அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பிரியமுள்ள தோழனுக்கு..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்  
Thursday, 07 April 2005

வாழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றேன் தோழா..
இன்னமும் எஞ்சிக்கிடக்கும
ஆயுட்காலங்களின்
தோன்றாத் தரிசனங்களை
துருவிப்பார்க்கும் மனதோடு
இன்னமும்
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறேன் தோழா..

நான் நடந்து வந்த
பாதைகளெங்கும்
நரிப்பள்ளஙகள்.
விழுந்த பள்ளங்கள் சிலவற்றில்
வெற்றியின் வித்துக்கள்.
பற்றியெழுந்த கயிறுகள் சிலவோ
பாம்புகள்.
வாழ்வதற்கான ஆசையின் அடியில்
எஞ்சிக்கிடந்தது
கொஞ்சம் கனவுகள் மட்டும்தான்.
கனவுகள் சுமந்து
கனவுகள் சுமந்து
காலம் ஓடிக்கொண்டிருக்கிறது
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
தோழா..

நேற்று நாம் வடித்த கண்ணீரில்தான்
எத்தனனை கனம்.
அம்மாவின் வயிறிரைந்து
ஆராரோ பாடியபோது
கூழுக்கான கனவோடு
குறைநித்திரை கொண்டோமே
அந்தத் தூக்கத்தில்தான் எத்தனை விழிப்பு!
வயிறிரையும் ஓசைக்குள்
மனசின் பாஷைகள்
தொலைந்து போகாமல்
குப்பையைக் கிளறி
முட்டையிடும் கோழிபோல
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
தோழா..

இதன் பெயர்தான் வாழ்க்கை என்பதை
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இதற்கப்பால் உள்ள வாழ்க்கையையும
எட்டிப்பிடிக்க முடியவில்லை
மாடு சூப்பிய பனங்கொட்டைக்குள்ளிருந்தும்
மறுபடி முளைக்கும் ஒரு பனைமரம்
எனும்போது
எனக்கும் வாழ்க்கை வசப்படும்
எனும் எண்ணத்தில்
வாழ்நது கொண்டிருக்கிறேன்
தோழா...


     இதுவரை:  24783609 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5362 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com