அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 03 December 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மனக்கணனி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இளவழகன்  
Sunday, 19 March 2006
எத்தனைதான் முயன்று
தியானத்தில் அமர்ந்தபோதும்
ஏதோ ஒன்றில் மனம்
தன்னைப் பொருத்திக்கொண்டு
சிந்திக்கவே செய்கின்றது!
 
மனமும் ஒரு கணனியேதான்.
அதன் ஞாபகப் பெட்டகத்துள்
உள்ளவைதான் எத்தனையோ!
 
இவற்றில் பல நாமாகச் சேர்த்தவை,
இன்னுஞ் சில தாமாக வந்தவை.
அடிமன ஆழத்தில் எம்மையும் அறியாமல்
உறைந்து கிடக்கின்ற சங்கதிகள் பலவுண்டு.
இவையெல்லாம் எம்முடன் கூடவே பிறந்தவை.
 
இப் பரவணிக் கூறுகள்
கோடானுகோடி
ஆண்டுகளாயப் பரிணமித்து
எம் குணத்தை, நடத்தையை
தீர்மானிக்கின்றன போலும்.
 
அதனால்தான் நாம்
நிட்டையில் அமர்கையில்
எம் கணனித் திரையில்
காட்சிகள் தோன்றுகின்றன.
 
ஐம்புலன்கள் வழியாக
ஏற்படும் தூண்டல்களினால்
குறிப்பிட்ட சில ஞாபகங்கள்
மனத் திரையில் தோன்றும்.
நம் மனமோ அவற்றைத்
தனக்கேற்ப 'எடிற்' செய்யும்.
துன்பந் தருவனவற்றைத் துண்டிக்கும்.
சுகந்தரும் நினைவுகளை
வருடி வளர்க்கும்.
கோபக் குரோதங்களை
தீமூட்டி அடைகாக்கும்.
அடக்கி வைத்த ஆசைகளை
ஆரும் அறியாமல்
நிறைவேற்றிச் சுவைக்கும்
செய்யும் செயல்களில்
ஆதிக்கம் செலுத்த வைக்கும்.
 
கடந்தகால ஞாபகங்களைக்
கரைத்துவிட முடியாமல்
எதிர்கால ஆசைகளுடன்
இறுக்கி இணைத்து வைத்து
இப்போ, இன்று, என்ற
யதார்த்த காலத்தைக்
கறைபடுத்திச் சுமையாக்கும்.
எமது துன்பங்களுக்கெல்லாம்
மனமேதான் காரணம்!
 
நாம் மரணிக்கும் போதுதான்
எமது மனமும் இறக்குமா?
அப்படியானால்
நாம் இருக்கும்போதே
இறப்பதுதான் எப்படி?
மறுபடி பிறப்பதுதான் எவ்வாறு?
 
நடந்தவற்றை விட்டுவிடு!
நடக்கப் போவதையிட்டு
நினைக்காதே, கலங்காதே!
இப்போ நடப்பதில் மட்டுமே
இயல்பாய் ஈடுபடு!
 
இன்பமாய் வாழ்வதற்கு
இதுதான் வழியாமோ?

     இதுவரை:  19976791 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3302 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com