அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 10 June 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 28 arrow இறந்து விடு.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இறந்து விடு.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Thursday, 14 September 2006

அம்மா
இனி நீ இறந்து விடு.

பயமும் பட்டினியும்
நோயும் என இன்னமும்
எத்தனை காலத்திற்கு
நீ செத்துக்கொண்டேயிருக்கப்போகிறாய் ?

ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும்
ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும்
ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும்
ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும்
ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென
ஒரு பொதியையும் காவிக்கொண்டு
இன்னமும்எத்தனை காலத்திற்கு
அலையப் போகிறாய் ?

உன் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும் கழுகுகள்
காவிக்கொண்டு செல்வதையும்
கண்டுவிட்டுத்தான் மடிவேன் என
ஏன் அடம்பிடிக்கிறாய்?

அம்மா
இனி நீ இறந்து விடு.

அனைத்தும் பயனற்றுப்
போய்விட்டது என்பதை
அறிந்த பின்தான் போகவேண்டும்
என  நீ அடம்பிடிப்பது
அறிவீனம் அம்மா.

ஏழு கோடி தமிழர்கள் உலகிலிருக்கிறார்கள்
ஈழத்தில் நாம் எவ்வாறு நாம் அனாதைகளானோம்
எனக் கேட்காதே

உலகில் பன்றிகளும்தானே
பலகோடிகள் இருக்கின்றன.
அவ்வப்போ முணுமுணுத்துக் கொள்வதைத்
தவிர அவையால் என்னதான் செய்யமுடியும்?

நீ இறந்த செய்தி வந்ததும்
தயாராகவிருக்கும் இடுப்புப்
பட்டியை நான் மாட்டிக்கொள்வேன்.

சிங்களமும் மந்திரம் செபிக்கும் பன்றிகளும்
ஒருமித்துக்கூறும் அப்போ
நான் ஒரு பயங்கரவாதியென்று.

07.09.2006.

 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 10 Jun 2023 16:43
TamilNet
HASH(0x55d63ebf85e0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 10 Jun 2023 16:43


புதினம்
Sat, 10 Jun 2023 16:43
















     இதுவரை:  23721166 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2067 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com