அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 03 October 2023

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow புதுமுறைத் திருமணம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


புதுமுறைத் திருமணம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: உதயன்  
Thursday, 09 February 2006

தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறையி லான திருமணம் ஒன்று நேற்று நல்லூரில் சிறப்புற நடந்தேறியது.
பேராசிரியர் அ.சண்முகதாஸ்,கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் தம்பதியர் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்ட பத்தில் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தத் திருமணம் நடைபெற்றது.
தமிழ் முறையில் உள்ள பிரதான சம்பிர தாயங்களை உள்ளடக்கியதாக வித்தியாச மான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் அந்தணர்களுடன் கூடிய சமயக் கிரியைகள் எவையும் இடம்பெறவில்லை. மணமகன், தோழன் ஆகியோர் தலைப்பாகை அணிந்துகொள்ளவில்லை.
இந்தத் திருமண நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து திருக்குறள் ஓதுதல் ஆன்றோர்களால் திருக்குறளுக்கு பொருள் கூறல், தலைவரின் முன்னுரை, மணமகன் உறுதியுரை, மணமகள் உறுதியுரை என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து மங்கல நாண் அவையினரின் ஆசீர்வாதத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தவேளை மங்கல வாழ்த்துப்பா ஓதுதல் இடம் பெற்றது.
பின்னர் திருமணத்தை தலைமை வகித்து ஒப்பேற்றிய பேராசிரியர் சண்முகதாஸ் தம்ப தியர் மாலையை எடுத்து மணமக்களுக்கு வழங்க மணமக்கள் மாறி, மாறி அணிந்து கொண்டனர்.
தொடர்ந்து மங்கல நாண் மணமகனால் பூட்டப்பட்டது.
அடுத்து தலைமை தாங்கும் தம்பதியினர், மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க மணமக்கள் தலைமைக்குரியயோரையும், பெற்றோரையும் வணங்கி ஆசிபெற்றனர்.
தொடர்ந்து அனைவரும் மணமக்களுக்கு ஆசிவழங்கினர். சான்றோர்கள் வாழ்த்துரை களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர் கள், விரிவுரையாளர்கள், வங்கியாளர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதைக் காணமுடிந்தது.

நன்றி: உதயன் 09-02-2006
 
 
 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 03 Oct 2023 11:50
TamilNet
HASH(0x55a366c11760)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 03 Oct 2023 12:03


புதினம்
Tue, 03 Oct 2023 11:50
















     இதுவரை:  24070821 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5065 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com