அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இலக்கிய மோசடிகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யசோதரன்  
Tuesday, 07 June 2005

பல்வேறு வித மோசடிகள் பற்றிய செய்திகள் நம்  அன்றாட வாழ்வில்அடிக்கடி வந்துபோகின்றன. அதற்குச்  சளைத்தவையல்ல என்ற விதமாய் இலக்கிய மோசடிகள்  பற்றியும் காலத்திற்கு காலம் செய்திகள் கசிந்த வண்ணமாகவே இருக்கின்றன.

ஈழத்து இலக்கிய உலகில் மிகுந்த வாதப்பிரதி  வாதங்களை ஏற்படுத்தியவைகளுள் ஒன்று மாப்போசான்-  தி.ஜானகிராமன் விவகாரமாகும். பிரபல பிரஞ்சு  எழுத்தாளரான மாப்போசானின்(Gay De Maupassant)  'ஜுன் அன்ட் பியரி' (pierre and jean) நாவலை  பிரதிபண்ணியே தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்'  நாவல் உருவாக்கப்பட்டது என்ற கருத்து  எம்.ஏ.நுஃமானால் முன்வைக்கப்பட்டது.அதற்கான பல காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார்.ஒரு காலத்தில்  குறிப்பிட்ட சமூக சூழல் ஏற்படுத்தும் மன உணர்வுகள்  அல்லது படைப்பு மனம் இன்னொரு பிரதேசத்தில்  வாழும் படைப்பாளிக்கு அதே சமூகச் சூழல் ஏற்படுத்தும் படைப்பு மனமும் ஒன்றாக இருக்கக்கூடிய  சாத்தியக்கூறுகளையும் அது பற்றிய மேலைத்தேய  இலக்கிய உலகில் நடந்த விவாதங்களையும் முன்வைத்து ஒன்றைப் பார்த்து ஒன்று  பிரதிபண்ணப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு  வரத்தேவையில்லை, ஒவ்வெரு படைப்பாளிக்குமான  தனித்தன்மைகள் அவர்களை வேறுபடுத்திக்  காட்டிக்கொண்டேயிருக்கும் என்று ஏ.ஜே.கனகரட்னா  முன்வைத்தார். பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் ஏ.ஜே.கனகரட்னாவின் சாத்தியக்கூறுகளை  கருத்தளவில் ஒப்புக்கொன்ட எம்.ஏ.நுஃமான் இவ்வாறு  பொருள்படக்கூறினார் ஆயினும் இரு நாவல்களுக்குமிடையே வரும் சம்பவங்கள் பாத்திர  ஒற்றுமைகள் ஏன் சில ஊரையாடல்கள் ஆகியவற்றின் அதிசய ஒற்றுமைகள்  வியப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றவிதமாக முடித்து  வைத்தார். அவ்விரு நாவல்களையும் படித்தவர்கள் ஏம்.ஏ.நுஃமானின் கருத்துடன்  ஒத்துப்போவார்கள் ஏனெனில் இரு நாவல்களிலும் வரும்  அதிசய ஒற்றுமைகள் மலைப்பை ஏற்படுத்தக்  கூடியவையே.

இது தொடர்பாக என் சொந்த அனுபவம் சார்ந்து  இன்னொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. எனது  தொழில் சார்ந்து யாழ் மாவட்டத்திற்கு வேளியே பணிபுரிய நேர்ந்தபொழுது ஒரு பெண்  எழுத்தாளருடன் நட்பு ஏற்பட்டது.அப்போதய 'தினபதி  கவிதா மண்டலத்தில்' எங்கள் இருவரது பெயர்களும் அடிக்கடி இடம்பெற்றதனால் இந்த நட்பு  சாத்தியமாகியது.

ஓருதடவை அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபலமாயிருந்த  ஒரு எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டு தனது  சிறுகதையை அவர் தனது பெயரில் பிரசுரித்து விட்டதாக  மிகுந்த வருத்தத்துடன் கூறினார். அதற்கான சாத்தியப்  பாட்டினை நான் ஐயுற்றதனால் விசயத்தைத்  தெளிவாக்கினார். குறிப்பிட்ட எழுத்தாளருக்கு தன்  சிறுகதையை அனுப்பி அபிப்பிராயம் கேட்டதாயும் அபிப்பிராயத்திற்குப் பதிலாக அவர் பெயரில் அது  பிரசுரிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். நான்  ஏ.ஜே.கனகரட்னாவின் இருவித சூழல்கள்
ஏற்படுத்தும் மன உணர்வுகளின் ஒற்றுமை பற்றிக்  கூறியபோது 'எல்லாம் அப்படியே அச்சொட்டாகவா?' என  மிகவும் மனம்நொந்து கூறினார். இவர் கூறிய எல்லாம்  அச்சொட்டாகவா என்பதுவும் எம்.ஏ.நுஃமானின் அதிசய ஒற்றுமையும் சாராம்சத்தில் வேறுபடுபனவல்ல.

தமிழ்நாட்டிலும் ரமேஸ்,பிரேம்,சாரு நிவேதிதா ஆகியோர்  பெயர்கள் இந்த விவாதம் சம்பந்தமாகப் பேசப்பட்டன. புலம்பெயர் நாட்டிலும் இலக்கியத் தளத்தில் இவ்வாறான  செயற்பாடுகள் பற்றிய செய்திகள்  வெளிவரத்தெடங்கியுள்ளன. ஈழத்தில் வெளிவந்த பெண் எழுத்தாளரது சிறுகதையொன்று புலம்பெயர்ந்து  வாழும் எழுத்தாளரது à®ªà¯†à®¯à®°à®¿à®²à¯ தமிழகத்துப்  பத்திரிகையொன்றில் வெளிவந்ததாக ஒரு செய்தி. இவ்வாறே இறந்தவர் ஒருவரது பிரதியை  கையகப்படுத்திக் கொண்டவர் அவற்றையும் சேர்த்து  தனது பெயரில் வெளியிட்டதாக இன்னொரு செய்தி.  இச்செய்தி சோவியத் யூனியனில் நடந்த ஒரு  சம்பவத்தை நினைவூட்டுகின்றது.

சோவியத் இலக்கியம் பற்றி அறிந்தவர்கள் மிக்கேல் சொலக்கோவை (MIKHAIL SHOLOKHOV)  யும் அவரது 'டொன் நதி அமைதியாக வழிகிறது' (AND  QUIET FLOWS THE DON) என்ற நாவலையும்  இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். மார்க்சிம் கோர்க்கி போன்று பல்வித தொழில் அனுபங்கள் வாய்க்கப்  பெற்றவர்தான் இவரும். இவர் தனது 23வது வயதில்  பின்னாளில் உலகப் புகழ் பெற்ற 'டொன் நதி அமைதியாக வழிகிறது' என்ற நாவலின் முதல்  பாகத்தை வெளியிட்டார். இது அப்போதய இரசியாவில்  19ம் நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த  நாவல்களுடன் குறிப்பாக ரோல்ஸ்ராயின் (Tolstoy) யின்  'போரும் சமாதானமும்' நாவலுடன் ஒப்பிட்டுப்  பேசப்பட்டது. டொன் நதியோரம் வாழந்த கொசாக்கிய  (COSSACK) இன மக்களின் வாழ்வின் அவலங்களை,  கொடுரமான வன்முறை பற்றிய துல்லியமான  விபரிப்பைக் கொண்ட இந்நாவல் இவ்விளவயதில்  இவ்வாறான வீச்சுடன் எழுதப்பட்டது பற்றி அப்போது எல்லோருமே வியந்து  கொண்டனர்.உடனடியாகவே பல மில்லியன் பிரதிகள்  விற்பனையாகிவிட்டன.அதன் இறுதியும் நாலாவது  பாகமும் 14வருடத்தின் பின்னர் வெளியாயின.

ஆயினும் ஒரு வதந்தி அப்போதய மொஸ்கோ இலக்கிய  வட்டத்துள் உலவிக் கொண்டிருந்தது.அது மிக்கேல்  சொலக்கோவ் டொன் நதி நாவலின் உண்மையான  ஆசிரியர் அல்ல என்பதுதான் அது. சொலக்கோவால் ஒரு  கையெழுத்துப் பிரதி அல்லது டயறி கண்டுபிடிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அந்த நாவல் எழுதப்பட்டதாகக்  கிசுகிசுக்கப்பட்டது. எல்லாக் கிசுகிசுப்புக்களைப் போலவே  இதுவும் அதிகாரத்தின் உச்சத்தில் உள்ளவர்களுக்கு  எட்டியது. 1929ல் 'பிராவ்டா' பத்திரிகை அனேக
பாட்டாளி வர்க்க எழுத்தாளர்களது அபிப்பிராயங்கள்  கொண்ட ஒரு கடிதத்தைப் பிரசுரித்தது. அது  இவ்வகையான அவதூறுகளைக் கண்டித்ததோடு  அவற்றிற்கு எதிரான விசாரனைகளையும்  எதிர்கொள்ளவேண்டும் என்ற மறைமுக  எச்சரிக்கையையும் வெளியிட்டது. அப்போதய ஆட்சியில் விசாரணைக்கு இறுதியான ஒரு முடிவுதான் இருப்பதை  எல்லோரும் அறிந்திருந்தபடியால் எல்லோரும்  தொண்டைக்குள் இருந்ததை அப்படியே விழுங்கி  விட்டார்கள இந் நாவலுக்கு 1965ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு  வழங்கப்பட்டது. இதற்கு முன்இவர் இரசியாவில் 1940ல்  இலக்கியத்திற்கான அரசின் பரிசையும் மூன்றுமுறை  லெனின் பரிசையும் பெற்றுக்கொன்டவராவார்.

'முதல் வட்டம்' (THE FIRST CIRCLE),'கான்சர்  வாட்'(CANCER WARD) ஆகிய தனது புகழ் பெற்ற  நாவல்கள் மூலம் பஸ்டர்நாக் (BORIS PASTERNAK)  கின் 'டொக்ரர் சிவாகோ' (DOCTOR ZHIVACO) விற்குப்  பிறகு ஒரு பெரும் புயலையே உருவாக்கியவரும்  1970ல் இலக்கியத்திற்கான நோபல்பரிசைப்   பெற்றவருமான அலெக்சான்டர் சொல்செனிஸ்ரன்  (ALEXANER  SOLZHENITSYN)  'தனது குலாக் தீவுக்  கூட்டங்களுக்குப்' (THE GULAG  ARCHIPELAGO) பிறகு குடியுரிமை பறிக்கப்பட்டு நாடீடைவிட்டு  வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டார். 1974ல் சூரிச் வந்த  இவர் தன்னோடு சொலக்கோவ் படைப்புப் பற்றிய மிகக்  கூர்மையான ஆய்வுகள் கொன்ட தன் நன்பர் ஒருவரின்  ஆவணங்களையும் கொண்டு வந்தார். 'D'என்ற குறியீட்டுப் பெயர்கொண்ட அந்த நண்பர் தனது  ஆய்வுகளை முடிக்குமுன் இறந்துவிட்டதாகக்  குறிப்பிடுகிறார். மேலைத்தேச ஆய்வாளர்கள் தன்
நண்பனின் ஆய்வை முடிக்கும் முகமாக அவற்றை  வெளியிட்டார்.

ஆய்வாளர்களின் முடிவின்படி 'டொன் நதி அமைதியாக  வழிகிறது' என்ற நாவல் இரு ஆசிரியர்களால் எழுதப்பட்டு  இருப்பதாக வெளிக்கொணரப்பட்டது
. அதன்  முதலிருபாகங்களின் 95 வீதமானவை ஒரு  ஆசிரியராலும், பின் இரு பாகங்களின் 70 வீதமானவை  வேறெரு ஆசிரியராலும் எழுதப்பட்டவையாகச்  சொல்லப்பட்டது.
சொல்சனிஸ்ரனின் தகவல்களின்படி முதலிரு  பாகங்களின் ஆசிரியர் பியோதர் டிமிறிவிச் கிரையுகோவ்  ((FYODOR  DMITRIEVICH  KRYUKOV) ஆவார்.  1870ல் பிறந்த இவர் ஒரு கிராமத்துத் தலைவனது  மகனும், பாராளுமன்ற பிரதிநிதியுமாவார். கோசாக்கிய  மக்களின் வாழ்வினை துல்லியமாகப் பதிவதில் மிகவும்  பிரபலம் பெற்றவர். கோசாக்கியரான இவர் 1917  புரட்சியை எதிர்த்து இராணுவம் சார்பாகப் போரிட்டவர்.

தனது 50வது வயதில் ரைபோய்ட் ஆல் இறக்க  நேரிட்டது.  இவரது படைப்புக்கள் எதுவும் சோவியத்  இரசியாவில் மறு பதிப்புச் செய்யப்படவில்லை. இவரது  படைப்புக்களுடன் டொன் நதி நாவல் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டு இவரே அதன் உண்மையான ஆசிரியர்  என்பது நிருபிக்கப்பட்டது. முதலிரு பாகங்களும் புரட்சிக்கு முந்திய டொன்  சமூகத்தைப் பற்றிய நெஞ்சுக்கு நெருக்கமான  உணர்வுகளைக் கொண்டிருப்பதாகவும், வரட்சித் தன்மை கொண்ட பின்னிரு பாகங்களுமே  சொலக்கோவினால் எழுதப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆயினும் அதிகாரபூர்வமான சோவியத் இலக்கிய பீடம்  இந்த விவகாரங்களைக் கண்டுகொள்ளவேயில்லை.  டொன் நதி நாவலிற்குப்பின் சொலக்கோவ் சோவியத்  இலக்கியச் செயற்பாட்டின் உத்தியோகபூர்வமான பேச்சாளராயிருந்தார். அவர் வாழ்வு முறையே மேல்தட்டு  வர்க்கத்தினரின் வாழ்வு முறைக்கு நிகராக மாற்றம்  பெற்றது. டொன் மாகாணத்தில் மிகப் பெரிய மாளிகையினையும் தனக்கான தனித்த  தியேட்டரையும்  தனி விமானத்தினையும்  வைத்திருந்தார். இது தவிர சொல்சனிஸ்ரன் பற்றிய
சோவியத் கண்னோட்டமே இந்த விசயம் அதிக  முக்கியத்துவம் பெறாமைக்குக் காரணமாகும். ஆயினும்  சோவியத் அரசு உண்மை எதுவாயினும் அதற்குரிய  முழு ஆதாரங்களும் முன்வைக்கப்பட வேண்டும் அவை இலக்கியத்தின் மேதைகளாலும் விற்பன்னர்களாலும்  பரிசீலிக்கப்பட்டு அவர்கள்தான் அதனைத் தீர்மானிக்க  வேண்டுமென்று கருதியது. விசயம் என்னவென்றால்  அன்றைய அரசியல் சூழலில் எதன் சார்பான  மேதைகளும் விற்பன்னர்களும் என்பதுதான்

'டொன் நதி அமைதியாக வழிகிறது' பற்றிய தகவல்கள்:
                        
 â€˜WORLD FAMOUS SCANDALS’
COLIN WILSON WITH DAMON AND ROWAN  WILSON
   

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


     இதுவரை:  24783148 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5792 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com