அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 10 June 2023

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow காதல் கடிதம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


காதல் கடிதம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -தமிழன்  
Friday, 13 January 2006

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் புதிய முயற்சியாக  காதல் கடிதம் இசைத் தொகுப்பு வெளிவந்தது. இந்த இசைத் தொகுப்பு தமிழ் மக்கள் மத்தியிலும், பத்திரிகைகள் மற்றும் தமிழ் ஊடகங்களிலும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது காதல் கடிதம் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. காதல் கடிதம் இசைத்  தொகுப்பை வழங்கிய அதே கூட்டணியின் அடுத்த இசைத்  தொகுப்பும் வெளிவர இருக்கின்ற  வேளையில் காதல்  கடிதம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வேகமாக  நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.
கடந்த 14.12.2005 அன்று முதல் தொடர்ந்து மூன்று  நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, 21.12.2005 முதல் இலங்கையில் படப்பிடிப்புகள் நடைபெற்றுக்  கொண்டிருக்கின்றது.
இத் திரைப்படத்தை  Water Falls Movie Makers  நிறுவனர்  T.தில்லைவண்ணன் அவர்கள்  தயாரித்துக்  கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ் திரைப்படக்  கூட்டுத்தாபனமும் இவருக்கு தங்களால் ஆன முழு  உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காதல் கடிதம் படப்பிடிப்பின் முக்கிய விடயமாக  'யாழ்தேவியில் காதல் செய்தால்' பாடல் யாழ்தேவி  புகையிரதத்திலேயே மூன்று நாட்களுக்கு மேலாகப்  படப்பிடிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பின்  போது நூற்றுக்கு அதிகமான எமது மக்கள் சக்தி F.M வானொலியூடாகத் தெரிவு செய்யப்பட்டு, யாழ்தேவி  புகையிரதத்தில் பயணிப்பது போன்று படமாக்கப்பட்டது.
ஒரு பிள்ளைக்கு காதல் வந்தால் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை, எங்கள் கலை கலாச்சார பண்பாட்டுத் தன்மைகள் சிதையாத வகையில் திரைக்காவியமாக வெளிக் கொண்டுவரும்  கடிதம்தான் காதல் கடிதம்.
உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்கள்.  நிழல்கள் ரவி, சிறிரஞ்சனி, காதல் திரைப்படப் புகழ் சுகுமார், ராசி அழகப்பன், விஐய் கணேஸ், பிரவீன், இவர்களோடு  இலங்கைக் கலைஞர்களில் பொப்பிசைப் பாடகர்  யு.நு.மனோகரன் ஆகியோர் நடிக்கின்றனர். எங்கள் மூத்த  கலைஞர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிப்பாளர்  திரு.நடராஐசிவம் அவர்கள் கதாநாயகியின் தந்தையாக  வாழ, கதாநாயகியின் தாயாக தோன்றுகிறார் தமிழ்நாட்டில்  உள்ள பிரபலமான குணச்சித்திர நடிகை ஒருவர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்:
தயாரிப்பு: T.தில்லைவண்ணன்  Water Falls Movie Makers
மூலக்கதை: வினோலியா
திரைக்கதை, வசனம், இயக்கம்: முகேஷ்
ஒளிப்பதிவு: டீ.சு.ராஐன்
இசை: வி.எஸ்.உதயா
பாடல்கள்: வசீகரன் (நோர்வே)
கலை: கலைராஜ்
நடனம் : காதல் படப் புகழ் கந்தாஸ், மன்மதராசா பாடல்  புகழ் சிவசங்கர்
படத்தொகுப்பு: வாசு சலிம்
நிழற்படம் : சிற்றரசு
இத்திரைப் படம் தொடர்பான மேலதிக தகவல்கள்,  படப்பிடிப்பு தளங்களில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற  நிழற் படங்களைப் பார்வையிட www.vnmusicdreams.com   பாருங்கள்.


 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 10 Jun 2023 15:43
TamilNet
HASH(0x55df74e158f8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 10 Jun 2023 15:43


புதினம்
Sat, 10 Jun 2023 15:43
















     இதுவரை:  23720657 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1624 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com