அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 10 June 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 28 arrow சுதந்திரம் …
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சுதந்திரம் …   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ. ஜோய்  
Thursday, 14 September 2006

நட்சத்திரத்தின் ஒளியைப் போல
ஒளிரும் அந்த ஒற்றைச் சொல்லில்
புதைந்து போகா பல நினைவுகள்
உயிர் பெறுகிறது …

தென்னையும் வாழையும்
அப்பன் ஆத்தாவாய்
உறவு சொல்லி நிற்கையிலும்
நிச்சயமற்றுப் போன நிகழ்காலம்
கனவு வெளிக்குள்
கேள்விகுறியாய் அலைகிறது …

நாகரீகங்களுக்கிடையேயான மோதலில்
நலிந்து போன இடுப்பில் இருந்து
நழுவுகிறது காற்சட்டை
பின்னர் அதுவே
நாகரீகமாகவும் மாறுகிறது …

எனக்குள் ஒளிந்து போன என்னை
சுமந்து சுமந்து வலி எடுத்து
இறக்கி வைக்க அல்லது
புதைத்து விட
அந்த ஒற்றைச் சொல்லுக்காய்
காத்துக் கிடக்கிறது மனது …

இரத்த வாடை வீசிய
மணற் பரப்பெங்கும்
பூமணம் வீச
வரலாறு எழுதிக் கொள்ளும்
அந்த ஒற்றைச் சொல்லே
பரிபூரண கவிதையாய் மலர
நான் முத்தமிட்டுக்கொள்வேன்
என் மண்ணை …


08-08-06


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 10 Jun 2023 15:43
TamilNet
HASH(0x55df74e158f8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 10 Jun 2023 15:43


புதினம்
Sat, 10 Jun 2023 15:43
















     இதுவரை:  23720753 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1680 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com