அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இரண்டு கவிதைகள்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ.ஜோய்  
Saturday, 30 July 2005

1.

மௌன பாஷை

அடர் இலை கடந்த
பயண வெளியில்
துயர் நெடி சுமந்த
காற்றை உறிஞ்சி
விரை நடை நடையாய்
போகிறதென் பயணம்...


மொழியில் இருந்து
மொழிக்குத் தாவி
துணைப் பொருளாய்
காகிதம் காவி
வார்த்தைகள் வழித்துத் திரட்டி
கவிழ்த்துப் போட்டேன் கவிதையாய் மலர...


மலர்வின் ஓசை
காதினில் பாய
துயரின் கொடூரம்
கலங்கியே ஓட
புலர்வின் மடியில்
வார்த்தைகள் இன்றி
காத்துக் கிடந்தேன்
கவிதையாய் சமைய...


கவிதை சமைப்பதும்
கவிதையாய் சமைவதும்
உயிர்த்தீயில் உருகும்
மௌன பாஷைகளே
இங்கு வார்த்தைகளும் ஓசைகளும்
செல்லாத காசுகளாய்...

28-07-2005


2.

நகைச்சுவை

வா
அருகில் அமர்
புன்னகை செய்
புதைகுழி தோண்டு
தோண்டிய குழியில்
துளைகள் இடு
துளைகளின் இடுக்கில்
என் கரங்களை மாட்டு
மாட்டிய கரத்தில்
உன் கால்களை பதி
பதிந்த காலால்
புது வரலாறெழுது
எமக்கு விடுதலை அளித்ததாய்

26-07-2005

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  24716776 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4131 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com