அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அழுகைக் குரலாளன் - பொப்மார்லி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Tuesday, 08 March 2005
பக்கம் 5 of 5

5.

1980ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொப்மார்லி ஜிம்பாவே நாட்டின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தான். கொலணித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலும், சிறுபான்மையினரா நிறவெறி வெள்ளையரின் ஆட்சிக்கெதிரான போராட்டத்திலும் வெற்றிபெற்ற ஜிம்பாவேயின் வெற்றி விழாவில் பொப்மார்லி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டான். சிறப்பிக்க்கப்பட்டான். இதனை தன் இசைவாழ்வின் பெருமிதமிக்க நிகழ்ச்சியாகவே பொப்மார்லி கருதினான். கறுப்பரின் எழுச்சியை காணமுடிந்ததே என்றும் மகிழ்ந்தான். ஜிம்பாவே பற்றிய அவனது பாடல் இன்றும் அந்நாட்டின் தேசியகீதம் போல் இசைக்கப்படுகின்றது. இதோ அந்தப் பாடல்..

'கையினில் கையாய் கருவி ஏந்தி
இச்சிறுபோரில் நாம் பொருதிடுவோம்
ஏனெனில் அதுவே ஒரேயொரு வழி
இச்சிறு  எதிர்ப்பை மீறி நாம் எழுவோம்
சகோதரனே நீயே சரியானவன்
நீயே உரித்தானவன்
நாம் சண்டையை தொடவோம்
எம் உரித்துக்காய் போரிடுவோம்
பிரித்தாளும் ஆட்சித் தந்திரம்
ஒவ்வொரு மனிதனின் நெஞ்சிலும்
தனியே கண்ணீரை உகுக்கின்றது.
நெஞ்சத் துடிப்பும் அங்கே கேட்கின்றது.
ஆதலால் நாம் கண்டடைவோம்
யார் உண்மையான புரட்சிக்காரன்
நான் விரும்பவிலலை
தந்திரங்களினல் எனது மக்கள்
ஆயுதக்கூலிகளாவதை...'


ஜிம்பாவே வெற்றிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகிழ்வில் இருந்து மீள்வதற்கு முன் பொப்மார்லி சுகவீனமுற்றான். கரீபியன் தீவுகளிலும், தென் அமெரிக்காவிலும் பிரபல்யம் பெற்றதானSOCEAR என்னும் உதைபந்தாட்டத்தில் விருப்பம் கொண்டவன் பொப்மார்லி. 1980ம் ஆண்டு செப்படம்பர் மாத ஒரு காலைப்பொழுதில் தன் உடற்பயிற்சிக்காய் உதைபந்தை விளையாடிக் கொண்டிருந்த போது சுகவீனமுற்றான். எப்போதும் கஞ்சா புகைப்பதில்  மூழ்கியவனான பொப்மார்லி கஞ்சா தேசத்தை குணப்படுத்தும் மருந்து, பழம் உண்பதைப் போன்றது. சிந்தனைத் தெளிவிற்கும் உடல் நலத்திற்கும் ஏற்றது.' என்று அழுத்தத்துடன் கூறிவந்தவன். றஸ்தபாரியன்களும் 'கஞ்சா பொதுமை உணர்வை தருகின்றது' என்ற நம்பிக்கையை கொண்டிருந்தவர்கள். ஆனால் மருத்துவர்கள் கஞ்சாதான் பொப்மார்லியின் சாவுக்கு காரணமென கூறுகின்றனர். றொபேர்ட் நெஸ்டா மார்லி என்று முழுப்பெயர் கொண்ட, மக்களின் உணர்வுகளை கவலைகளை பாடலாய் மாற்றிய இசைச் கலைஞன் பொப்மார்லி 1981ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி த்ன முப்பத்தாறாவது வயதில் இறந்து போனான். அவனது இறுதிநாள் ஊர்வல நிகழ்ச்சி பற்றி எழுதிய பத்திரிகையாளர் ஒருவர் 'கற்களாலான சீனபெருமதிற் சுவர்போல் மக்கள் தலைகள் திரண்டு கிடந்தன. அவனுக்கு அஞ்சலி செலுத்தும் வரிசை மூன்று நாட்களின் பின்னாலும் முடிவுறாது இருந்தது.' எனக் குறிப்பிடுகின்றார்.

ஹரிக்கேன் புயலென பொப்மார்லி றேகே இசையுடன் எழுந்தான். அப்புயலிடை அவன தூவிய விதைகள் துயரமுறும் மக்களிடமெல்லாம் சென்ற தங்கியுள்ளது. அவனது சக்தி உமிழும் இசையை, பாடல்களை முறியடிக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம்  அவன் மீறியவனாய்...

'ஆம் என் நண்பனே
அவர்களுக்கு சொல்
நாங்கள் மிகவும் சுதந்திரமானோமென
என்னை அடக்க எச்சட்டத்தாலும் முடியாது
எந்தச் சக்தியும் என்னை கட்டுப்படுத்தாது...'

காற்றில் மிதக்கின்றது அவன் பாடல் சுதந்திரமாக.

பி.கு: 1993ல் இக்கட்டுரை எழுதுவதற்கு சில நூல்கள், கட்டுரைகள், ஒலி ஒளி நாடாக்கள் பயன்பட்டன. அவை எவை என்பதை தற்போது என்னால் குறிபபிட முடியாதிருக்கின்றது. குறைகள் இருந்தால் சுட்டுங்கள். கருத்துக்களை எழுதுங்கள்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

  




     இதுவரை:  24805607 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4693 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com