அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அழுகைக் குரலாளன் - பொப்மார்லி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Tuesday, 08 March 2005
பக்கம் 4 of 5

4.

1930ம் ஆண்டில் எதியோப்பியாவின் மன்னராக 'கெய்லி  செலாசி'(Haile Selassie)  முடிசூடியபோது மார்குஸ் ஃகார்வே ' கறுப்பு அரசன் முடிசூடுகின்றான். கறுப்பரின் இராச்சியம் எழுகின்றது. அவன் கடவுளின் பிரதிநிதி.விவிலியம் கூறும் அரசுரிமையின் தொடர்...' என்றெல்லாம் முன்மொழிந்து வரவேற்றிருந்தார். யமேக்கா மக்களும், பொப்மார்லியும் இக்கருத்துக்கும் கனவுக்கும் ஆட்பட்டிருந்தனர். 1940ம் ஆண்டிலேயே ஃகார்வே இறந்த போதிலும், 1960ம் ஆண்டு யமேக்காவின் அரசியல் சூழ்நிலை ஃகார்வேயின் சிந்தனைக்கும், கோட்பாடுகளுக்கும் புத்துயிரளித்தன. 1962ம் ஆண்டில் யமேக்கா கொலணித்துவத்தில் இருந்து விடுதலை பெற்றதாய் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொருளாதார சீர்குலைவுக்கு நாடு உள்ளாகி இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதையும் விட அதிகரித்திருந்தது. இவ்வேளையில்தான் யமேக்கா தீவுக்கு அருகாமையான வட அமெரிக்காவில் அமெரிக்க கறுப்பர்களின் குடியுரிமை இயக்கம் உச்சம் பெறறிருந்தது. இவை யமேக்கா இளைஞர்களை றேகே இசையின்பாலும், றேகே இசைக்கலைஞர்களான 'றஸ்தபாரியன்'பாலும் ஈர்ப்புறச் செய்தன. இந்த'றஸ்தபாரியன்' இயக்கம் (RASTARI  MOUVMENT) எதியோப்பிய மன்னனாக 1930ல் கெய்லி செலாசி முடிசூடியபோதே தோற்றம் பெற்றது. ஃகார்வேயி்ன் கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில் இவர்கள் கலகக்காரர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டனர். மதங்களை இவர்கள் நிராகரித்தார்கள். குறிப்பாக கத்தோலிக்க, கிறிஸ்தவ மதங்களை அடியோடு வெறுத்தார்கள். தங்களின் அடிமைநிலை இம்மதங்களாலும், மதம் பரப்பும் பாதிரிகளாலும் ஏற்பட்டதென நம்பினர். விவிலியம் கூறும் ஆதிவரலாறான பாபிலோன், கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி(எதியோப்பியா),  இவையே அவர்களின் நம்பிக்கையாக இருந்தன.

'தாங்கள் போதிக்கும் எந்த சமயத்தையும் கேள்விக்கு இடமில்லாமல் பரிசுத்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கோருபவர்களுக்கு எதிராக அடக்குமுறைக்கு உள்ளான மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். அவ்வேளைகளில் அவர்கள் வேறு ஒரு கடவுளை, மதத்தை நாடுபவர்களாகவே இருப்பதை சரித்திரம் சான்று பகர்கின்றது. இதேபோல்தான் கிறிஸ்தவத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் றஸ்தபாரியம் என்பதனை மாற்றான மதமாக கொண்டார்கள். இதனை ஆனமீக விலங்குகளில் இருந்து விடுதலைக்காக போராடும் மதம் என்று கருதினார்கள்.' என்கிறார் ரீற்றா பொறாஸ் என்னும் கட்டுரையாளர்.

றஸ்தபாரியன்கள் தமக்கான வாழ்க்கை நெறிமுறை ஒன்றையும் கடைப்பிடித்தனர். தலைமுடியை வாராமல், வளர்ந்ததை முறுக்கி, தொளதொள ஆடையுடன் அவர்கள் காணப்பட்டனர். அவர்கள் கஞ்சா புகைத்தார்கள். சாப்பாட்டு முறையிலும் சில கட்டுப்பாடுகளை கைக்கொண்டனர். அதாவது உணவில் பன்றி இறைச்சியை தவிர்த்தார்கள். தங்கள் நிறமாக சிவப்பு,மஞ்சள்,பச்சை, எனக்கொண்டு அதனையே கொடியாக்கினர்.  பொப்மார்லியும் தன்னை றஸதபாரியன் என்றே அடையாளப்படுத்தினான். ஒரு தடவை பொப்மார்லி கூறினான் 'றஸ்தபாரி வெறும் திடீர் கலாச்சாரமல்ல. அது இயல்பான உண்மை'. 'நான் எப்போதும் றஸ்தபாரிதான்'. 'என்னிடத்தே மதம் இல்லை. நான் இயல்பானவன். இயற்கையானவன். நியாயங்களுக்கானவன். நான் றஸ்தபாரியன்'.

தனது புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான 'GET UP STAND UP' பாடலில் இப்படிப் பாடுகிறான்...

' மிக அதிகமான மக்கள் நினைக்கிறார்கள்
கடவுள் கட்டாயம் வானத்திருந்து வருவாரென்று
எல்லாவற்றையும் பொறுப்பேற்பாரென்று
இதுவே அவர்களின் உயர் எண்ணங்கள்
ஆனால் நீ அறிவாயா வாழ்வின் பெறுமானங்களை
நீ கட்டாயம் உன் பூமியை உற்றுப்பார்
இப்போ நீ ஒளியை உண்மையை உணர்வாய்
நீ எழு. நிமிர்ந்து நில்.
உன் உரிமைகளுக்காக எழுந்து செல்..'

அவன் நிகழ்கால உண்மைகளை நிலைமைகளையே பாடினான்.




     இதுவரை:  24783022 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5842 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com