எழுதியவர்: சஞ்சீவ்காந்த்
|
|
|
Tuesday, 08 June 2004
இரவுகள் அழகாய்ச் சிரிக்கின்றன வா வா தோழி சென்று பார்ப்போம்
எடிசனின் அழகிய கண்டுபிடிப்பு வீதியில் இருக்கு நின்று பார்ப்போம்
என் கைகள் பற்றி வெளியே வா இரவுகள் கழியச் சுற்றி வருவோம்
வேகமாய் விரைந்து தோழியே வா மறைவுகள் வெளிக்க வலம் வருவோம்
தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு? பதிவில் கிடைக்கும் சலுகை எதற்கு?
போலி வாழ்க்கை வாழ்தல் முடித்து பொய்யில் சேர்தல் பழமை துடைப்போம்
வெளிச்சக் குப்பை கிளறிக் கிளறி எங்கள் தீனி கண்டு பிடிப்போம்
நெருப்பில் மூழ்கி நீரில் காய்ந்து காற்றில் எரிந்து உலகம் தின்போம்
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts) |