அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 17 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


காந்தளகம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சோ.ஜெயமுரளி  
Friday, 17 February 2006

சசிரேகா பாலசுப்பிரமணியம்உலகத் தமிழரை நூலால் ஒன்றிணைக்கும் சென்னை காந்தளகம்!
செயற்பாட்டை விளக்குகிறார் செயல் முகாமையாளர் சசிரேகா பாலசுப்பிரமணியம்.
இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக பதிப்புத் துறையில் ஆழக்கால் பதித்துள்ள சென்னை காந்தளகம்  நிறுவனம் உலகெங்குமிருந்து வெளிவருகின்ற நூல்களை இணையத்தில் ஒருங்கிணைத்து அவற்றை  உலகத் தமிழர்களுக்கு இனங்காட்டி வருகின்றதென காந்தளகத்தின் செயல் முகாமையாளர் சசிரேகா  பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மறவன்புலவு க. சச்சிதானந்தனை பதிப்பாசிரியராகக் கொண்டியங்கும் 'காந்தளகம்'  முன்னர் 'காந்தா அச்சகம்' எனும் பெயரில் இலங்கையில் செயல்பட்டு வந்தது.
4.முதல்மாடி ரகிசா கட்டடம், இல.68 அண்ணாசாலை, சென்னை –600.002  தமிழ்நாடு
என்னும்  முகவரியில் இசயற்பட்டு வரும் இந் நிறுவனம் ஈழத்தில் வெளிவருகின்ற தமிழ் நூல்களை  தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வருவதாகவும் இலங்கiயிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான  நிலவரை புத்தகமொன்றை கல்வியமைச்சின் அனுமதியுடன் வழங்கி வருவதாகவும் சசி ரேகா  தெரிவித்தார்.
அண்மையில் 'தினக்குரல்' க்கு வந்திருந்த அவருடன் காந்தளகத்தின் செயற்பாடுகள் குறித்து  கலந்துரையாடினோம்.
- சோ.ஜெயமுரளி –
கேள்வி:
உங்கள் நிறுவனத்தின் பிரதான பணிகள் குறித்து சுருக்கமாக கூறமுயுமா?
பதில்: பல்வேறு பதிப்புகளை வெளியிட்டு வரும் நாம் தமிழ் நூல் என்ற மினம்பலத்தினூடாக  இணையம் உலகத் தமிழர்களின் தமிழ் நூல் வெளியீடுகளை ஒருங்கிணைத்து அவை குறித்த  தகவல்களை ஒரே கூரையின் கீழ் வழங்கி வருகின்றோம்.
இந்த மின்னம்பலத்தின் மூலம் உலகெங்கிலுமிருந்து வெளிவருகின்ற தமிழ் நூல்களை விற்பனை  செய்தும் வருகின்றோம். அத்துடன் இலக்கியம், சைவசமயம், கணினி சம்பந்தமான விடயங்கள்,  சிறுவர்களுக்கான முயற்சிகள் என்பன உள்ளடங்கிய குறுந்தட்டுகளையும் வெளியிட்டு வருகின்றோம்.
இதேவேளை பதிப்புத்துறை தொடர்பான தகவல்களை அனைவரும் தெரிந்து கொள்ள  வேண்டுமென்பதற்காக 'பதிப்புத் தொழில் உலகம்' எனும் இதழையும் நாம் வெளியிட்டு வருகின்றோம்.
இவற்றைவிட தமிழ்நாடெங்கிலுமுள்ள 25 விற்பனை நிலையங்களினூடாக உலகில் தமிழில்  வெளிவருகின்ற நூல்களையும் சிறிய கிராமங்களில் கூட அறிமுகப்படுத்தி வருகின்றோம்.
கேள்வி: காந்தளகத்தின் பதிப்பு வெளியீட்டு நடவடிக்கைகள் குறித்து...?
பதில்: தரமான பல நூல்கள் பதிப்பிட்டு வெளியிட்டுள்ளோம். ஒரு சில ஆங்கில நூல்கள் இதில்  அடங்கினாலும் பெருமளவில் தமிழ் நூல்களையே இதுவரையில் வெளியிட்டுள்ளோம்.
குறிப்பாக பிள்ளையார் கதை, தேவார திருமுறைத் தோத்திரத் திரட்டு, திருவாசகம் மூலம், கந்தரநுபூதி  (ஆங்கிலம் உரையுடன்), அபிராமி அந்தாதி போன்ற பல சமய நூல்கள், இலங்கை திரையுலக  முன்னோடிகள், யாழ்பாணக் காவியம், நூல் தோட்டம்(ஈழத்து நூல் விபரப் பட்டியல்) போன்றவை  உள்ளிட்ட இலக்கிய நூல்கள், ஈழத் தமிழர் இழந்த மண், தமழீழ நாட்டு எல்லைகள் போன்ற பல  அரசியல் நூல்கள், கதை, நாவல், கவிதைகள் மற்றும் பாட நூல்கள் என்பவற்றை  வெளியிட்டுள்ளோம்.
இதைவிட இலக்கிய, சமய, கணினி மென்பொருள், சிறுவர்களுக்கான பயிற்சிகள், பாடல்கள் மற்றும்  சமையல் போன்ற பொதுவான விடயங்களை குறுந்தட்டில் வெளியிட்டுள்ளோம்.
கேள்வி: பாடநூல்கள் வெளியிட்டதாக கூறினீர்கள் இது குறித்து விளக்க முடியுமா?
பதில்: உலகெங்கும் தமிழர் படம், சிறுவர் பாடல், தமிழ் அளவை முறைகள், தமிழ் மரபு, இலங்கை  நிலவரை (தேச கோட்டுப் படம்-அற்லஸ்) மழலையர் மலர், ஜப்பான் மொழி கற்க போன்ற நூல்களை  வெளியிட்டுள்ளோம்.
ஆசிரியர் க.சச்சிதானந்தனின் இலங்கை நில வரை என்னும் நூல் குறித்த சந்தைப்படுத்தல்  வேலைகளுக்காகவே இம்முறை நான் கொழும்புக்கு வந்துள்ளேன்.
இலங்கை கல்வியமைச்சு இந்த பாட நூலுக்கு உரிமம் வழங்கியுள்ளது. 1990ம் ஆண்டில் பாடசாலை  மாணவர்களுக்கான நிலவரையை முதன் முதலாக வெளியிட்டோம். 'அற்லஸ்' என்னும் ஆங்கிலப்  பெயருடன் பல பகுதிகளிலுமிருந்து இவ்வாறான நூல்கள் வெளிவந்துள்ளன. நாமே இந்த அற்லஸ்  என்ற பெயருக்கு 'நிலவரை' என்ற தமிழ்ப் பெயரை நாமே முதன் முதலில் பயன்படுத்தி இருந்தோம்.  தற்போது இந்தப் பெயரை பலரும் பயன்படுத்துகின்றனர். இது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாம்  வெளியிட்டுள்ள இலங்கை நிலவரை பாடநூலுக்கு தற்போது இலங்கையில் பெரும் வரவேற்பு  கிடைத்துள்ளது. இதில் பண்டைய இலங்கையின் தோற்றம், பண்டைய ஆட்சி முறை, அமைவு,  சனத்தொகை, அடர்த்தி, என்பவற்றுடன் மாவட்ட ரீதியான தெளிவான நிலவரைகளும் அடங்கியுள்ளன.
இதைவிட உலகவங்கியின் தரவுகளுக்கமைய வடிவமைக்கப்பட்ட, உலக நாடுகள் குறித்த  தகவல்களும் உள்ளடங்கியுள்ளன. வானியல் குறித்த விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபை பற்றிய  விபரங்கள், உலக நாடுகள் ஒவ்வொன்றினதும் பரப்பளவு, சனத்தொகை அடர்த்தி என்பனவும்  இடம்பெற்றிருக்கின்றன.
இந்த நிலவரை பாட நூலைத் தவிர உலகில் பண்டைய தமிழர்கள் எங்கெல்லாம் பயணங்களை  மேற்கொண்டார்களோ அவை குறித்த தகல்கள் அடங்கிய உலகப் படமொன்றையும்  வெளியிட்டுள்ளோம்.
பல நிலவரைகள் வெளிவந்துள்ள போதும் அதில் பல பிழைகள் உள்ளன. ஆனால் எமது நிலவரை  பிழைகளின்றி தரமான பதிப்பாக வெளிவந்துள்ளது.
கேள்வி: உலகெங்கிலுமிருந்து வெளிவருகின்ற தமிழ் நூல்களை இணையத்தில் ஒன்றிணைப்பதாக  தெரிவித்தீர்கள். அந்த இணையம் மூலம் என்ன மாதிரியான விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும்?
பதில்: www.tamilnool.com என்னும் மின்னம்பலத்தை (இணையத்தை) நாம்  வடிவமைத்துள்ளோம். இதில் உலகெங்குமிருந்து வெளியான சுமார் 36 ஆயிரம் தமிழ்ப்  படைப்புகளுள்ளன. அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் படைப்புகளை எமது  மின்னம்பலத்தில் உடனுக்குடன் பதிவு செய்து வருகின்றோம்.
இதனால் உலகில் வெளிவருகின்ற தமிழ் நூல்களை ஒரே இணையத்தில் பார்க்கும் வசதி உலகத்  தமிழருக்கு கிடைத்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகக் கூட இதனைப்  கருதலாம்.
எமது இந்த மின்னம்பலத்தில் நூல்களை தேடக்கூடிய மற்றும் நூல்களை தபால் மூலம்  வாங்கக்கூடிய வசதிகளுமுள்ளன. நூல் ஆசிரியர், நூலின் தலைப்புகளை பதிவு செய்து நூல்களைத்  தேடலாம். அதிலேயே எமது மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.  (tamilnool@dataone.in) அதனூடாக எம்மைத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை  பெற்றுக்கொள்ளலாம்.
எமது தமிழ் நூல் மின்னம்பலத்தை தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்க்கின்றனர். எம்முடன்  தொடர்பு கொள்வோருக்கு உடனடியாகவே தகுந்த பதில்களை வழங்கி வருகின்றோம். இதனால் எமது  மின்னம்பலத்திற்கு பெரும் வரவேற்புள்ளது. உதாரணமாக தமிழை படிப்பதில் ஆர்வமுடைய  ஜப்பானியரொருவர் எம்முடன் தொடர்பு கொண்டார். அவருக்கு தேவையான விடயங்களை  உடனடியாகவே அனுப்பியிருந்தோம். தற்போது அவர் பெருமளவிலான நூல்களை வாங்கி உள்ளதுடன்  எமது இந்த பணியை பாராட்டியுமுள்ளார்.
இதேவேளை இன்னுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். கடந்த ஜனவரி 6 ஆம் திகதி முதல் 16ம்  திகதிவரை வருடாந்த சென்னை புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் ஈழத்தில் வெளியான பல  நூல்களை நாம் காட்சிப்படுத்தி இருந்தோம். ஈழத்தில் இருந்து வெளிவருகின்ற தமிழ் நூல்களை  தமிழகத்தில்  அறிமுகப்படுத்துவதும் எமது முக்கிய பணிகளிலொன்று.
கேள்வி: உங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் என்ன?
பதில்: எமது மின்னம்பலத்தை மேலும் நவீன மயப்படுத்த எண்ணியுள்ளோம். அதாவது நூல்களை  தரவிறக்கம் செய்தல், கடனட்டை மூலம் விற்பனைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றை  செய்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன் தற்போது நாம் சைவப் பணியொன்றையும் ஆரம்பித்துள்ளோம். www.thevaaram.org எனும் மின்னம்பலத்தை உருவாக்கி அதில் அனைத்து தேவார, திருமுறைகளை பதிவு செய்யும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதையோர் சேவையாகவே மேற்கொள்கிறோம். இலவசமாக தேவார  திருமுறைகளைப் படிக்கலாம்.
புலமபெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் பிள்ளைகளுக்கு இது உதவுமென நம்புகிறோம்.  இம்முயற்சியை தற்போதுதான் ஆரம்பித்துள்ளோம். எதிர்காலத்தில் இம்முயற்சியும் வெற்றிபெறுமென  நினைக்கிறோம்.
கேள்வி: பல்வேறு பணிகளிலீடுபட்டுள்ள உங்கள் நிறுவனத்திற்கு ஆட்பலம் எந்தளவில் உள்ளது?  உலகத் தமிழர்களை இணைக்கும் உங்களது முயற்சிக்கு உலகத் தமிழர்களிடம் இருந்து உதவிகளை  எதிர்பார்க்கிறீர்களா?
பதில்: உண்மையில் எமது நிறுவனத்தில் நால்வர்தான் பணியாற்றுகின்றோம். மிகக் குறைந்த  ஆட்பலத்துடன் தான் நாம் செயலாற்றிவருகின்றோம். மின்னம்பலம் குறித்த வேலைகளை நான்  மேற்கொள்கிறேன். பதிப்புகள் தொடர்பாக எமது ஆசிரியர் மறவன்புலவு க. சச்சிதானந்தன்  கவனிக்கிறார்.
எமது முயற்சிகளுக்கு உலகத் தமிழர்கள் உதவலாம். குறிப்பாக இந்த மின்னம்பலத்தை மெருகூட்டல்,  சைவப்பணிக்காக நாம் ஆரம்பித்துள்ள மின்னம்பலத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு உதவ  முடியும். இலங்கைக்கான எமது முகவராக கொழும்பு-11 இலுள்ள சேமமடு பொத்தகசாலை  விளங்குகிறது. எமது மின்னஞ்சல் ஊடாக மேலதிக தவல்களை பெற்றுக்கொள்ளலாம். தெலைபேசி  28414505, 9283109014.

நன்றி:தின்குரல் 12-02-2006.


     இதுவரை:  24773391 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2290 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com