அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 10 June 2023

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow உயிர்வாசம் - நூல் வெளியீடு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உயிர்வாசம் - நூல் வெளியீடு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அப்பால் தமிழ்  
Thursday, 13 October 2005

சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் இளஞ்சூரியன் படைப்பாளிகள் அகம் ஆதரவில் தியாகி அப்துல் ரவூப் அரங்கில் 09.10.05 ஞாயிற்றுக்கிழமை மாலை முல்கைம் முத்துக்குமாரசுவாமி ஆலய மண்டபத்தில் "தியாகி அப்துல் ரவூப்" அரங்கில் ஊடகவியலாளர் சாந்தி ரமேஷ் வவுனியனின் உயிர்வாசம் கவிநூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து மங்கலச்சுடரினை திரு.கே.எஸ். சொர்ணலிங்கமும், திரு.ரமேஷ் வவுனியனும், நினைவுச்சுடரினை திரு.திருமதி.முருகதாசன் அவர்களும் ஏற்றி நிகழ்வை மரபுரீதியாக ஆரம்பித்து வைத்தார்கள். நிகழ்ச்சித் தொகுப்பினை இளஞ்சூரியன் படைப்பாளிகள் அகத்தின் மாணவிகளான மயூரி சந்திரபாலன் , சோபனா நடராஜா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.



முதலில் மாவீரர் வாழ்த்துப்பண் இசைக்கப்பட்டது. தொடர்ந்து வானதி தேசிங்குராஜாவின் மாணவிகளான சோபிகா, சிறீகரக் குருக்கள், தமிழினி தேசிங்குராஜா ஆகியோரின் மாவீரர் வணக்க நடனம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அனைவரையும் வரவேற்று செல்வி.சர்மிளா சாந்தலிங்கம் அவர்கள் தனது வரவேற்புரையினை நிகழ்த்தினார். அவரையடுத்து நிகழ்விற்குத் தலைமையேற்று திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் தலைமையுரையாறறினார். அவர் குறிப்பிடுகையில்:

"தேசத்துப் பெண்கள் மண்ணையும் , பெண்ணையும் மீட்பதில் ,
போராயுதமாக பேனாவையும் தொட்டார்கள் - புலத்திலும்
பெண்கள் சிந்தனை ஒடுக்கப்படுவதை புறக்கணித்து
பெண்களுக்கான திணிப்புக்களைப் புறந்தள்ளி பிரகாசிக்கின்றனர்

அழுத்தமாகட்டும் அச்சுறுத்தலாகட்டும் அவதிகளாகட்டும்
அவமானம் கூட அனைத்தையும் தருவது ஊடகத்துறை
அர்ப்பணிப்புடன் ஆற்றும் பணியிது என்பார்கள் - ஆம்
அனைத்து வடிவிலும் தடைக்கற்கள் அவற்றைத் தகர்த்தெறிந்து வளர்ந்து கொண்டிருப்பவர் இந்தப் படைப்பாளி சாந்தி ரமேஷ் வவுனியன்" என்றார்.
 
அவரைத் தொடர்ந்து ஆசியுரை நிகழ்த்திய தமிழ்க்கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு.நாகலிங்கம் "வன்னியென்றாலே வீரம் - இந்நூலைப் பார்த்தவுடன் வீரம் செறிந்த உயிர்வாசம் என்பதைப் புரிந்துகொண்டேன்"என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

அவரையடுத்து ஒன்றியப்பொறுப்பாளர் அவர்கள் சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கவுரையினை ஆற்றினார்.

அடுத்ததாக மதுரக்குரலோன் அவர்கள் வெளியீட்டுரையினை நிகழ்த்தினார். அவர் தெரிவிக்கையில் "கவிஞர்கள் கவிதைகளை எழுதுகிறார்கள் அதற்கான குரல்வடிவம் கொடுக்கும் போது அதற்கான ஏற்ற இறக்கங்களை உணர்ந்து கவிதைகளுக்கு உயிரூட்டுவதில்லை - ஆனால் இந்தப்படைப்பாளி படைப்புக்கான உயிரூட்டத்தில் உயிரோட்டமாக இணைகிறார்" எனக் குறிப்பிட்டார்.

அடுத்து உயிர்வாசம் கவிதைநூலை கவிஞையின் கணவர் திரு.ரமேஷ் வவுனியன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.







அதன்பின் உரையாற்றிய பரதமாதேவி திருமதி.வானதி தேசிங்குராஜா அவர்கள் தனது முதன்மையுரையில் தெரிவிக்கையில் "இந்தப்படைப்பாளியின் இந்தக்கவிதை நூல் மண்விடுதலையையும் பெண்விடுதலையையும் பெரும்பொருளாகக் கொண்டு பொதிந்து கிடப்பதை கண்டு பெருமிதமடைகின்றேன்" என்றார்.

தொடர்ந்து வாழ்த்துரைகளை திருமதி.ஜிக்கி சோதிலிங்கம் , புஸ்பலதா நாகராஜா , கிருஸ்ணமூர்த்தி , திரு.வலன்ரையன் ஆகியோர் வழங்கினார்கள். அத்துடன் சில்லையூர் சிங்கராஜா, திரு.திருமதி.பாக்கியநாதன் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும் நிகழ்வில் வாசிக்கப்பட்டன.

மற்றும் ஞாயிறு தினக்குரல் ஆசிரியரும், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமான திரு.பாரதி அவர்கள் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சார்பாக அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியும் , வீரகேசரி தினசரிப் பிரதிச் செய்தியாசிரியரும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் தோற்றுவிப்பாளருமான திரு.சிறீகஜன் அவர்களது வாழ்த்துச் செய்தியும் நிகழ்வில் வாசிக்கப்பட்டன.

தொடர்ந்து சமநோக்கு பற்றி உரையாற்றிய வெற்றிமணி ஆசிரியர் சு.சிவகுமாரன் அவர்கள் தெரிவிக்கையில் "செம்பாட்டு மண்வாசத்தையும் அதன் பெருமையையும் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ள கவிஞரின் இயல்பான எழுத்து நடையும் வயதுக்கு மீறிய துணிச்சலையும் மற்றும் வட்டார வழக்கினை இயல்பாக இணைத்துப் படைக்கும் இவரது துணிவையும் குறிப்பிட்டு பாராட்டினார்.

அவரை அடுத்து உரையாற்றிய சந்திரா கோகிலன் அவர்கள் கவிஞையின் மண்ணியப்பற்றுப் பற்றிய தனது மண்ணிய நோக்கினை ஆழுமையான தனது பேச்சாற்றலால் வெளிப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து மதிப்பீட்டுரையினை வழங்கிய தேவிகா கங்காதரன் அவர்கள் தெரிவிக்கையில் நூல்பற்றிய மதிப்பீடு என்பதனை முழுமையாகப் புரிந்துகொண்டு தராசிட்டுக் கவிதைகள் ஒவ்வொன்றும் படைக்கப்பட்ட காலத்தின் கருத்தினைத் தெரிவித்ததுடன் படைப்பாளியின் தன்னிலை சார்ந்த உணர்வுகள் பற்றியும் தெரிவித்தார்.







இறுதியாக நூலாசிரியரின் ஏற்புரையுடன் நிகழ்வு இனிதே நிறைவாகியது.

நன்றி: கோசல்யா சொர்ணலிங்கம். (சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர்)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 10 Jun 2023 15:43
TamilNet
HASH(0x55df74e158f8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 10 Jun 2023 15:43


புதினம்
Sat, 10 Jun 2023 15:43

Fatal error: Call to a member function read() on a non-object in /homepages/1/d40493321/htdocs/classes/rdf.class.php on line 1070