அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 28 arrow என் பார்வையில் சமத்துவம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


என் பார்வையில் சமத்துவம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நல்லைக்குமரன் (Melbourne)  
Wednesday, 23 August 2006
பக்கம் 2 of 3

 
சாதியத்தின் ஆதிசரித்திரம்:

உலக அரங்கில் சாதிப்பாகுபாடு என்ற விடயம் அன்று பலமாக எதிரொலிக்கத் தொடங்கி இன்று அடங்கியிருக்;கின்றது. தமிழ் நாட்டில் அதன் ஆரம்பம் கி.பி.575 ஆகும். அக்காலகட்டம் பல்லவர் ஆட்சியின் ஆரம்பமாகும். வட மொழியான சமஸ்கிருதமும் வேதநெறியும் புகுந்த காலமது. வேத வழக்கத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் அது மிக அவசியமானதாகக் கருதப்பட்டதால் பல்வேறு ரூபங்களில் வளர்க்கப்பட்டது. அதற்கு அக்கால ஆட்சியாளர்களும் அவர்களிடம் பயன் எதிர்பார்ப்பவர்களும்; தங்கள் சுகபோகத்திற்காக ஆதரவு நல்கினர்.
சாதியெனப்படும்பொழுது குலம் (caste ) மரபு (race/lineage/family)  அல்லது இனம் ( kind/class/sort/species)  என்பவற்றைப் பொதுவாகக் குறித்தாலும் சூடாமணி நிகண்டில் மனு காலத்தைய இந்துமத சாதி முறையையே இன்று முக்கியமாக் கருத்தில் எடுக்கவேண்டியுள்ளது.
1.பிராமணர் (Brahmans are the Sacerdotal caste)
அல்லது அவர்கள் வாரிசுக்கள் பார்ப்பனர் ( Managers )
2.சைத்திரியர் (Cythriyas are the royal or military caste)
3.வைசியர்  (Vaisiyar are  divided into:
(i) கோவைசியர் (herdsmen)
(ii) தனவைசியர் (mercantile)
(iii)பூவைசியர் (agriculturalists embracing paddy cultivators)
4.சூத்திரர் ( Sudras are the artificers embracing servile tribes).
இன்று வெளிப்படையாக இல்லாவிடினும் மேல் (High)சாதி,  கீழ் (Low)சாதி , அன்னிய (Foreign) சாதி, ஈன (degraded) சாதி , தீண்டாச் (untouchables) சாதி என்பன போன்ற பிரிவுகள் உள்ளன. அதற்கேற்றாப்போல் சாதி தருமம் என்ற உட்பிரிவில் ((peculiar and prescribed duties, practices and employments of the respective castes) சமயத்தினைத் துணைக்கு அழைத்துச் சாதித்துக் (supporting declarations, arguments, doctrine) கொண்டேயிருக்கின்றனர்.
 
‘அடித்தள மக்கள் சிந்தித்துச் செயல்படத் தொடங்குவதால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்த ஆளும் வர்க்கத்தினர் சமயத்தின் பெயரால் அடக்குமுறையைப்பாவித்தனர். சாதி உயர்வைச் சொல்லியே மன்னர்கள் மீதும் மக்கள்மீதும் மேலாதிக்கம் செய்துவரும் ஒரு கூட்டம் இந்தியாவில் மட்டுமே தொடர்ந்து இருந்து வருகின்றது. அவர்கள் ஆரியப் பிராமணர்கள் வழிவந்த பார்ப்பனர்கள்;. பார்ப்னர்கள் என்றால் ஆள்பவர்கள்(Managers) என்று அர்த்தம். பார்ப்பனர்கள் தாசிகளைப்போலத் தங்கள் வாழ்க்கையை நேசிக்கவேண்டும். பாம்புகள் கறையான் புற்றைத் தம் இருப்பிடமாகத் தேடிக் கொள்வதுபோல் பிறர் வீட்டில் புகுந்து கொள்ளவேண்டும். வண்டுகள் பூவின் தேனைத் திருடுவதுபோல பிறருடைய கருத்துக்களையும் , கொள்கைகளையும் தமதாக்கிக்கொண்டு தமது உரிமை என்று கொள்ள வேண்டும். வேதநெறி என்பது நான்கு வருண சமூக அநீதிமூலம் நிறுவன மயமானதொன்றாகும்.’ 
 
வேதம், ஆகமம்,  புராணம், இதிகாசம்,  உபநிடதம், மனுதர்மம் என்னும் நூல்கள் அந்நிறுவன மயத்துக்குத் தத்துவ நியாயம் கற்பிப்பவை.

அந்நிறுவனமயத்தை முதன் முதலாக எதிர்த்தவர் சாக்கியக் குடியரசுத் தோன்றலான கௌதம புத்தராவார்.’ இப்படிக் கூறியவர் குருவிக்கரம்பை வேலு அவர்கள். 

இன்று அது வேர்விட்டுக் கிளைவிட்;டு விருட்சமாகி ஆலமரம்போல்; பல விழுதுகளின் துணையோடு பரந்து விரிந்து தமிழ் மக்கள் மத்தியில் நிற்கின்றது. அபாரமான சாதனை. சாதியின் பெயரால் தமிழினத்தை அக்குவேறு ஆணிவேறாகக் கூறுபோட்டு விட்டது மகத்தான சாதனைதானே. அரசர்கள் காலத்திலும் அன்னியர் ஆட்சிக்; காலத்திலும் பல விடயங்களில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.  அவற்றுள் முக்கியமானது கல்வி.

(கல்வி அறிவில்லாதவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று வழி காட்டுபவர்களாகப் பார்ப்பனர்கள் வாழ்ந்தார்கள். கல்வியில் அவர்கள் ஏகபோக உரிமை பெற்ற காரணத்தால் மக்களின் அன்றாட வாழ்வுகளில் அவர்களது தலையீடுகள் அவசியமானதாக ஆக்கப்பட்டது. கோவில்கள் அவர்களின் அரண்மனைகளாகின. கோவில்கள் ஊடாக வேதாகமநெறிச் சாஸ்திரங்கள் மக்கள் மனதில் நிலைக்கக்கூடிய வகையில் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போலப் போதை ஏற்றிவிட்டார்கள்.
அந்தப் போதனைகளைத் தேவ வாக்காக எடுத்துக்கொண்டு பரம்பரையாக அடிமை மனப்பான்மையில் ஊறித்திளைத்தவர்கள் இன்று அவைகளில் சில பகுத்தறிவுக்கு முரணானவையாக இருப்பினும் அவற்றை விட்டுத்தள்ள விருப்பமில்லாதவர்களாக ஏனோ கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.)
                                                           
ஆதிகாலத்தில் ஆண்டவனை நேரடியாகவே அர்ச்சனை செய்து வணங்கிய தமிழர் மரபு நிலை மாற்றப்பட்டு வேத, ஆகம விதிகளின் பிரகாரம் பார்ப்பனர்களிடம் சிக்கிக் கொண்டு விட்டார்கள். ஆலயங்களில் சாதிப் பாகுபாடு பகிரங்கமாக்க காண்பிக்க முடியாத சமுதாயச் சீர்திருத்தம் இன்று ஏற்பட்டுள்ளதால் முன்னரைப்போன்று சாதிக் கெடுபிடி இல்லை. எனினும் அந்தப் பொல்லாத விஷம் இன்றைக்கும் உயர்சாதி என்று வீறாப்புக் காட்டும் ஒரு சிறுபான்மை விகிதமான தமிழர்;களிடம்  ஆகமம் , உபநிடதம் , அறம் , சாத்திரம் போன்ற  பல்வேறு போர்வைகளினூடாக இருந்துகொண்டுதானிருக்கின்றது.
   
அதற்கான காரணம் என்னவென்று அலசிப் பார்ப்போமா ?

உயர்வு - தாழ்வு.

சாதிப் பாகுபாட்டுக்கும் , பொருளாதார மேம்பாட்டுக்கும்  பலத்த தொடர்புகள் உள்ளன.

மானிடர்கள்! பசிக்காக உணவு .பின்னர்-ருசிக்கான உணவு.
சைவம். சைவம் அல்லாதது அசைவம்.
சைவர்கள் யார் ?அசைவர்கள் யார் ?
உணவு உற்பத்தி அடிப்படையில் பொருளாதாரக் கண்ணோட்டம்!

மரக்கறி உணவு உற்பத்தியாளருக்கும்  , கடல்வாழ் பிராணிகள் வர்த்தகம் , மிருக- பறவையின வளர்பாளர்களுக்கேயிடையிலான பொருளாதாரப் போட்டா போட்டி ஆரம்பமானது.

உணவுப் பொருட்களில் இறைச்சி வகைகள் , உள்ளி ,  கராம்பு , முருங்கை , வெங்காயம் போன்றவை காம குரோத குணத்தை அதிகப்படுத்தும் என்ற தத்துவத்தை அடிப்படையாக்கி மக்கள் மத்தியில் அத்தகைய நம்பிக்கை ஒன்றைப் பார்ப்பனர்கள் காரமாகச் சாப்பிடும் தமிழர் மத்தியில் மெல்ல மெல்ல வளர்த்து வெற்றி கண்டனர்.

‘சமுதாயங்களின் ஒருங்கிணைவில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் வகித்த பங்கை மதம் படிப்படியாக தனதாக்கிக் கொண்டது. ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துவதிலும் மதம் ஒருபங்கை வகித்துள்ளது.மதம் ஒடுக்குமுறையின் சார்பான சித்தாந்தமாகிய சூழலில் அதற்கெதிரான எழுச்சி மத சீர்திருத்தமாகவும் புதிய ஒரு மதமாகவும் தன்னை அடையாளம் காட்டியது. பிராமணீய மதத்தின் வருணாசிரம தருமத்திற்கும் ஒடுக்குமுறைகட்கும் எதிராக வளர்ந்த சமணமும் பௌத்தமும் பின்பு அதிகாரம் சார்ந்து நிலைத்து நிற்க முற்பட்டபோது அதற்கெதிரான எழுச்சி தமிழ் நாட்டில் பிராமணீய மதம் என்று கூறத்தக்க சைவத்தினூடு சாதியத்தை ஓரளவுக்கேனும் நிராகரித்து பக்தி இயக்கமாக வரவு பெற்றது’- என்கின்றார் பேராசிரியர் சிவசேகரம் அவர்கள்.

காலப்போக்கில் கார உணவு , புலால்  , மாமிசம் உண்ணாதவர்கள் சைவர்கள் என்று ஆரம்பமாகிப் பின்னர் அது சைவ சமய அனுட்டான விதிகளாகப் பரிமாணம்பெற்று ஆறுமுக நாவலர் போன்ற தீவிர சைவ சமயப்பக்தி கொண்டவர்களால் சாதி ரீதியாக அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டு மக்களிடையே வேளாண்மை செய்பவர்கள் உயர் சாதியினர் என்றும் மற்றவர்கள் (50) சாதியில் தாழ்ந்தவர்களென்றும் வியாக்கியானம் கொடுத்து தமிழ் மக்களிடையே சாதிப் பிரிவினை பல்வேறு ரூபங்களில் புகுத்தப்பட்டுக் கட்டாயமாக்கப்பட்டது.

இன்று தமிழ்மக்கள் வாழ்கின்ற மூலைமுடுக்குகளில் எல்லாம் சாதிப்பிரிவினையின்; தாக்கம் காணப்படுகின்றது. ஆறுமுகநாவலர் அடிக்கடி தமிழகம் சென்று தில்லைவாழ் அந்தணர்களின் அறிவுரைப்படி அவ்வப்போது சைவசமயத் தத்துவங்களில் பல செருகல்களை ஏற்படுத்தினார்.

“ வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி”  என்று புகழ்பாடும் தமிழ்ப் பாவலர்கள் அன்று இருந்தார்கள். ‘ஆரியர்கள் தேவர்கள் .அந்தணர் எல்லோரும் அறவோர்’ என்று கூழுக்காகப் பாடும் தமிழ்ப் புலவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். பார்ப்பனர்கள் அனைவரும் கல்வியறிவில் தேர்ந்தவர்கள்தான். ஆனால் மற்றவர்களும் மனிதப்பிறவிகள் என்பதை மறந்ததுதான் அவர்கள் விட்ட மன்னிக்கமுடியாத மாபெரும் தவறாகும்.    
 
பசு , ஆடு , மாடு  தாவர பட்சணி.     

புலி , சிங்கம்  மாமிச பட்சணி;.

காகம் சர்வ பட்சணி.

மானிடர்களும் சர்வபட்சணிதான்.

மரக் கறி வகைகள் உண்பவர்கள் சைவராயினர்.

மாமிசக் கறி வகைகள் உண்பவர்கள் அசைவராயினர்.


(ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப அது உண்மையென்று பிரச்சாரம்செய்தால் காலப்போக்கில் அது உண்மை என்ற ஸ்தானத்தைப் பெற்று விடுவது போன்று சைவம் , அசைவம் என்ற பிரிவினை தோன்றி நிலைத்துவிட்டது. அதற்கு வித்திட்டு வளர்த்தவர்கள் ஆறுமுக நாவலரும் தமிழகத்திலுள்ள சைவ ஆதீனங்களும்தான். இதுதான் உண்மை. இதுவரை இந்த உண்மையை எவரும் வெளிப்படையாகச் சொல்வதற்குப் படித்தவர்கள் ஏனோ அஞ்சிப் பதுங்கி ஒதுங்கிவிட்டார்கள்.)மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 16 Jul 2024 11:19
TamilNet
HASH(0x55930587d3d0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 16 Jul 2024 11:19


புதினம்
Tue, 16 Jul 2024 11:19
     இதுவரை:  25367184 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7060 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com