அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 10 June 2023

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow யேர்மனியில் பொங்கல் விழா!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


யேர்மனியில் பொங்கல் விழா!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மோகன்  
Wednesday, 25 January 2006

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அரங்கில் 15.01.2006 ஞாயிறன்று பிறேமன் தமிழ்க்கலை மன்றம் பொங்கல் விழாவை நடாத்தியது அரங்க விளக்கை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிறேமன் பொறுப்பாளர் திரு விராஜ் மென்டிஸ் ஏற்ற நாட்டியாஞ்சலியுடன் ஆரம்பமான பொங்கல்விழா கலைநிகழ்வுகள் பல்சுவை நடனங்களுடன் நீண்டது. நான்கு வயதுப் பாலர் முதல் மங்கையர் வாலிபர் வரை நடன நிகழ்வுகளில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்

மன்றத்தலைவர்  திரு செ.நாகநாதன் தலைமையுரையில் உலகில் வாழும் தமிழ் மக்களனைவரும் மதபேதமற்று கொண்டாடும் விழாவாக பொங்கல் விழா அமையவேண்டும். இது தமிழர் திருநாளென்பதை தமிழர் மனங்கொள்ளவேண்டுமென்பதை வலியுறுத்திதுடன் பிறேமன் தமிழ்க் கலை மன்றம் எதிர்கால புகலிட இளையோர் தாம் தமிழர் என்பதை உணர..தமிழரென தம்மை அடையாளம் காணும் வகையில் தொடர் செயற்பாடுகளில் ஈடுபமுடுமெனறும் கூறியது சபையில் பெரு வரவேற்பைப் பெற்றது.

புகலிடத் தமிழர்கள்  தமிழ் கலை கலாச்சாரப் பண்பாடுகளை பிறேமனில் தொடர்ந்து முன்னெடுப்பதை மகிழ்வோடு காண்கிறேன்..இது தொடர வாழ்த்துகிறேன். பிறப்பால் சிங்களவனாகிய என்னை இன்றைய தமிழர் பாரம்பரிய பொங்கல் விழாவில் பிரதம விpருந்தினராக அழைத்;து, அரசியல் நிலை கடந்து, மனிதநேயமுள்ள இலங்கையரின் உண்மை நிலையை நிலை நிறுத்தியது பெரு மகிழ்வுக்குரியது. இத்தகைய நேயமிகு செயற்பாட்டிற்காக பிறேமன் தமிழ்க் கலை மன்றத்தை வாழ்த்துவது கடமைக்காகவல்ல    என்றார் விழாவின் பிரதம விருந்தினர் திரு விராஜ் மென்டீஸ்
செல்வன் ரமணன் செல்வரெத்தினம் நிகழ்த்திய இளையோர் அரங்கு பார்வையாளர்களுக்கு பொது அறிவுச் செய்திகளை வழங்கியது. திரு.பூ.நவரட்ணராஜாவின் நெறியாள்கையில் பிறேமன் தமிழ்க் கலைமன்றத்தின் சோக்கான மாப்பிள்ளை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்தார்..சிரித்து மகிழ்ந்த கையோடு கலைஞர்களுக்குப் பரிசளித்து மன்ற கீதத்துடன் நிறைவு கண்டது பொங்கல்விழா 2006.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 10 Jun 2023 16:43
TamilNet
HASH(0x55d63ebf85e0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 10 Jun 2023 16:43


புதினம்
Sat, 10 Jun 2023 16:43
     இதுவரை:  23720807 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1731 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com