அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 25 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 26 arrow மூன்று கவிதைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மூன்று கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வேம்படிச் சித்தன்  
Wednesday, 24 May 2006

1.
மனங்கள் மருண்ட
ஒரு கணத்திற்கும்
கால்கள் அகன்ற
இன்னொரு கணத்திற்குமிடையிலான
பயனற்ற உக்கிரமும்

ஜீவனப்பொறியில்
விருப்புடன் நுழைந்த
தொலைவிலிருந்து
தொடர்ந்து கொண்டிருந்த
துன்பத்துளியும்

சந்தித்த பொழுதிற்குள்
இருந்தது அபத்தத்தின்
ஆரம்பப் புள்ளி.

அகன்ற கால்களுக்கிடையிலிருந்து
அம்மணமாய் வெறியேறியது
அபத்தத்தின் முழுவடிவம்.

முதல் மூச்சுக்காய் எழுந்த
முதல்அலறலுக்கும்
சூனியத்தின் இறுதி
நுழைவாயிலில் தோன்றிய
இறுதி அலறலுக்கும்
இடையிலிருந்தது


வெறும்
மலம் துடைக்கும்
பிரயத்தனம்.


2.
பொய்யான
ஒரு கனவுடனோ
அல்லது
புனைவுடனோதான்
புல் கூட முளைக்கிறது.

எஃறிப்பாயும்
குதிரையின் குளம்பிற்கென்ன
தெரியும்
புல்லின் கனவுபற்றி.

 

3.
அடர்வனம்.
சொற்கள் செழித்துச்
சடைத்து வான் தொடும்
மரங்கள்
வாக்கியப் பற்றகைள்
முட்கள்
மலர்கள்
காற்புள்ளிகள்
அரைப்புள்ளிகள்
முற்றுப்புள்ளிகள்.
ஏரிகள்
வரிகள்
பறவைகள்
பந்திகள்

குறுக்காகவும்
நெடுக்காகவும்
நேராகவும்
வளைந்து வளைந்தும்
இருப்பினும்
எப்போதுமே கிடையாகவும்
முன்னேறல்
பின்னேறல்
என்றெல்லாம் இல்லாது
ஓட ஒடச்
சுகம் பிறக்கிறது.

காலமழிந்த
ஏட்டுவனப்பாதைகளில்
இடைவிடாது பொழிகிறது
உள்ளுறி à®‰à®¯à®¿à®°à¯ நனையும்
திகட்டாத தேன் மழை.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 25 Sep 2023 12:11
TamilNet
HASH(0x55f9e8877750)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 25 Sep 2023 12:55


புதினம்
Mon, 25 Sep 2023 12:11
















     இதுவரை:  24044984 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1335 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com