அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அழுகைக் குரலாளன் - பொப்மார்லி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Tuesday, 08 March 2005
பக்கம் 1 of 5

மெளனம்கடந்த மாத தொடக்கத்தில் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளை றேகே இசைப்பாடகன் பொப்மார்லி ஆக்கிரமித்திருந்தான். 1981ம் ஆண்டில் புற்று நோயால் இறந்த பொப்மார்லியின் அறுபதாவது நினைவு தினம் பெப்.6ல் இருந்து (06-02-2005)ஆரம்பமாகி இருந்தது. வழமையாக அவனது நினைவுநாள் நிகழ்ச்சிகள் அவனது சொந்த இடமான யமேக்காவில்தான் நிகழ்வதுண்டு. ஆனால் இம்முறை யமேக்காவுக்கு வெளியே ஆபிரிக்காவில் எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ்அபாவில் (Addis Ababa) நடைபெற்றது. அவனது பாடல்களில் உலகளாவிய ஒருமைத் தன்மை விரவியிருப்பதை கேட்போர் உணரலாம். பொப்மார்லி பற்றி என்னால்(கறுத்தான்) எழுதப்பட்ட இக்கட்டுரை மெளனம்-2(ஓக.செப்.ஒக்.1993) இதழில் வெளிவந்தது. பொப்மார்லியின அறுபதாவது நினைவு நாளை பகிர்ந்து கொள்ளும் வகையில் மீளவும் இக்கட்டுரை சிறு திருத்தங்களுடன் பிரசுரமாகின்றது. 





'நீதிக்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப்புகின்றானோ அவன் WAILERS'

1.

பொப்மார்லிபொப்மார்லியின் அறிமுகம் கிடைத்து பத்தாண்டுகளாகின்றது. அவ்வேளை அவன் இறந்து இரண்டு வருடமாகி இருந்தது. 1983ல் உச்சநிலையை அடைந்த இலங்கைத்தீவின் துயரங்கள் வெளிநாடுகளில் இருந்த இளைஞர் பலரை தாயகம் நோக்கித் திருப்பி இருந்தது. அவர்களில் ஒருவனாக கபிலன் கூடவே பொப்மார்லியுடன் வந்து சேர்ந்தான்.
ஒலிநாடாவில் பொப்மார்லியின் குரல்கேட்ட முதல் தருணத்திலேயே அவனது உயிர்த்திருத்தலின் சாத்தியத்தை உணரலானேன். குரலில், இசையில் இழைந்தோடிய அழுகையும் விம்மலும் இசைக்கருவிகளின் சுண்டியிழுக்கும் அதிர்வும் எனன்னுள் கிளர்ச்சியூட்டின. அந்த கிளர்ச்சி துன்புறுத்தலின் இன்பத்தால் நான் துடித்தேன். கேட்டவைகள் விம்மல் வெடிப்புகள், உயிர் வதையின் வீச்சுகள்.

ஃப்பல்லோ சோல்ஐர்...பாடல்தான் கேட்ட மாத்திரத்தே மிக அதிகமாக என்னைப் பாதித்தது. அப்பாடல் எப்போதும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரை நினைவுறச் செய்தது. 'ஊரான ஊர் இழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்..', 'அட்டைக்கடியும் அரிய வழிநடையும்...', நாங்கள் உழைக்கவும் சாகவும் மட்டுமே...', என்னும் அம்மக்களின் சோகச் சொற்தெறிப்புகளின பாரத்தை பொப் மார்லியிடம் பெறலானேன். அவனது அப்பாடலின் இடை நிரவலாக சேர்ந்திசைக்கப்படும் யோ..யோ..யோ..யோய்யயயோ.. எனும் பல்குரலோசை தேயிலை போர்த்திருக்கும் மலைக்குன்றுகளிடையேயான ஓலமாய் என்னை வதைத்தது. தாயகத்தின் புறச்சூழல் தந்த நெருக்குவாரத்தில் அந்த ஒலி நாடாவும் கைதவறிப்போனது.

1991ல் ஐரோப்பாவிற்கு அகதியாய் வந்தடைந்து  அலைந்தபோதுதான் மீளவும் அந்த இறவாத பொப்பார்லியை தரிசித்தேன். இப்போது அவன் மிக இளமையாய், துள்ளலாய், எங்கெங்கும் வியாபி்த்தவனாய் உயிர்த்துடிப்புடன் இருந்தான். ஆச்சரியமாய் இருந்தது.



     இதுவரை:  24712209 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5524 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com