அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 10 December 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 17 arrow பாப்லோ நெரூடா..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பாப்லோ நெரூடா..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எஸ்.வி.ராஜதுரை  
Tuesday, 07 June 2005

பாப்லோ நெரூடாவின் கவிதைக் கோட்பாடு


'தளபதிகளின் இராணுவத் தகுதிகளை அவர்கள்  படுக்கையில் என்ன செய்கிறார்கள் அல்லது எதைச்  செய்யவில்லை என்பதைக் கொண்டு மதிப்பிடக் கூடாது'.

- எரிக் ஹாப்ஸ்பாம்

“யதார்த்தவாதியாக இல்லாத கவிஞர்கள்  செத்துப்போனவர்கள். ஆனால் யதார்த்தவாதியாக  மட்டுமே இருக்கும் கவிஞர்களும்கூட  செத்துப்போனவர்கள்தாம். அறிவுக்குப் புரியாத வகையில்  எழுதும்  கவிஞர்களின் கவிதைகள் அவர்களுக்கும்  அவர்களை நேசிப்பவர்களுக்கும் மட்டுமே புரியும்.  இது  மிகவும் வருந்தத்தக்கது. அறிவுக்குப் புரியும் வகையில்  மட்டுமே எழுதும் கவிஞர்களைக் கழுதைகளாலும்கூடப்  புரிந்து கொள்ள முடியும். இதுவும் வருந்தத்தக்கதுதான்.”
மேற்தோற்றத்தில் முரண்பாடுகள் கொண்டதாகத்  தெரியும் இந்த வரிகள் பாப்லோ நெருடாவின் கவிதைக்  கோட்பாட்டினை உள்ளடக்கியுள்ளன.

1920 களிலிருந்து 1950கள் வரை இலத்தீன்  அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் இடதுசாரி  எழுத்தாளர்கள் மீது செல்வாக்கு செலுத்திய இரண்டு  முதன்மையான அரசியல், அழகியல் நிலைப்பாடுகள்  சர்ரியலிசமும் சோசலிச யதார்த்தவாதமும் ஆகும்.  1936-இல் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர்  தொடங்கியதும் அதுவரை சர்ரியலிச பாணியில்  கவிதைகள் எழுதிவந்தவர்களில் பலர் - குறிப்பாக செஸர்  வால்லெயோ (Cesar Vallejo),
 à®°Â·à®ªà¯‡à®²à¯ அல்பெர்ட்டி (Rafael Alberti), லூயி செமுடா  (Louis Cemuda), பாப்லோ நெரூடா
ஆகியோர் -  சாதாரண மக்களையும்  எளிதில் சென்றடையக்கூடிய  கவிதைகளை எழுதத் தொடங்கினர். ஆனால் பாசிச  எதிர்ப்பில் உறுதியாக நின்ற இடதுசாரிக் கவிஞர்களில்  ஒக்டோவியா பாஸ் (Octavia Paaz), வின்செந்த்  ஹயுடொப்ரெ (Vincente Huyidobre)  ஆகியோர்  பரிசோதனைப் பாணி, சர்ரியலிச பாணிக் கவிதைகளை  எழுதுவதையோ அல்லது சர்ரியலிசக் கோட்ட்பாடுகளைப்  பின்பற்றுவதையோ ஒருபோதும் கைவிடவில்லை.  ஸ்பெயினின் புகழ்பெற்ற நாடகாசிரியரும் கவிஞரும்,  பாசிசவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவருமான,  பெடெரிகோ கார்ஸியா லோர்கா (Federico Garcia  Lorca) கடைசிவரை சர்ரியலிசக் கவிதைகள்  எழுதிவந்தபோதிலும், அவரது மரணத்திற்குப் பின்   ‘நியுயார்க்கில் கவிஞன்’ என்னும் தலைப்பில்  வெளியிடப்பட்ட அவரது கவிதைகள் அமெரிக்காவில்  ஏற்பட்ட மிகப்பெரும் பொருளாதார மந்தம், இனவாதம்,  அந்நியமாதல் ஆகியவற்றைச் சித்தரித்தன. உலகப்  புகழ்பெற்ற மெக்ஸியக் கவிஞர் ஒக்டோவியா பாஸ்,  மார்க்சியச் சிந்தனையை ஏற்றுக்கொண்டவராகவும்,  பாசிசத்திற்கு எதிராக உறுதியாகப் போராடியவராகவும்  இருந்தபோதிலும், சோசலிச யதார்த்தத்தை  ஸ்டாலினிசத்தின் துணைவிளைவு என முற்றிலுமாக  நிராகரித்தார்.

1917 நவம்பர் புரட்சிக்குப் பின் லெனின்  தலைமையிலிருந்த ரஷ்ய (சோவியத்) கம்யூனிஸ்ட்  கட்சியோ, சோவியத் அரசாங்கமோ அதிகாரபூர்வமான  கலை-இலக்கியக் கொள்கை எதனையும் வகுக்கவில்லை.  மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும்   எற்றுக்கொண்டிருந்த கலை  இலக்கியவாதிகளிடையேயுங்கூட பல்வேறு போக்குகளும்  பாணிகளும் இருந்தன. மார்க்சியவாதிகளாக இல்லாத,  ஆனால் புரட்சியையும் சோசலிசத்தையும் தரித்த  கலைஞர்கள் ‘சக பயணி’களாகக் கருதப்பட்டனர்.  லெனினின் மறைவுக்குப் பிறகும்கூட இத்தகைய கலை  இலக்கிய சுதந்திரம் சில ண்டுகள் நீடித்தது. ஆனால்  1934-இல் ‘சோவியத் எழுத்தாளர் ஒன்றியம்' என்கிற  ஒரே அமைப்பும் 'சோசலிச யதார்த்தவாதம்’ என்கிற ஒரே  ஒரு கலை இலக்கியக் கோட்பாடும் மட்டுமே சோவியத்  அரசாங்கத்தாலும் கட்சியாலும் அங்கீகரிக்கப்பட்டன.  அதிகாரி வர்க்கத் திரிபுகளுக்குள்ளான இக் கோட்பாடு  பல சமயங்களில் சோவியத் பண்பாட்டு வளர்ச்சிக்கு   முட்டுக்கட்டையாகவே இருந்தது.  பின்னாளில்   கலை-இலக்கியத் துறையில் ஒரு சர்வாதிகாரியாக  விளங்கிய ஸ்தானோவ் 1934-இல் நடந்த சோவியத்  எழுத்தாளர் ஒன்றியத்தின் முதல் மாநாட்டில்  கூறினார்:  “கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்கீழும் நமது  மாபெரும் தலைவரும் ஆசானுமாகிய தோழர்  ஸ்டாலினின் மேதமைமிக்க வழிகாட்டுதலின் கீழும் நமது  நாட்டில் சோசலிசம் மாற்றமுடியாதபடியும்  இறுதியாகவும் வெற்றி பெற்றுள்ளது”.  தொழிற்துறையிலும் நாட்டுப்புறத்திலும் உள்ள குறை  வளர்ச்சியை மட்டுமின்றி, அனைத்திற்கும் மேலாக “  பாட்டாளி வர்க்கத்திடம் காணப்படும் பூர்ஷ்வாவர்க்கக்  கருத்துநிலையின் எச்சங்கள், குட்டி பூர்ஷ்வா   சோம்பேறித்தனம், சுற்றித்திரியும் தன்மை, வீணான  நிலை, தனிநபர்வாதம், ஒழுக்கக்கேடான நடத்தை  ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதுதான்  இக்காலகட்டத்தில் கலை எதிர்கொள்ளவேண்டிய சவால்  ஆகும்” என்றும்  கூறினார்.  அதே மாநாட்டில்  உரையாற்றிய கார்ல் ராடெக் (Karl Radek -  ஜெர்மானியரான அவர் அன்று ரஷ்யக் கம்யூனிஸ்ட்  கட்சியிலும் மூன்றாவது அகிலத்திலும் (Communist  International -Comintern)  முக்கிய தலைவராக  இருந்தவர். 1930 களில் நடந்த களையெடுப்புகளுக்குப்  பலியானவர்), பாட்டாளிவர்க்க அல்லது சோசலிச  யதார்த்தவாதம்,சமூக பொருளாதார நிலைமைகளையும்  மக்களின் உளப்பாங்குகளையும் சர்ரியலிசம் போன்ற  ‘முன்னணிக் கலைப் பாணிகளைக்” (avant-garde art  forms) காட்டிலும் மேலும் துல்லியமாகச்  சித்தரிக்கின்றது என்றும் அது சோசலிசத்தின்  எதிர்காலத்துடன், அதாவது அந்த எதிர்காலத்திற்கு  வழிகாட்டுவதில் முன்னுதாரணமாகத் திகழும் சோவியத்  ஒன்றியத்துடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது  என்றும் கூறினார். ‘சோசலிச உணர்வை’ உருவாக்கும்  தொழிலாளர்களான எழுத்தாளர்கள் புரட்சியின்  படைவீரர்களாக மாறி, தனிநபர்வாதத்தை வென்று,  பூர்ஷ்வாக் கருத்துநிலை  கூறும் ‘முழுமுற்றான  சுதந்திரம்’ என்பதைக் கைவிட வேண்டும் என்றும்  கூறினார்.

ராடெக்கின் உரையைக் கேட்கவோ, படிக்கவோ வாய்ப்புப்  பெற்ற வெளிநாட்டு எழுத்தாளர்கள் பலர், சோசலிச  யதார்த்தவாதம் தமக்குத் தேவையற்றது என்றாலும்,  அதனுடைய நோக்கங்களை ஏற்றுக்கொள்வது குட்டி  பூர்ஷ்வா உணர்விலிருந்து விடுபட்டு சோசலிசத்திற்குத்  தம்மை அர்ப்பணித்துக் கொள்ள உதவும் என்று  கருதினர். ஏனெனில் 1917 நவம்பர் புரட்சி, உலகின்  முதல் சோசலிசப் புரட்சியாக இருந்ததுடன், 1930 களில்  ஸ்டாலின் கட்சியில் ‘களையெடுப்பை’த் தொடங்கும்  வரை உலகளாவிய புரட்சிக்கான நம்பிக்கைகளைத்  தந்துகொண்டுமிருந்தது. ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்  கிய நாடுகளில் ·பாசிசம் வளர வளர, நெரூடா போன்ற  கவிஞர்கள் சோவியத் யூனியனின் தீவிர தரவாளர்களாக  மாறினர். இரன்டாம் உலகப் போரின்போது சோவியத்  யூனியனுக்கான பிரச்சாரக் கவிதைகளையும் நெரூடா  எழுதினார்.

மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும்  எற்றுக்கொண்டிருந்த கலைஞர்களில் சோசலிச  யதார்த்தவாதத்தைக் கடுமையாக விமர்சித்தவர்களும்  இருந்தனர். அதற்கு மாற்றாக அவர்கள் சர்ரியலிசத்தை  உயர்த்துப் பிடித்தனர். அவர்களில் முதன்மையானவர்  ·பிரெஞ்சுக் கவிஞர் ன்ரே பிரித்தோன் (Andre Britton).   அவரும் லூயி அரகோன் (Louis Aragon), போல்  எலுவர்ட் (Paul Eluard)  ஆகிய இரு கவிஞர்களும் அன்று   ·பிரான்சின் இடதுசாரி சர்ரியலிசத்தின் மும்மூர்த்திகளாக  விளங்கினர். சோசலிச யதார்த்தவாதத்தை  எற்றுக்கொள்வது உலகின் முதல் சோசலிச நாடான  சோவியத் யூனியனையும் ஸ்டாலினின்  தலைமையையும் ஆதரிப்பதாகும் என்றும் பிரான்சில்  அன்று மேலோங்கியிருந்த கலை-இலக்கியக்  கோட்பாடுகளைக் கொண்டு சோவியத் யூனியலிருந்த  யதார்த்த நிலைமைகளை மதிப்பீடு செய்ய முடியாது  என்றும் கருதிய லூயி அரகோனும் போல் எலுவர்டும்  அன்ரே பிரித்தோனிடம் முறிவை ஏற்படுத்திக்  கொண்டனர். சோசலிச யதார்த்தவாதத்தை  ஏற்றுக்கொள்வது, சோவியத் யூனியனில் உருவாகியுள்ள  ஸ்டாலினிச அதிகாரிவர்க்க ட்சியை ஏற்றுக்  கொள்வதாகும் என்று கூறினார் பிரித்தோன். சோவியத்  யூனியனிலும் முதலாளிய நாடுகளிலுமுள்ள இடதுசாரி  எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடுவதற்கான  வாய்ப்புகளை முதலாளியப் பத்திரிகைகளோ வெளியீட்டு  நிறுவனங்களோ தருவதில்லையாதலால் அவர்கள்  சோவியத் அதிகாரிவர்க்கத்திடம்  சரணடைகிறார்கள்  என்றும் அதன் பொருட்டு அவர்கள் தமது கலைச்  சுதந்திரத்தைத் தியாகம் செய்துவிடுகின்றனர் என்றும்  கூறிய பிரித்தோன் 1934-இல் மெக்சிகோ சென்று அங்கு  அரசியல் தஞ்சம் புகுந்திருந்த த்ரோத்ஸ்கியைச்  சந்தித்தார். இருவரும் இணந்து எழுதிய 'சர்ரியலிச  அறிக்கை' , சர்ரியலிச அழகியல் கலைஞர்களுக்கு  வழங்கும் முழுமையான சுதந்திரம், கம்யூனிசப்  புரட்சியால் உத்திரவாதம் செய்யப்படும் தனிமனித  வளர்ச்சி, தனிமனித சுதந்திரம் கியவற்றை ஒத்ததுதான்  என்று கூறியது. த்ரோத்ஸ்கியும் பிரித்தோனும் அரசியல்  அற்ற தூய கலை என்பதை நிராகரித்தனர். எனினும்  அவர்களது அறிக்கை சோசலிசத்தின் எதிரி  முதலாளியம்தான் என்று பொதுவாகப் பேசினாலும்  சோவியத் யூனியனைப் பொறுத்தவரை அங்கு  சோசலிசத்தின் எதிரியாக இருப்பவர்கள் ஸ்டாலினிச  அதிகாரிவர்க்கத்தினர்தான் என்று கூறியது. இந்த  நிலைப்பாட்டை மெக்சிக எழுத்தாளர் ஒக்டோவியோ  பாஸ் முழுமையாக எற்றுக்கொண்டார்.  ஆனால் பாப்லோ  நெரூடா ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவர் லூயி  அரகோன், போல் எலுவர்ட்  ஆகியோரின் நெருக்கமான  நண்பராக மாறினார். இவர்கள் மூவருமே கம்யூனிஸ்ட்  கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். பிரெஞ்சுக்  கம்யூனிஸ்ட் கட்சி, அரகோனுக்கு முழுமையான கலைச்  சுதந்திரத்தைக் கொடுத்திருந்ததைப் போலவே சிலி  நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் நெரூடாவின் கலைப்  பாணியை முழுமையாக ஊக்குவித்து வந்ததது. அக் கட்சி  பலசமயங்களில் மூன்றாவது அகிலத்திற்கு வெளியே  இருந்தததும் அகிலத்தின் கொள்கைகள் சிலவற்றை  எதிர்த்து வந்ததும் ஒரு வகையில் நெரூடாவின் கலைச்  சுதந்திரம் இடையூறின்றி நீடித்துவந்ததற்கும்  சோசலிச  யதார்த்தவாதத்திற்குக் கட்டுப்படாமல்  அவர் தப்பித்து  வந்ததற்கும்  ஒரு முக்கிய காரணமாகும். சோசலிச  யதார்த்தவாதத்தை வெளிப்படையாக தரித்த லூயி  அரகோனும் போல் எலுவர்டும்கூட, நெரூடாவைப்  போலவே சர்ரியலிச பாணியை முழுமையாகக்  கைவிடவில்லை. தன்விருப்பநிலையிலிருந்து,  புறத்தூண்டுதலற்ற, இயல்பான, அகத் தூண்டுதலிலான  படைப்பியக்கத்திற்கு சர்ரியலிசம் தந்து வந்த  முக்கியத்துவம் மேற்சொன்ன மூவரின்  கவிதையாக்கங்களில் கடைசிவரை பயணம் செய்தன.

நெரூடா எத்தகைய கவிதைக் கோட்பாட்டைத் தெரிவு  செய்துகொண்டார் என்பதைக் குறிப்பால் உணர்த்துபவை  அவர் தனது நண்பர் போல் எலுவர்ட் பற்றிக் கூறிய  கருத்துகளாகும்: “ அறிவுக்குப் புரியாத சர்ரியலிசத்தில்  அவர் (எலுவர்ட்) தன்னை இழந்துவிடவில்லை. ஏனெனில்  அவர் மற்றொன்றப்   போலிசெய்பவரல்லர். மாறாக,  அவர் ஒரு கர்த்தா. அதனால்தான் அவர் தெளிவான  சிந்தனை, கூர்மதி என்கிற துப்பாக்கிக் குண்டுகளை  சர்ரியலிசம் என்கிற பிணத்தின்மீது செலுத்துகிறார்.”  சோசலிச யதார்த்தவாதக் கோட்பாட்டை நெரூடா இங்கு  தரிப்பதுபோல் தோன்றினாலும் இயற்பண்புவாதம்  போன்ற ழமற்ற, எளிமைப்படுத்தப்பட்ட யதார்த்தவாதம்,  சோசலிச யதார்த்தவாதம் கிய இரண்டையும் அவர்  ஒருபோதும் எற்றுக்கொள்ளவில்லை. இரண்டுமே  மனிதர்களின் உணர்ச்சிகள், சமூக யதார்த்தம் கியன  குறித்த இறுக்கமான, தேங்கிப்போன பார்வையைக்  கொண்டிருப்பதாகக் கருதினார்.

நெரூடா ஒரே சமயத்தில் சோவியத் யூனியனின்  ஆதரவாளராகவும் சோசலிச யதார்த்தவாதத்தை  எற்றுக்கொள்ளாதவராகவும் இருந்தார்:

ஒருபுறம் புதிய வடிவங்கள், ஏற்கனவே இருக்கின்ற  அனைத்தையும் புதுப்பிக்கும் தேவை ஆகியன இலக்கிய  முன்மாதிரிகளாக இருப்பனவற்றை உடைத்துவிட்டு  அவற்றைக் கடந்துவர வேண்டும். மற்றொரு புறமோ,  ஒரு ஆழமான, பரந்துவிரிகின்ற புரட்சி எடுத்துவைக்கும்  அடிகளைப் பின்தொடராமல் எப்படி இருக்க முடியும்?  முக்கியப் பிரச்சனைகள், வெற்றிகள், மோதல்கள்,   மானுடப் பிரச்சனைகள், வளர்ச்சி, இயக்கம், சமூக,  பொருளாதார, அரசியல் துறைகளில் ஒரு தீவிரமான  மாற்றத்தை எதிர்கொண்டுள்ள ஒரு மகத்தான மக்களின்  உதயம் கியவற்றிலிருந்து நம்மால் அப்படி விலகியிருக்க  முடியும்? மூர்க்கத்தனமான் படையெடுப்புகளின்  தாக்குதல்களுக்கும் எளிதில் மசியவைக்கமுடியாத  காலனியாதிக்கவாதிகள், பல்வேறு சூழல்களையும்  பின்னணிகளையும் சேர்ந்த இருண்மைவாதிகள்  கியோரின் முற்றுகைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள இந்த  மக்களுக்குத் தன்னை அரிப்பணித்துக் கொள்ளாமல்  யாரால் இருக்கமுடியும்? இந்த அடிப்படையான  விஷயங்களை அறிந்திருந்தும் இலக்கியமோ அல்லது  கலையோ இவற்றால் பாதிக்கப்படாமல் சுதந்திரமாக  இருப்பதாக பாவனை செய்ய முடியுமா?

இங்கு நெரூடா சோசலிச அரசியல் ஈடுபாடு, கலைச்  சுதந்திரம் கிய இரண்டையும் இணைக்க முயற்சி  செய்கிறார். இதில் பெர்டொல்ட் ப்ரெஹ்ட்டின்  நிலைப்பாட்டிற்கு மிக நெருக்கமாக வருகிறார் என்று  கூறலாம். யதார்த்தவாதத்தை நிராகரிக்காமல்,  அதற்குள்ளேயே புதுமைகள் செய்ய விரும்பிய ப்ரெஹ்ட்  கூறினார்: “ புதிய பிரச்சனைகள் தோன்றுகின்றன. அவை  புதிய முறைகளைக் கோருகின்றன. யதார்த்தம்  மாற்றமடைகிறது.அதைச் சித்தரிக்க வேண்டுமானால்  சித்தரிப்பு முறைகளும் மாற வேண்டும்”. சோவியத்  யூனியனில் சோசலிச யதார்த்தவாதம் ‘அதிகாரிவர்க்க  யதார்த்தவாதமாக’ சீரழந்துவந்த போக்கு இருந்ததை  ஒப்புக்கொள்ளும் நெரூடா அப் போக்கைத் தடுத்து  நிறுத்தும் முயற்சிகளும் அங்கு  மேற்கொள்ளப்பட்டுவந்ததாகவும் கூறுகிறார்:

கலைகளில் சோவியத் வறட்டுவாதம்  (  dogmatism)நீண்ட காலம் நிலவி வந்தது என்பதை  மறுக்க முடியாது. ஆனால் இந்த வறட்டுவாதம் ஒரு  குறைபாடு என்றே எப்போதும் கருதப்பட்டுவந்ததுடன்  அதனுடன் நேருக்கு நேரான சண்டையும்  நடத்தப்பட்டுவந்தது. தனிமனித வழிபாடும், திறமைமிக்க  பிரச்சாரகரான ஸ்தானோவின் விமர்சனக் கட்டுரைகளும்  சேர்ந்து சோவியத் பண்பாட்டு வளர்ச்சி பாரதூரமான  முறையில் இறுகிப் போவதற்குக் காரணமாக இருந்தன.  ஆனால் இதற்கு நாடெங்கிலுமிருந்து எதிர்வினைகள்  தோன்றிக்கொண்டிருந்தன. வாழ்க்கை என்பது, அதைப்  பற்றிய நீதிக்கட்டளைகளைவிட வலுவானது,  பிடிவாதமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  புரட்சிதான் வாழ்க்கை. நீதிக்கட்டளைகளோ தமக்கான  சவப்பெட்டிகளைத் தேடிக்கொண்டிருந்தன.


அவரது நினைவுக்குறிப்புகளில் யதார்த்தவாதம்,  சர்ரிரியலிசம், சோசலிச யதார்த்தவாதம் ஆகிய மூன்றைப்  பற்றியும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு  கருத்துகளை அவர் கூறுவதைக் காண முடிகிறது.  ஒருபுறம், இவை மூன்றுமே தன் மீது தாக்கம்  எற்படுத்தியதாகக் கூறுகிறார். மற்றோர் புறம், அவை     ‘ à®‡à®¯à®™à¯à®•à¯à®µà®¿à®šà¯ˆà®¯à®±à¯à®± இலக்கிய முன்மாதிரிகள்’ என்கிறார்.  கவிதைகளின் ‘இசம்’ பற்றி எழுதுகிறார்:

...கவிதை மிகை யதார்த்தத்தன்மையையோ குறை  யதார்த்தத்தன்மையையோ கொண்டிருக்க  வேண்டியதில்லை. அது யதார்த்தவாதத்திற்கு எதிரான  தன்மையுடையதாகவும் இருக்கலாம். நான் ஒரு  புத்தகத்தை, கவிதைப் படைப்பின் அடர்த்தியை,  இலக்கியக் காடுகளை ரசிக்கிறேன். எல்லாவற்றையுமே  ரசிக்கிறேன்_புத்தகங்களின் முதுகுகளைக்கூட. ஆனால்  அவை அந்தந்த சிந்தனைப்போக்குகள் என அடையாள  முத்திரைகளிடப்படுவதை நான் ரசிப்பதில்லை. எந்த  சிந்தனைப் போக்குகளையும் வகைப்பாடுகளையும் சாராத  புத்தகங்கள், வாழ்க்கையைப் போலவே இருக்கின்ற  புத்தகங்கள் எனக்கு வேண்டும்.

1971 இல் அவருக்கு  இலக்கியத்திற்கான நோபல் பரிசு  வழங்கப்பட்டபோது, தனது ஏற்புரையில் கூறினார்:       “ à®•à®µà®¿à®¤à¯ˆ எழுதுவதற்கான குறிப்புகள் எதனையும்  புத்தகங்களிலிருந்து நான் கற்றுக்கொள்ளவில்லை.  அதேபோல நானும் எனது பங்கிற்கு, கவிதை  எழுதுமுறை அல்லது பாணி குறித்து உள்ளொளி எனக்  கூறப்படுமொன்றின் ஒரு சொட்டைக்கூடத் தரக்கூடிய  அறிவுரை எதனையும் தருவதைத் தவிர்க்கிறேன்”

மேற்சொன்னவற்றிலிருந்து, நெரூடா தனக்கென்று  கவிதைக் கோட்பாடு எதனையும் உருவாக்கிக்  கொள்ளவில்லை என்கிற முடிவுக்கு நம்மால் வர  முடியுமா? இல்லை. அப்படி அவர் இருந்திருந்தால், மனித  குல வரலாற்றில் மாபெரும் கவிஞர்களிலொருவராகக்  கருதப்படுவதற்குக் காரணமாக அமைந்த ‘ காண்டோ  ஜெனெரல்’  காவியத்தை அவரால் படைத்திருக்க  முடியாது. குறைந்தபட்சம் இந்தக் காவியத்திற்கேனும்  பொருந்துகின்ற ஒரு கலைக் கோட்பாட்டை அவர்  பின்பற்றத்தான் செய்தார். கலைச் சுதந்திரம்,  வரலாற்றுணர்வு ஆகிய இரண்டையும் இணைக்கின்ற ஒரு  கோட்பாடுதான் அது: ‘ வழிகாட்டப்படும் இயல்புவாதம்’  (guided spontenity). சட்டென்று, எதிர்பாராத நேரத்தில்  மின்னலைப்போல் தோன்றி மறையும் கற்பனைக்  கீற்றுகள்_ தன்னியல்பாய் பீறிட்டுக் கிளம்பும்  கற்பனையாற்றல் ;  இதனை  உணர்வுபூர்வமான  வரலாற்றுணர்வு, சோசலிசப் பார்வை, பாட்டாளிவர்க்க  நிலைப்பாடு ஆகியவற்றைக்கொண்ட ஒருங்கமைந்த  கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் கொண்டுவருதல். இந்த  இரு அம்சங்களின், எதிர்மறைகளின் இயங்கியல்ரீதியான  ஒற்றுமையே, இணைப்பே அவரது கவிதைக் கோட்பாடு.  இக் கோட்பாட்டின் வழியாகத்தான் உழைக்கும்  மக்களுக்கு சேவை புரியும் ‘சொல் தொழிலாளி’ ( Word  Proletarian)  என்று தன்னை அவர்  அழைத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரை  இத்தகைய கலைக் கோட்பாட்டுக்கு முன்னோடியாக  இருப்பவை மயகோவ்ஸ்கியின் கவிதைப் பாணியாகும்:

செரிமானம் செய்யப்பட்டு சிந்தனைக்கான உணவின்  பகுதியாக மாறாத உள்ளடக்கப் புதுமையெல்லாம்,  சிந்தனைக்கான புறத்தூண்டுதல் மட்டுமேயாகும்.  போராட்டம் பற்றிய கடினமான பிரச்சனைகளும்,  கட்சிக்கூட்டங்கள் போன்ற சலிப்பூட்டும் விஷயங்களும்  மயகோவ்ஸ்கியின் கவிதையில் சுற்றியோடுகின்றன.  இந்த விவகாரங்கள் அவரது கவித்துவச் சொல்லில்  மலராய் மலர்கின்றன. அவை வியக்கவைக்கும்  யுதங்களாக, சிவப்பு பாப்பி மலர்களாக மாறுகின்றன.

தென்னமெரிக்க நாடான பெருவில் ஆண்டெஸ் மலைத்  தொடர்களில் இன்கா இனப் பேரரசால் கட்டப்பட்ட ‘மச்சு  பிச்சு’ என்ற நகரத்தின் இடிபாடுகளையும்   சிதிலங்களையும் பற்றிய நெரூடாவின் நெடுங்கவிதை  ‘வழிகாட்டப்படும் இயல்புவாதத்’திற்கு ஒரு அற்புதமான  எடுத்துக்காட்டு.  அக் கட்டிடங்களை எழுப்பிய அடிமைத்  தொழிலாளிகள் மீது கவிஞர் காட்டும் ஆழமான  சகோதரத்துவ உணர்வு, ஒரு  மார்க்சியவாதி  நவீனப்  பாட்டாளிவர்க்கத்திடம் கொள்ளும் தோழமை உணர்வை  ஒத்ததாகும். மச்சு பிச்சு நெடுங்கவிதையின் கடைசிப்  பகுதியில் வரலாற்றால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட  இன்கா இன உழைப்பாளிகளுக்குத் தனது குரலை,  சொற்களை, உதடுகளை வழங்குகிறார்:


'என்னோடு சேர்ந்து பிறக்க எழுந்து வா, என் சகோதரனே
பரவலாக விதைக்கப்பட்ட உன் துக்கத்தின்  அடியாழங்களிலிருந்து
உன் கையை எனக்குக் கொடு
பாறைகளின் ழங்களிலிருந்து நீ திரும்பிவரப்  போவதில்லை
புதையுண்ட காலத்திலிருந்து நீ திரும்பிவரப்  போவதில்லை
உணர்ச்சியற்றுப்போன உனது குரல்
திரும்பிவரப் போவதில்லை
துளைக்கப்பட்ட உனது கண்கள் திரும்பிவரப்  போவதில்லை
பூமியின் ழங்களிலிருந்து என்னைப் பார்:
தொழிலாளியே, நெசவாளியே, அமைதியான ட்டிடையனே
குலச் சின்னங்களைப் பாதுகாப்பவனே
ஒத்துவராத சாரத்தில் நிற்கும் கொத்தனே
ண்டெஸ் மலைகளின் கண்ணீர்க் குடத்தைச் சுமப்பவனே
விரல்கள் நசுக்கப்பட்ட பொற்கொல்லனே
விதையின் மீது நின்று நடுங்கிக் கொண்டிருக்கும்  உழவனே
உனது களிமண்ணோடு களிமண்ணாகிவிட்ட குயவனே
புதைக்கப்பட்ட உனது தொன்மைத் துயரங்கள்  அனைத்தையும்
இந்தப் புதிய வாழ்க்கைக் கோப்பைக்குக் கொண்டு வா

உனது இரத்தத்தையும் தழும்புகளையும் எனக்குக் காட்டு
என்னிடம் சொல்: இங்குதான் நான் தண்டிக்கப்பட்டேன்
நான் தோண்டியெடுத்த இரத்தினக்கல்
ஒளிராமல் இருந்ததற்காக
நான் உழுத பூமி உரிய காலத்தில் தானியத்தைத்  தராததற்காக.
எனக்குச் சுட்டிக் காட்டு: நீ விழுந்த பாறையை
அவர்கள் உன்னை அறைந்த மரத்தை.
தொன்மையான சக்கிமுக்கிக் கற்களை உரசி
எனக்காக ஒளியேற்று
தொன்மையான விளக்குகள். உனது காயங்களில்  நூற்றாண்டுகளாக
ஒட்டிக்கொண்டிருக்கும் சவுக்குகள்
இரத்தக் கறைகளால் பிரகாசிக்கும் கோடரிகள்
செத்துப்போன உனது வாயினூடாக நான் பேச  வந்துள்ளேன்
மெளனமான , கிழிந்துபோன உதடுகள் அனைத்தையும்
பூமியினூடே  இணைக்க வந்துள்ளேன்
ழங்களிலிருந்து இரவு நெடுக என்னிடம் பேசுங்கள்
நாம் இங்கு ஒன்றாக நிலை நிறுத்தப்பட்டிருப்பதுபோல
எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள்
                ஒவ்வொரு சங்கிலியாக
ஒவ்வொரு கண்ணியாக
படிப்படியாக
நீ£ங்கள்  ஒளித்து வைத்திருந்த கத்திகளைக் கூராக்கி
என் மார்பின் மீது என் கையின் மீது வையுங்கள்
மஞ்சள் ந்¢ற மின்னலின் ற்றைப்போல்
புதைக்கப்பட்ட வேங்கைகளின் ற்றைப்போல்
என்னை அழ விடுங்கள், மணிகள், நாட்கள்,
அறிவற்ற யுகங்கள், நட்சத்திற்குரிய நூற்றாண்டுகள்


எனக்குக் கொடுங்கள் மெளனத்தை, தண்ணீரை,  நம்பிக்கையை
எனக்குக் கொடுங்கள் போராட்டத்தை, இரும்பை,  எரிமலைகளை
காந்தக் கற்களைப் போல் உங்கள் உடல்களை
எனது உடலுடன் ஒட்ட வையுங்கள்
வாருங்கள் எனது இரத்த நாளங்களுக்கு எனது வாய்க்கு
பேசுங்கள் எனது சொற்களூடாக எனது இரத்தத்தினூடாக

நெரூடாவின் அரசியல், சோசலிசக் கவிதகளைப்  போலவே வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் மிகச்  சாதாரணப் பொருட்களான புத்தகம், கோப்பை  போண்றவற்றுக்கு அவர் பாடிய எழுச்சிப்பாக்களும்  (Odes) அவரது அழமான மனித நேயத்தையும் மானுட  உழைப்பின் மகத்துவத்தையும் புலப்படுத்துகின்றன.  அவரது காதல் கவிதைகளில் மயங்காதோர் யாரும்  இல்லை.  நகைச்சுவை உணர்ச்சிக்கும் அவருடைய  கவிதைகளில் இடம் இருக்கிறது. அவரது மரணத்திற்குப்  பிறகு வெளியிடப்பட்ட ஒரு கவிதைத்தொகுப்பில் (  Selected Failings, 1974) ‘சிறுநீர் கழிக்கும்  கடவுள்’  (The Great Urinator) என்னும் கவிதை உள்ளது.   தொழிற்சாலைக் கட்டிடங்கள், கல்லறைகள்,  பூந்தோட்டங்கள், தேவாலயங்கள் கியவற்றின்மீது  கடவுளின் மூத்திரம்  விழுந்து அவற்றை அரித்துத்  தின்கிறது. மக்கள் பீதியடைகின்றனர். செய்வதறியாமல்   திணறுகின்றனர்.  யாரிடமும் குடையும் இல்லை. ஆனால்  கடவுளோ வானத்திலிருந்து மெளனமாகச் சிறுநீர்  கழித்துக் கொண்டிருக்கிறார்.
நெரூடா எழுதுகிறார்:

வெளிறிய கபடற்ற கவிஞன் நான்
விடுகதைகளை அவிழ்ப்பதற்கோ
அல்லது விசேடக் குடைகளை வாங்கும்படி  பரிந்துரைக்கவோ
இங்கு நான் வரவில்லை
உங்களை வாழ்த்திவிட்டுச் செல்கிறேன்
யாரும் என்னிடம் கேள்விகேட்காத ஒரு நாட்டிற்கு
மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
திருவாளர் கவிதை அவர்களே.

 


சென்னையிலிருந்து வெளிவரும் ‘மீள் சிறகு’ ஜன-மார்ச்  2005 இதழில் வெளியான  இக் கட்டுரைக்கான  ஆதாரங்கள்:
1.Greg Dawes, Verses Against Darkness: Neruda’s  Poetry and Politics, Pluto Press, London, 2001  (Chapter 3)

2. Ilan Stavans, Pablo Neruda: a Life Consummed by  Poetry and Politics, The Chronicle Review, July 2,  2004

3. Mark Eisner (Ed), The Essential Neruda :Selected  Poems (Translated by Mark Eisner et al), City Lights  Books, San Francisco, USA, 2004 (‘மச்சு பிச்சு’  நெடுங்கவிதையின் கடைசிப்பகுதியின் தமிழாக்கம் இத்  தொகுப்பிலுள்ள ஆங்கில மொழியாக்கத்திலிருந்து  செய்யப்பட்டது)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 10 Dec 2024 22:13
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Tue, 10 Dec 2024 22:13


புதினம்
Tue, 10 Dec 2024 22:13
















     இதுவரை:  26129647 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10570 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com