அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அழுகைக் குரலாளன் - பொப்மார்லி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Tuesday, 08 March 2005
பக்கம் 3 of 5

3.

பொப்மார்லிஅவனது பாடல்களில் தொன்மை தொன்மம் பற்றியதான உள்ளடக்கங்களுடன் விவிலியத்தின் பழைய ஏற்பாடு கூறும் கருதுகோள்களும் விரவிக்கிடப்பதைக் காணலாம். அத்துடன் ஃகார்வேயிசம் என்னும் சிந்தனைத் தாக்கத்தாலும் தத்துவத்தினாலும் பொப்மார்லி கவரப்பட்டிருந்தான். ஃகார்வேயிசத்தின் மூலவரான மார்குஸ் மொசய் ஃகார்வே (MARGUS MOSIAH GARVEY), அடிமைப்பட்ட கறுப்பின மக்களின் மீட்பராக மதிக்கப்படுபவர். யமேக்காவின் தேசியவீரராக அரசால் ஏற்கப்பட்டவர். யமேக்காவின் கல்விப்பாடவிதானத்தில் அவரது போதனைகள் சேர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது. யமேக்காவில் 1887ல் பிறந்த ஃகார்வே 'ஆபிரிக்காவுக்கு திரும்புதல்' ஆபிரிக்கா ஆபிரிக்கருக்கே' என்னும் கோட்பாட்டையும் அதற்கான இயக்கத்தையும் நடாத்தி வந்தார். இருண்ட கண்டமென்று பெயரிட்டு அந்த ஆபிரிக்ககண்டம் முழுவதையுமே ஐரோப்பா அடிமைப்படுத்தியிருந்த முதலாம் உலகப் போரின் பின்னான காலகட்டத்தில் ஃகார்வேயின்  இம்முழக்கங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவருடைய சிந்தனைகளும் செயற்பாடுகளும் புரட்சிகரமானது துணிச்சல் மிக்கது என வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.

'நாம் அணிசேர்வோம். மற்ற மனிதர்களை வெறுப்பதற்காய் அல்ல. நம்மைநாமே உயர்த்திககொள்ள, நமக்கு மறுக்கப்பட்ட மனிதத்துவத்தை வற்புறுத்த.  நாம் தயாரிததுள்ள வேலைத்தி்ட்டம் நியாயமானது என்று நம்புவோம். நாம் பிரகனடம் செய்வோம், ஆபிரிக்கா விடுதலை பெற, இயந்திர ஆலைகள் கொண்ட பெரு முதலாளிகளின் அடிமைப்படுத்தலில் இருந்து நீக்ரோ இனம் முழுமையும் விடுதலைபெற, நாம் சமரசம் செய்யத் தேவையில்லை. நாம் அணிசேர்வேம்...'என்னும் முழங்கினார் ஃகார்வே.  இந்த முழக்ங்களை பரப்புரை செய்தவண்ணம் மேற்கு இந்தியத் தீவுகள், மத்திய - தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய  பகுதிகள் எங்கும் பயணம் செய்தார். கறுப்பின மக்களை அணிசேர்க்க உழைத்தார். 1919ம் ஆண்டில் இருபது இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பொன்றை நிறுவி அதன் முதல் கிளையை அமெரிக்காவில் செயல்பட வைத்தார். உலக நீக்ரோ மேம்பாட்டு கூட்டமைப்பு(U.N.I.A) என்பது அவரது இயக்கததின் பெயராகும். அடிமைகளாய் பிடித்துவரப்பட்டிருந்த மக்களை மீளவும் தாயகமான ஆபிரிக்காவிற்கு அழைத்துச் செல்வதற்கான கப்பல் நிறுவனம் ஒன்றினையும் நிறுவினார். ஆனால் அமெரிக்க அரசானது ஃகார்வேயின் மேல் வரிஏய்ப்பு எனற காரணத்தைக்காட்டி வழக்கு தொடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.

பின்னாளில் பொப்மார்லி தனது 'SO MUCH THINGS TO SAY' என்னும் பாடலில் இப்படிப்பாடினான்...

'நிறையவே உள்ளது சொல்வதற்கு
மறப்பதற்கு எனக்கு வேறு வழியில்லை..
அவர்கள் யேசுக்கிறிஸ்துவை
சிலுவையில் அறைந்தார்கள்.
நான் மறக்க வேறு வழி ஏதுமில்லை.
அவர்கள் மார்குஸ் ஃகார்வேயை
அரிசிக்காய் விற்றார்கள்.
ஆதலால் எந்த வழியுமிலலை நீ மறக்க
நீ யாராய் இருக்கலாம்
இந்தப் போராட்டத்தில் நீ எந்தப்பக்கம்....'

ஃகார்வே விதைத்த தொன்மங்களே பொப்மார்லியின் பாடல்களின் அடிநாதமாகும்.



     இதுவரை:  24715536 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4283 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com