அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 03 October 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 31 arrow ரொறன்ரோவில் தமிழ் பத்திரிகைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ரொறன்ரோவில் தமிழ் பத்திரிகைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -பேராசிரியர் இ.பாலசுந்தரம்  
Monday, 19 February 2007

உலகின் செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் ரொறன்ரோ மாநகரில் பல பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருத்தல் மகிழ்ச்சிக்குரிய செயலாகும். ரொறன்ரோ உலகின் செல்வந்த நகரங்களில் ஒன்றென்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவிற் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ரொறன்ரோ பொருண்மிய வளமும் வர்த்தக வளர்ச்சியும் மிக்கதும், வர்த்தகப் பெருமக்கள் பெரிதும் வாழும் நகரமுமாகும். எனவே அவர்களுக்குரிய விளம்பரங்களை வெளியிடுவதற்குப் பத்திரிகைகள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. இதனாலேயே பலமொழிகளில் இலவசப் பத்திரிகைகள் இந்நகரில் வெளியிடப்படுகின்றன.

பொதுசனத் தொடர்பு சாதனங்களில் தொலைக்காட்சி, வானொலி. இணையத்தளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகப் பத்திரிகைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவை தினசரிப் பத்திரிகைகளாகவும், வார இறுதிப் பத்திரிகைகளாகவும், இரு வாரப் பத்திரிகைகளாகவும், மாத இதழ்களாகவும் இலவசமாகவும் விற்பனைக்காகவும் வெளியிடப்படுகின்றன. ரொறன்ரோவில் தமிழில் வெளிவரும் சில வார இறுதிப் பத்திரிகைகள் சுமார் 100 பக்கங்களில் 10,000 க்கும் மேற்பட்ட பிரதிகளாக வெளியிடப்படுவதாகவும் அறியப்படுகிறது.

கனடாவில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ரொறன்ரோ பெரும்பாகத்திலேயே குடிகொண்டுள்ளார்கள். இம்மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழர் வர்த்தக நிலையங்களும் பெருகியுள்ளன. செந்தியின் தமிழன் வழிகாட்டியை நோக்கினால் இவ்வளவு தொகையான வர்த்தகச் செயற்பாடுகளில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளார்களா எனப் பிரமிக்கத் தோன்றும்.

இது பற்றி ஈண்டுக் குறிப்பிடுவதன் நோக்கம் என்னவெனில், ரொறன்ரோவில் பத்திரிகைத்துறை இந்த வர்த்தகர்களின் விளம்பரங்களில் தங்கி வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது.

1980 களில் ரொறன்ரோவில் இவ்வளவு பெருந்தொகையான தமிழ் வர்த்தகர்கள் இருக்கவில்லை. அப்போது பத்திரிகை நடத்தியோர் தம் பணத்தை முதலீடு செய்தே பத்திரிகைப் பணியில் ஈடுபட்டனர். அது அவர்களுக்குப் பெரும் சுமையாகவே இருந்தது. அதனால் இலவசப் பத்திரிகை என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. சகல பத்திரிகைகளும் விற்பனைக்காகவே வெளியிடப்பட்டன. மக்கள் ஆர்வத்துடன் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசித்தார்கள்.

இதனைக் குறிப்பிடுவதற்கும் காரணம் உண்டு. இப்போது பல பத்திரிகைகள் இலவசமாக வெளிவருகின்றன. வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகியவற்றில் வைக்கப்படும் பல்வேறு பத்திரிகைகளின் பிரதிகள் எல்லாவற்றையும் மக்கள் எடுத்துச் செல்கிறார்கள். எங்கே மலிவான பொருட்கள் கிடைக்கின்றன? வீட்டு முகவர்களின் விளம்பரங்கள், திரைப்படச் செய்திகள், மரண அறிவித்தல்கள் முதலான விளம்பரங்களுக்காகவே பெரிதும் பத்திரிகைகள் பயன்படுத்தப்படும் நிலை இருக்கிறது? தமிழ் இலக்கியம் வளர வேண்டும் .எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வளரவேண்டும். இலக்கிய வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பத்திரிகைகள் வெளிவருவதாக இல்லை.
நன்றி்: ஞாயிறு தினக்குரல்


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 03 Oct 2023 11:50
TamilNet
HASH(0x55a366c11760)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 03 Oct 2023 12:03


புதினம்
Tue, 03 Oct 2023 11:50
















     இதுவரை:  24070892 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5124 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com