அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 28 arrow என் பார்வையில் சமத்துவம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


என் பார்வையில் சமத்துவம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நல்லைக்குமரன் (Melbourne)  
Wednesday, 23 August 2006
பக்கம் 3 of 3


கோவில் புனிதமானது.
நிட்சயமாக.

ஆனால் கோவில் புனிதத்தின் பெயரால் தமிழரின் பூர்வீகத் தார்மீகம் அழியவிடுவதா?
  
பட்டினப்பாலையில் கூறப்படுவதாவது: தறி ஒன்று நட்டு வழிபடும் பழக்கம் தமிழ்மக்கள் மத்தியில் இருந்தது. இதனைக் கந்து என்று வழங்கினர் அக்காலத்தவர். ஊரின் நடுவிடமாகிய மன்றம் என்று கூறப் பெற்ற அம்பலத்தில் ஆங்காங்கே நடுதறிக் கோயில்கள் அமைக்கப்பெற்றிருந்தன. அந்த அம்பலங்களில் மாலை நேரங்களில் தமிழ் மகளிர் நீராடித் தூய்மையுடன் சென்று அவ்விடத்தை மெழுகித் தூண்டாமணி விளக்கேற்றி மலர் சூட்டி வழிபட்டனர்.(அக்காலத்தில் சிவபெருமானை நடு தறி என்று அழைப்பார்கள்).

திருகேதீஸ்வரத்தில் மக்கள் எவ்வித பாகுபாடுமின்றி பாலாவியிலிருந்து நீர் கொண்டுவந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்குத் தடையுமில்லை. பார்ப்பனர்களின் அனுமதியும் தேவையில்லை. இதிலிருந்து என்ன புலப்படுகின்றது ?

சில சடங்குகள் பார்ப்பனர்களால் தங்கள் பொருளாதார நலன் கருதி மாற்றி அவ்வப்போது அமைக்கப்பட்டுள்ளன என்பதாகும்.
தமிழர்கள் பெண்களுக்கு உயர்வான ஸ்தானத்தைக் கொடுத்தார்கள். அதனால்தான் தாய் - தாய்நாடு - தாயகம்  என்ற தார்மீகக் கொள்கை திராவிடர் மத்தியில் உருவானது. ஆனால் ஆள் - ஆண் - ஆளுமை என்ற பெண்மைக்கு எதிரான  கொள்கை வட இந்திய ஆரியரிடம்; அமோகமாகக் காணப்பட்டது.
அதன் படர்ச்சி தமிழரின் இடர்பாடாக மாறி இன்றும் எதிரொலித்துக் கொண்டுதானிருக்கின்றது. கோவிலின் புனிதத்தைக் காப்பாற்றும் பொறுப்புப் பார்ப்பனர்கள் கையில் போய்விட்டதால் வேத , ஆகம விதி முறைகளைக் காண்பித்துச் சாதிய பாகுபாடு நிலைத்து நிற்க மூல காரணியாக இருந்துவிட்டது. மரக்கறியைமட்டும்  உண்ணும்படியோ மிருக வதையைத் தவிர்க்கும்படியோ வைதீகநெறி கூறவில்லை. மாறாக அத்தகைய யாகங்கள் சமயத்தின் பெயரால் நடைபெறுவதையே விரும்பியது. அக்காலத்து வட இந்திய வேதியர்கள் (பிராமணர்கள்) மதுவையோ , மாமிசத்தையோ , தேவதாசிகளையோ தள்ளிவைத்ததாகச் சான்றுகளில்லை.


கோழி முந்தியதா முட்டை முந்தியதா என்ற கேள்வி எங்கும் எதிரொலிக்கும் காலம் இது. இந்து சமயத்துள் எப்படி சைவம் ஒரு அங்கமாக மாறியது ? சிவனையே முதன் முதற் கடவுளாகச் சித்தரித்த தமிழ் மக்கள் எப்படி இந்து என்ற மகுடமிட்ட வேதநெறிப் புராணத்துள் ( 18 அங்கங்களுள் ) சைவம்   இந்துமதத்தின் ஆதிக்க வேலிக்குள் எப்படி அமுக்கப்பட்டது ? இது திட்டமிடப்பட்ட மாற்றம் என்பதைத் தெரிந்திருந்தும் ஏன் இன்னும் எமது சைவ மக்கள் அதை மாற்றியமைக்க முயலவில்லை ? வேதியர்களின் வியாக்கியானப்படி சிவம் என்றால் சுபம் என்று மாற்றப்பட்டு மங்களம் பாடப்பட்டுவிட்டது என்பதுதான் அர்த்தமா ?
 

மனித வாழ்வின் மையம் பொருளாதாரம். பொருளாதாரக் கண்கொண்டு பார்த்ததனால் ஏற்பட்ட இடைச் செருகல்தான் புலாலுண்ணாமை.
குறத்தி வள்ளியின் இனத்தவர் தேன் ,  இறைச்சி , தினைமாவு  உவந்தளித்ததை ஏற்க முருகன் மறுக்கவில்லையே !
கண்ணப்பநாயனார் என்ன படைத்தார்?
சிவபெருமான் ஏன் புலித்தோலை ஆடையாகஅணிந்தார்?
மான்தோலில் ஏன் பார்ப்பனர்கள் உட்காரவேண்டும்?

பல்வேறு மிருக பட்சி வளர்ப்பாளருக்கும் காய்கறித் தோட்டக்காரருக்கும் ஏற்பட்ட வாழ்க்கைப் போராட்ட மோதலின் எதிரொலியாக ஆறுமுகநாவலர் , தமிழக ஆதீனங்கள் எதேச்சாதிகார ரீதியில் காய்கறிப் பக்கம் சாய்ந்து சைவ அநுட்டான விதி என்ற நெறியுள் புகுத்தி வேளாண்மை செய்பவர்களுக்கு முண்டுகொடுத்தற்கு சமயாசாரம் காரணமல்ல. சமயத்தின பெயரால் தமது சாதியை உயர்வாக்க எடுத்துக்கொண்ட முயற்சி அதுவாகும்.

எனவே இந்து , சைவசமயத்தில் காணப்படும் சாதிப் பாகுபாடு ஒரு சரித்திர நிகழ்வே தவிர அது தொடர்கதையாயிருக்கவேண்டும் என்ற அவசியம் இன்றில்லை.

“தமிழன் என்றொரு இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு.
தமிழ் மக்களிடம் ஒரு பண்பு உண்டு. எந்த ஒன்றையும் வரிசைப்படுத்தி
அதனுள் ஒரு வைப்புமுறையை ஏற்படுத்துவதே அந்தப் பண்பாகும்”.
கல்வி அறிவும் ஆற்றலும் உள்ள ஆறுமுக நாவலர்கூட அதற்கு விதிவிலக்கல்ல.
 
சாதி உயர்வை அடிப்படையாக வைத்து மேலாதிக்கம் செலுத்தியவர்கள் அடித்தள மக்களை; சிந்தித்துச் செயற்பட்டால் தங்கள் வசதி வாய்ப்புக்கள் ஆட்டம் கண்டுவிடும் என்ற சுயநலமான , சுலபமான பொருளாதாரமேம்பாட்டு நோக்கத்திற்காக நிறம் மாறி உரு மாறி அடிக்கடி குணம்மாறித் தந்திரமான வகையில் உண்மைகளைச் சிதைத்து வரலாறுகளில் இடைச் செருகல்கள் மூலம் தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள் வழிவந்த சாதித் தத்துவத்தின் ஏகாதிபத்தியவாதிகள். வேத வழிகாட்டிய பிராமணர்கள் வந்த வழியே வடநாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். இன்று தமிழகத்திலோ அன்றித் தமிழீழத்திலோ பிராமணர்களால் அக்கால கோவில் பூசைகளுக்காகத்  தோற்றுவிக்கப்பட்ட பார்ப்பனர்களின் பரம்பரையினர் (பூசகர்கள்)தான் சாதித்துவத்தை நிலைநாட்ட முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 â€˜à®…ர்ச்சனை என்பது ஆகமம் கூறாத ஒன்று. தனிமனிதன் இறைவன் புகழ்பாடி மலர்கொண்டு அவனை அர்ச்சித்தலே அர்ச்சனையாகும். வைதீக வழியில் பற்றுள்ள பல்லவ ஆட்சியாளர் தமிழர்களின் வழிபாட்டுமுறை பக்திநெறி நேரே சென்று அபிஷேகம் செய்தல்  அர்ச்சனை செய்தல் என்பவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. தொண்டை நாட்டில் பல்லவர் ஆட்சி கி.பி.575 முதல் கி.பி.710 வரை நடைபெற்றது. கி.பி.575ல் தொடங்கிய பாண்டியர் ஆட்சி கி.பி.862 வரை நீடித்தது. பல்லவர் வடமொழியான சமஸ்கிருதத்தை
எந்த அளவுக்கு ஆதரித்தனரோ அதை விட அதிகமாக வட நாட்டு வேத விற்பன்னர்களைப் போற்றிச் சிறப்புக்கள் செய்தனர். பல்லவர் காலத்திலும் இடைக்காலச் சோழர் காலத்திலும் தென் நாட்டைச் சேர்ந்த வேதியர்களை விட்டுவிட்டு வடக்கேயிருந்து வந்து குடியேறிய வைதீகர்களைக் கோவில் பூசைக்கு நியமித்தனர்.வேதவழக்கொடுபட்ட வேள்வி மரபு இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மட்டுமே பரவி இருந்தது. வடகிழக்கில் பௌத்தம்,  சாக்தம் என்பவை பரவி நின்று வேத வழக்கம் அப்பகுதியில் பரவ விடாமல் தடுத்து நின்றன. தமிழ் நாட்டில் சைவத்தை வேத வழக்கம் இ பௌத்தம் இ சமணம் இ சாக்தம் என்பவை வந்து அமிழ்த்தி இருந்தது சரித்திர உண்மை. தமிழ் மரபு சங்க காலத்தில் இருந்த நிலை வேறு. சங்கப் பிற்காலத்தில் அது தாக்குண்டது. தமிழ் மரபை முதலில் தாக்கியது வேத மரபு. அதில் ஓரளவு வெற்றிபெற்றதும் உண்மைதான். அவர்கள் பல்யாகசாலை இ முதுகுடுமி இ இராசசூயம்  இ வேட்டவன் போன்றவைகளைத் தமிழ்நாட்டில் உண்டாக்கியதும் உண்மைதான். ஆனால் அடுத்து வந்த சமண இ பௌத்த மரபுகள் தமிழ் மரபு இ வேத மரபு இரண்டையும் அடித்து ஒடுக்கின. விக்கிரக வழிபாட்டையும் அதற்குச் செய்யும் அபிஷேக அர்ச்சனை என்பவற்றை அதுவரை ஏற்றுக் கொள்ளாத வேத மரபில் சிவ வேள்வியை முதன் முதலில் புகுத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் கௌன்டின்ய கோத்திரத்தில் தோன்றிய திருஞானசம்பந்தரேயாவர்’. இப்படிச் சொல்கின்றார் பேராசிரியர் à®….ச.ஞானசம்பந்தன் அவர்கள்.

படிப்பு:

 à®®à¯à®±à¯à®•à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ சைவக் கோவில்களில் புரணப் படிப்பும் அதற்கான விளக்கம் கூறுதலும் நடைபெறுவதுண்டு. கடந்த சில வருடங்களில்  மெல்பேர்ணில் அதே வழியைப் பின்பற்றவேண்டும் என்று சில அபிமானிகள் தீர்மானித்தனர். அதற்கு மக்களின் பங்களிப்பு அறவே இல்லாததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. அந்த சைவ அபிமானிகளுக்குப் புரியாத விடயம் என்னவாக இருக்கும் ? முற்காலத்தில் புத்தகங்கள் வாசித்து அர்த்தம் தெரியாத பாமர மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்தார்கள். இன்று பார்ப்பனர்களுக்கே சமஸ்கிருத மொழி விளக்கம் கொடுக்கக்கூடிய படிப்பறிவாளிகள் பார்ப்பனர்களல்லாத தமிழ் மக்கள் மத்தியில் உள்ளனர் என்பதுதான் காரணம்.
  
அன்று படித்துக் கிழித்த காலம்.

இன்று கிழித்துப் படிக்கின்ற காலம்.

அன்று மண்ணில் எழுதினார்கள்.

இன்று கணினியில் எழுதுகின்றார்கள்.

சமத்துவம் என்ற வார்த்தை தமிழ் மக்கள் நாவில் வரக்கூடாது என்பதற்காகவே அகராதியில் அது காணப்படவில்லையா? அல்லது புதுடில்லியில் அகராதிகள் உண்டாக்கியவர்கள் வேண்டுமென்றே தவிர்த்தார்களா?  'egalitarian' எனப்படுவது சகலருக்கும் சமத்துவம் வழங்கப்படவேண்டும் என்று பகிரங்கமாக பரிந்துரைப்பவரைக் குறிக்கும் சொல்லாகும்  (advocating equal rights for all).      
                                       
1862 ல் (New Delhi, Madras) வெளியான  Winslows’s - A comprehensive Tamil & English Dictionary  என்னும் தன்னிகரற்ற அகவாதி  இதுவரை 11வது மீள்பதிப்பை 1998 ல் பதிப்பித்துள்ளது. ISBN: 81-2006-0000-2.

அதில் இச்சொல் காணப்படாததற்கு உண்மையான காரணியை இனி நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை அல்லவா?
 
ஆதாரம் :  
         1. புலவர்:  பொ.ஜெகந்நாதன் அவர்களின் யாழ்ப்பாணத்தமிழரசர்
          வரலாறும் காலமும்.
         2. முத்துராசக்கவிராயர் கி.பி. 948ல் எழுதிய வைபவமாலை.
         3. மயில்வாகனப் புலவர் 19ம் நூற்றாண்டில் எழுதிய கைலாயமாலை.
         4. க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய தமிழர்மேல் நிகழ்ந்த
           பண்பாட்டுப்படையெடுப்புக்கள்.
      5. 1862 ல் (New Delhi, Madras) வெளியான Winslows’s - A comprehensive Tamil & English Dictionary . ISBN: 81-2006-0000-2.
         6. “ அருணகிரிநாதரின் அடிச்சுவட்டில்” நூல்.

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)




மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08
TamilNet
HASH(0x55da811c32b8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08


புதினம்
Thu, 28 Mar 2024 18:08
















     இதுவரை:  24713496 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6353 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com