எழுதியவர்: எ.ஜோய்
|
|
|
Saturday, 05 November 2005
கதவின் இடுக்கின் வழியே அனுமதி இன்றி உள் நுழைந்த இரகசியக் கதிரொளி என் கனவை களவாடிச் சென்றது …
என் அஸ்தி கரைத்த கடலின் பாதையில் முன்னும் பின்னுமாக சில ஆத்மாக்கள் மிதந்து கொண்டிருந்தன …
ஆத்மாக்களின் உலகுக்கு நான் இழுத்துச் செல்லப்படுகிறேன் விசாரணைக்காக …
இம்மை வாழ்வின் பாவ புண்ணியங்கள் மறுமையில் நடுத்தீர்க்கப்படுகிறது …
தீர்ப்புக்காய் காத்திருந்த வேளை அறிந்து கொண்டேன் பாவங்கள் அதிகமானால் மீண்டும் பூலோகம் அனுப்பப்படுவதாய் …
ஆத்மாக்களின் நரகம் பூலோகமானால் நாங்களெல்லாம் ?…
எனக்கான தீர்ப்புக்காய் மணி ஒலிக்கிறது கண் விழித்துப் பார்க்கிறேன் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது அவசர அவசரமாக புறப்பட்டு வேலைக்குச் செல்கிறேன் வழமை போல …
12-10-2005
|