அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 24 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிர்வாண விழிகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: முல்லையூரான்  
Sunday, 06 November 2005

முல்லையூரான் டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.  கடந்த சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு நினைவிழந்த  நிலையில் படுக்கையில் இருக்கிறார். அவரின் 'நிர்வாண  விழிகள்' என்னும் இந்தத் தொகுப்பு 1993ம் ஆண்டு  டென்மார்க்கில் வெளிவந்தது. டென்மார்கில் இருந்து  வெளிவந்த 'காகம்' இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியராக விளங்கிய இவர் புலம் பெயர் தமிழ் இலக்கியப் பரப்பில்  நன்கு அறிமுகமானவர். அவரது கவிதைகளில்  சிலவற்றை உங்கள் பார்வைக்கு முன்வைப்பதில் மகிழ்சி அடைகிறோம்.

 

 

 

1.


 



 

வளைக்க முடியாமல்
வானம் தப்பியது.
கை வைத்து பொத்திடினும்
அதனுள்ளும் பார்க்கும் கண்.
இன்றேல்
இவற்றிற்கும் ஆடை நெய்திருப்பர்.
எட்ட முடிந்திருந்தால் வானத்தையும்
நிறம் மாற்றியிருப்பர்
பொய்யர்கள்.

2.


 

 


ஒரு மூலையில்
வாயுடைந்த பியர்ப்போத்தல்.
நிலததில் ஒரு ஐந்து சதம்.
பக்கத்தில் நான்.
பார்க்க யாருக்கு நேரம்
எல்லோரும் போகிறார்கள்.
டென்மார்க் தேசியக்கொடி
அவசரமாய் பறக்கின்றது.
அகதிவாழ்வு.

3.

 

 




மேகமே
அடிக்கிற காற்றில்
போகிற உனக்கு
என்ன என்னுடன் பேச்சு.
காற்றுக்கு எதிராக வா!
உன்னைக் கவிதை செய்கிறேன்.

4.


 

 


எப்போதோ
எங்கோ எழுந்து
பற்றைக்குள் சிக்குண்ட
அந்த பழைய கடதாசியைப்
பாருங்கள்!
இப்பொழுதும்
தன் பழைய செய்திகளுடன்
பறக்க முயற்சிக்கிறது.

5.

 

 

 



அப்போ...
பங்குனிமாத
உச்சிவெய்யிலும்
சாதாரண நடையெனக்கு.
இபபோ...
காலில் குத்துகின்றது
வர்ணக் கம்பளம் கூட.
மீண்டும்...
....

 à®•à®µà®¿à®¤à¯ˆà®•à¯à®•à®¾à®© ஓவியங்கள்: முல்லையூரான்


     இதுவரை:  24802630 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5267 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com