அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow "அசொமுவார்" (Assomoire) Emile Zola.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


"அசொமுவார்" (Assomoire) Emile Zola.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசுதேவன்  
Saturday, 09 July 2005

நாவற் சுருக்கம்: "அசொமுவார்" (Assomoire) Emile Zola. 

பாரிஸின் பதினெட்டாவது வட்டாரத்திலுள்ள 'தங்கத்துளி' குறிச்சியில் தனது கணவன் ஒகுயிஸ்த் லோந்தியே உடனும், தமது இரு மகன்மாருடனும் வாழந்து வருகிறாள் துணி வெளுப்புத் தொழிலாளியான இளம்பெண் ஜேர்வேஸ் மக்கார். தொப்பி தயாரிக்கும் தொழிலாளியான ஒகுயிஸ்த் ஒரு சோம்பேறி என்பது மட்டுமன்றி அவன் தன் மனைவி அறியாமல் வேறு திருட்டு உறவுகளையும் பேணிவருகிறான்.
இறுதியில் அவன் ஜேர்வேஸையும் தன் இரு மகன்களையும் கைவிட்டு விட்டு, அடல் என்னும் இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்துகிறான். துணிதுவைக்குமிடத்தில், அடல் ன் சகோதரி வீர்ஜினி க்கும் ஜேர்வேஸ் க்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு ஜேர்வேஸ{க்கு வெற்றிகிடைக்கிறது.
ஜேர்வேஸ் தனியாக வாழ்க்கை நடாத்துவதைக் கண்ட கொப்போ எனும் ஒரு கூரைத்தொழிலாளி அவளைத் தன்வசப்படுத்த முயற்சி செய்கிறான். தங்கத்துளிக் குறிச்சியிலுள்ள 'அசொமுவார்' எனும் குடிபானக்-களியாட்ட நிலையத்தில்தான் இது நடக்கிறது. இறுதியில், கொப்போவின் விருப்பிற்கிணங்கி, ஜேர்வேஸ், இரு பிள்ளைகள், கொப்போ மூவருமாக கொப்போவின் சகோதரி வசிக்கும் அதே கட்டடத்திலுள்ள வீடொன்றிற்குக் குடிபோகின்றனர். பேராசையும், சுயநலமும் கொண்ட அவளின் கணவன் ஒரு பேரவாக் கொண்ட சுயதொழிற்காரன்.
சிறிது காலத்தில் கொப்போவும், ஜேர்வேஸ{ம் சட்டரீதியாகவும், மதரீதியாகவும் திருமணம் செய்து கொள்கின்றனர். கடின உழைப்பு, சிக்கனம் போன்றவற்றால் குடும்பம் செல்வம் அடைந்து இன்பவாழ்க்கை தொடர்கிறது. இருவருக்கும் நாநா எனும் பெண் குழந்தையும் பிறக்கிறது. அயலிலுள்ள, தாயின் வீட்டில் வாழும் கூஜே எனும் கொற்தொழிலாளருக்கும் ஜேர்வேஸ{க்கும் இடையில் நட்பு உருவாகின்றது.
ஒரு நாள், வேலை செய்து கொண்டிருக்கும் போது கூரையிலிருந்து வீழ்ந்து கொப்போ தனது காலொன்றை உடைத்துக்கொள்கிறான். செலவுகளைச் சமாளிக்கக் குடும்பம் தமது சேமிப்பைச் செலவளிக்க வேண்டியாகிறது. துணிச்சலவைத் தொழிலைச் சொந்தமாக நடத்துவதற்குத் தேவையான பண உதவியை ஜேர்வேஸ{க்கு கடனுதவியாக கூஜே வழங்குகிறான். ஜேர்வேஸின் தொழில் ஓரளவு திறம்பட நடக்கிறது. இரண்டு தொழிலாளர்களும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். வாழ்க்கையைச் சீராகக் கொண்டுசெல்வதற்கு வருமானம் போதுமானபோதும், கூஜே யின் கடனைத் திருப்பி அடைக்குமளவிற்கு வருமானம் போதவில்லை.
தன் பழைய கணவன் லோந்தியே பற்றிய செய்தி, அவனின் காதலியாகிய அடலின் சகோதரி வீர்ஜினியிடமிருந்து ஜேர்வேஸ{க்குக் கிடைக்கிறது. அவளின் கணவன் குப்போ வேலையற்ற நிலையில் தனது நண்பர்களுடன் குடிபான நிலையங்களில் தனது நேரத்தை அதிகமாகக் கழிக்கிறான். இந்நிலையில் ஜேர்வேஸ் தனது வீட்டில் ஒரு பெரும் விருந்துசாரத்தை நண்பர்களுக்கு ஒழுங்கு செய்கிறாள். இவ்விழாவின் போது வருகை தந்த லோந்தியே தனது முன்னைய மனைவியின் குடும்பத்துடன் மீண்டும் நட்புக்கொள்கிறான்.
குப்போ மேலும் மேலும் சோம்பேறியாகிக் கொண்டு போக , லோந்தியே மீண்டும் தனது முன்னைய மனைவியை வசீகரம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றான். சலிப்படைந்த இப்பெண் ஜேர்வேஸ{ம் தனது வேலையில் அக்கறையை இழந்து கொண்டு செல்கிறாள்.தொழிலில் பணத்தையும் இழந்து, மரியாதையும் இழந்த நிலையில் குப்போவும் மனைவியும் வீடுமாற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அவர்களின் மகள் நாநா வளர்ந்து வருகிறாள்.
குப்போவும் அவன் மனைவியும் இறுதியில் மதுவுக்கு அடிமையாகிறார்கள். பூ வியாபாரம் செய்யும் அவர்களின் மகள் நாநா வயது முதிர்ந்த ஒரு பணக்காரனின் இச்சைகளுக்குப் இடங்கொடுத்து தன் வாழ்க்கையைக் கொண்டு செல்கிறாள்.
மேலும் மேலும் மதுவுக்கு அடிமையாகி மனோநிலை பிறழ்ந்து கொப்போ பைத்தியக்காரருக்கான மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட ஜேர்வேஸ் தனித்துப் போகிறாள். அடுத்து வரும் குளிர்காலத்தில் உணவிற்குக் கூட வழியற்ற நிலையில் ஜேர்வேஸ் விபச்சாரம் செய்து பிழைக்க வேண்டியதாயிற்று. தன்னிலை தாழ்ந்து, சமூக நிலை இழந்து அநாதையைப் போன்று மரணித்து ஜேர்வேஸின் தலைவிதி முடிவடைகின்றது.

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 20 Apr 2024 11:53
TamilNet
HASH(0x560ec92ce768)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 20 Apr 2024 11:53


புதினம்
Sat, 20 Apr 2024 11:53
















     இதுவரை:  24785130 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2479 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com