அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 25 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 19 arrow கொம்படிப் பாதைகள்.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கொம்படிப் பாதைகள்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்.  
Monday, 01 August 2005

உதடுகளால் உடல்களை மூட்டிக்
குளிர்காயும் மனிதர்களின் நடுவில்
வெடித்துப்போன உதடுகளோடு
பாண் துண்டுகளைப்
புசித்துக் கொண்டிருக்கும் என்னிடம்
சிகரெட் கேட்பவளே!

காலத்தின் வாயில்
நானே புகைந்து கொண்டிருப்பதை
காணாயோ?

நேற்றென் தேசத்தில்
வைக்கோல் சுற்றிப் பயணித்த
ஈருளிச் சக்கரத்திலும்
விரைவு குன்றிப் போனது
வாழ்வின் நகர்வு.

இங்கே ஓடும் படிகளிலும்
பல கொம்படிப் பாதைகளைக்
கடந்து போகிறேன்.
காவியுடுத்தி கமண்டலம் வைத்திருந்த
ஞானியொருவனின் வேள்வித்தீ
எனக்குள் அணைந்துபோக முனைகிறது
'புறம்'.

எனக்குள்ளும் பல அரசியல்வாதிகள்கூடி
கவிதை சமைத்துக்கொள்ள முனைகிறார்கள்
இப்போ.

எச்சில் ஏணியில் இறங்கும்
பச்சைப் புழுவொன்றின் பசி
எனக்குள்ளும் இருக்கின்றது.

காலத்தின் வாயில் நான்
புகைந்து கொண்டிருந்தாலும்
நெருப்புள்ள இடத்தில்தானே
புகைவரும்?

நீ கடந்து போ!
சுவிங்கங்களை மென்று
சுரப்பிகளை தூண்டுபவளே
எனக்குள் எரியும் நெருப்பை
எரிக்கும் நெருப்பை
நீ உணராய்..
என்னிடமுள்ள ஆதாம் ஏவாளின்
மொழிக்கும விளக்க நாதியில்லை
நீ கடந்து போ.

(கொம்படிப்பாதை: யாழ்பாணக் குடாநாட்டு மக்கள் ஏ9 பாதை மூடப்பட்டிருந்த காலத்தில் பயணித்த கடினமான பாதை)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 25 Sep 2023 12:11
TamilNet
HASH(0x55f9e8877750)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 25 Sep 2023 11:53


புதினம்
Mon, 25 Sep 2023 12:11
















     இதுவரை:  24044953 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1310 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com