அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தேசம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மா.சித்திவினாயகம்  
Saturday, 05 May 2007

எந்த நம்பிக்கை தரும்                         
இசைவும்,இணக்கமும்                          
இங்கில்லை!

எதுநாள் வரையில்-இது
தொடருமென்றும்,
எவருக்கும் தெரியவில்லை!

நாம் போகுமிடந்தோறும்
பின்னும்,முன்னுமாய்த்
தொடர்கிற நிழலினைப்போல........
மரணம் ஓயாது
துரத்தி வதைக்கிறது!

நாம் திரும்பும்
திசை தோறும்
ஆதிக்கவெறிக்கும்,
அதிகாரப்போட்டிக்கும்,
பலியாகிப்போய்.......
அப்பாவிகளின் உடலாபிசேகம்!

முந்திய நாட்டாமையின்,
காலடி அறுத்து -பிந்திய  நாட்டாமை
புரட்சி என்றோதுகின்றான்!!
அந்த விடுதலை,
இந்த விடுதலை-என்கின்ற
எந்த விடுதலைக்குள்ளும்,
சாமானியனை.......
அதிகாரம் பண்ணவும்,
ஆதிக்கம் செலுத்தவுமான
சூழ்ச்சிப் பேயே,
உடல் போர்த்தி
உட்கார்ந்திருக்கிறது.

நெடுங்காலமாகவே-நாம்
வீரப்பிரதாபங்களிலும்,
வெற்றுக்கதைகளிலுமே
களித்துக்கிடந்து
உளம் மகிழ்ந்திருந்தோம்........

சமாதானம்,சண்டையினால்
வருமென்றும்.....
அமைதி,ஆயுதத்தால்
வருமென்றும்.....
புனிதம் போரினால்
வருமென்றும்......
தலைவெட்டுப்படக்காத்திருக்கும்-ஓர்
ஆட்டைப்போல-அல்லது
கோவிலிற்காய் நேர்ந்த- ஓர்
கோழியைப்போல,
முடிவறியாமல் குதூகலித்து
அலைகிறது மானிடம்.

எல்லாச் சோகங்களுக்கும்
எரிப்புகளுக்கும்,புகைகளுக்கும்
புதைகுழிகளுக்கும் பின்னால்
கோரமாய்ச் சிரிக்கிறது
தன்னகங்காரம்.

எம்மைக் குருடாக்கவும்
எம்காணும் திறனை
மறுத்துப்பேசவும்
மூலைக்கு மூலையாய்
முளைத்தெழுகின்றன
மதங்கள்.

பகவத்கீதை,
குரான்,
பைபிள்.....
இவை மட்டுமல்லாது
உலகம் தளுவிய-எந்தப்
பொதுநீதிகளுமே
பதில்தராத மரணங்களுடனும்,
பொய்களுடனும்-எதைக்
காணவும்,சாதிக்கவும்
முடியுமெனக் கனவு காண்கிறாய்- நீ

மானிடச் சதையைப்
பிய்த்து வீசும்-ஒரு
துப்பாக்கி முனையில்
இன்றைய நாளின்
பிரளயமெனில்-நாளை
உலகமுற்றிலும்
சூழ்ந்த பேய்களின்
அணுக்குவியல்கள்-இந்தப்பூமியின்
கடைசிமண் துகளைக்கூட
எங்ஙனம் விட்டுவைக்கும்??

அதுசரி..........
கிரகமண்டலத்துள்
பூமியின்சிதறலின் போதும்
வரலாற்றைத்தேடுவான்
கல்லிற்கும் மண்ணுக்கும்
மூத்த என் முதல்வன்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)

 

 


     இதுவரை:  24715390 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4302 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com