அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நான்..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ.ஜோய்  
Tuesday, 04 October 2005

நான்…

“நான்” இலிருந்து
பிறப்பெடுத்த
நான் பேசுகிறேன் …

ஆதியந்தமற்ற காலத்தை
பணிகளாலும்
பருவங்களாலும்
கட்டிப்போட முயலுகிறேன் …

எல்லையின்றி விரிந்து கிடக்கும்
இயற்கையை
அங்குலங்களாலும்
கோடுகளாலும்
சிறைப்பிடிக்கிறேன் …

பாவ புண்ணிய கருமங்கள்
“நான்” பிறப்பித்த
நானில் தொங்கிக்கொண்டிருக்கிறது …

கடல் எரிந்து
மேகமாகும்,
மேகம் கரைந்து
கடலாகும்
சுயத்தையும் மீறி
பிளவுபடுத்தும் “நான்” இலிருந்து
நீயும் கரைந்து போ …
அழிதலே ஆக்கத்தின்
திறவு கோல் …

“நான்” என்பது
ஒளியா? அல்லது
இருளா?

19-09-2005


     இதுவரை:  24712728 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5657 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com