அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கனவுப் பட்டறை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இளவழகன்  
Sunday, 19 March 2006

இப்பொழுதெல்லாம் இரவுகளில்
என் தூக்கம் கலைகின்றது.
நிம்மதியான நித்திரை என்பது
குதிரைக் கொம்பாயிற்று.
இந்த இரவுகளில்தான்
கனவுகள் காண்கின்றேன்.
 
ஆழ்ந்த தூக்கத்தில்
கனவுகள் வருவதில்லை
என்பது உண்மையல்ல.
அவை எமது நினைவுக்கு
வருவதில்லை என்பதே மெய்.
விழிப்பும் தூக்கமும்
கலந்த நிலையில்தான்
கண்ட கனவுகளிற் சில
நினைவில் நிற்கின்றன.
 
கனவுகள் ஏன் வருகின்றன?
இவற்றுக்கான தேவையென்ன?
 
எப்போது எம் மனதின்
நினைவுப் பதிவுகள், ஞாபகங்கள்
அழிந்து போகின்றனவோ,
அப்போது அந்த மனம்
மரணித்து விடுகின்றது.
மனம் இறக்கும்போதுதான்
மனிதனும் இறக்கின்றான்.
மனதின் நினைவுகளை
ஆழ்ந்த தூக்கம் அழிக்குமானால்
மனிதன் இறந்து
மீண்டும் பிறக்க மார்க்கமுண்டு.
 
 
எந்த வகையிலும் இறக்காமலிருக்க
முயற்சி செய்வதே இருத்தல் ஆகும்.
இதுவே இயற்கையின் நியதி.
 
அதனாற்றான் ஆழ்மனம்
ஞாபகத் தகவல்களைக்
களஞ்சியப் படுத்துகின்றது.
மனக்கணனியின் வைரத் தகட்டில்
நாம் விரும்பும் தகவல்களைத்தான்
நாம் சேமித்து வைக்கின்றோம்.
ஆனால் மனமென்னும் கணனியோ
எமது புலன்களின் வழிவந்த
அத்தனை தகவல்களையுமே
ஆழ்மனத் தளத்தினில்
பதிவு செய்கின்றது.
 
எமது பரிணாம வளர்ச்சியின்
படிமுறைக் காலங்களில்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
பதியப்பட்ட தகவல்களும்
பரவணிக்கூறுகளும்
ஆழ்மனதின் அடியில் உறங்கும்.
 
ஓய்வும் நித்திரையும்
உடலுக்கும் மனதுக்கும்
அவசியம் தேவை.

அந்த நிலையில்தான்
மனதை அழுத்துகின்ற
எண்ணங்கள், சுமைகள்
என்ற கோப்புக்களை
எமது சக்திக்கேற்ற வகையில்
ஆழ்மனம் கருத்துக்கெடுத்து
அவற்றுக்கான தீர்வுகளை
எடுத்து முடிக்கின்றது.
கனவுத் தளமென்பது
ஆழ்மனதின் வேலைப் பட்டறையே!
 
பிரச்சனைகளின் தீவிரத்தால்
வாழ்தல் அல்லது இருத்தல்
பாதிக்கப் படாதிருக்கவே
இந்த நடை முறை!
 
கனவுப் பட்டறையிற்றான்
எம் எண்ணங்கள், ஆசைகள்
என்பன பரிசீலிக்கப்பட்டு
உடனடிப் பரிகாரமும்
வழங்கப்படுகின்றது!
 
 


     இதுவரை:  24712440 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5682 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com