையாய் வந்ததது" என்று அங்கலாய்த்துள்ளார்(கம்பவாரிதிக்கு கோயில் கட்டி வழிபட வேண்டிய நிலையில் இருக்கின்றார் என்பதை இத்தால் அறிவிக்கின்றேன். ஏனெனில் கல்லில் பரமனை அதுவும் குளிரில் நடுங்கும் பரமனை கண்டவரென்றால் சும்மாவா). இதற்கு முன்னர் அதாவது சில நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் எந்தக் கம்பவாரிதியின் அனுமதிபெற்று இந்தோசீனா, தாய்லாந்து, வியட்னாம், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், மார்ட்னிக், ரியூனியோன், குதலோப் போன்றதான நாடுகளுக்கு பரமன் சென்றாரோ தெரியவில்லை. அதெல்லாம் வேதம் வழங்கும் நாடுகள். 1980களுக்கு பின் புலம்பெயர்ந்து வதியும் நாடுகள்தான் வேதம் வழங்காநாடுகளா? கம்பவாரிதியாருக்குத்தான் வெளிச்சம். வம்பவாரிசின் அறிவுக்கொழுந்து எப்படியெல்லாம் ஒளிர்கின்றது பாருங்கள். ஒரு சமூகம் புலம்பெயர்ந்தால் அது பூமிப்பந்தின் எந்த முனையாக இருந்தாலும் கூடவே கடவுள், கல்லு, கத்தரிக்காய் எல்லாம்தான் புலம்பெயரும். இது மானிட இயல்பு. இலண்டனுக்கு ஆனைமுகத்தோனும், வள்ளிமணாளனும் புலம்பெயர்ந்ததும் கோயில் கொண்டெழுந்ததும் 1960களில் என இலண்டன் தலபுராணங்கள் கூறுகின்றன. புலம்பெயர்ந்த பக்த கோடிகளே உங்கள் கவனத்திற்கு: 'தங்கள் குளிர்தீர கோர்ட்டோடும் சூட்டோடும் நின்று கொண்டு பக்கதர்கள் அபிஷேகம் செய்விக்கிறார்கள்" என்கிறார் ஜெயராஜ். இதனை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். அவருக்கான அபஷேகத்தை வழங்குங்கள்.
இவ்வளவு நேரமும் அவர் வழங்கிய ஒருகுடம் பாலில் கலந்திருந்த செறிவற்ற நஞ்சுத் துளிகளையே பிரித்துக்காட்டினேன். தற்போது உருகி உருகி அவர் சொல்ல விரும்பிய, பாலெனக் காட்ட முயற்சித்த செறிவு மிக்க நஞ்சுத்துளி எதுவென்றால் 'வரமுடிந்தாலும் இனி இங்கு வராதீர்கள்" என்பதுதான். அவர் கம்பவாரிசல்லவா அதனால் கம்பனில் கவிக்கருத்தில் "வாரதே!வரவல்லாய்" என்னும் சொற்தொடருக்கு அவர் நஞ்சு தடவியுள்ளார். இங்கேதான் அவருடைய கபடம், கள்ளத்தனம், போலி ஆன்மீகம் எல்லாம் வெளிப்படுகின்றன. ஏனெனில் இவருடை இந்த உபதேசம் அரசியல் சார்ந்தது, ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்டது.
1980களில் இலங்கைத் தீவைவிட்டு தமிழர்கள் பெருமளவில் வெளியேறத் தலைப்பட்டபோது இலங்கையின் குடியகல்வுத் திணைக்களம் இறுக்கங்களை தளர்த்தியிருந்தது. கண்டும் காணாமல் விட்டது. இது சிறிலங்கா பேரினவாத அரசின் தந்திர மிக்க அழிப்புத் திட்டத்தைச் சார்ந்தது. ஜேஆர் என்னும் குள்ளநரியின் அரசியல் திட்டமது. தமிழர்களின் வெளியேற்றம் தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் என அவர் நம்பினார். ஆனால் விளைவு எதிராகவே அமைந்தது. அது தமிழ்தேசியத்தை வீறுகொள்ளச் செய்தது பலமுறச் செய்தது. இது சிறிலங்கா பேரினவாதம் எதிர்பாராதது. இப்போது அவர்கள் நேரடியாகத் திரும்பி வருவது சிறிலங்கா பேரினவாதிகளுக்கும் பிடிக்கவில்லை. தென்கிழக்காசியாவின் சூத்திரதாரியாக மாறவிரும்பும் இந்தியாவுக்கும் பிடிக்கவில்லை. ஈழத்தமிழர்களை அழிக்கும் நோக்குடன் சந்திரிகாவுக்கும்-வீரவன்சவுக்கும் கூட்டினை ஏற்படுத்திய சூத்திரதாரி யார் என்பதை அரசியல் அரிச்சுவடி அறியாதவர்கூட கூறுவர்.



     இதுவரை:  24711516 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4950 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com