அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 03 December 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குறும்பா - 02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மாவை சி. கேசவன்  
Wednesday, 09 May 2007

11.
மாபெரியர் பேசவந்தார்  இத்தரை
மணிசரியாய் அப்போதோ பத்தரை
    ஆ..!அரிய பேச்சுக்கேட்டு
    அங்குற்ற நால்வர்கூட
மாபெரிய குறட்டைவிட்டு நித்திரை.

12.
புவியழகன் சமதர்மம் கொண்டு
புவியினிலோர் தனிநாடு கண்டு
   சுவீகரித்துச் செல்வம்
   சமன்படுத்தல் செய்து
சுவிஸ்பாங்கில் வைத்தான் எக்கவுண்டு.

13.
ஒருகாலைத தூக்கிவைத்துக் கொண்டு
குளமொன்றில் கொக்குகளைக் கண்டு
   அருள்நங்கை கேட்டதற்கு
   ஆசிரியர் அளித்தபதில
இருகாலும் தூக்கின்வீழும் கொக்கு.

14.
ஓட்டைக் கழட்டிஅதன் கீழே
ஒட்டறைகள் பிசகாதிரா வேளை
   பூட்டுகளும் உடையாது
   புகுந்தெடுத்தான் கள்வனென
போட்டார்'கேசு'  பொலிசில்ஒரு காளை.

15.
ஆப்பிழுத்த கடுவன்கதை ஒன்று
அதுதெரியும் அனைவருக்கம நன்று
   ஆப்பதனை இழுக்கையிலே
   அகப்பட்டதோ வாலதன்று
மாத்தியவன் விட்டான்கதை என்று. 

16.
கண்தோண்டி உறுப்பறுத்து வெளிப்படை
கறண்ட்கம்பி பாச்சிப்பின் பலியிடை
   தண்ணீருள் அமிழ்த்தித்தூக்கி
   தீக்கொழுந்துள் போட்டுவாட்டி
விண்ணுலகம் அனுப்பும்சிறை வெலிக்கடை.

17.
நாத்திகததில் ஊறியஅற் புதனே
நாகநாதன் பெற்றதலை மகனே
   காத்திருந்தான் கிளாலிக்கடல்
   கடப்பதற்காய் கிபிர்விமானம்
குத்துண்ண வாய்பிளந்தான் சி..வ..னே..!

18.
வண்டுதுளை இட்டநல்ல மாம்பழம்
வகைதொகையாய் சாவச்சேரி காண்புலம்
   கண்டுபல காலமாச்சு
   காண்பதிப்போ இராணுவத்தின்
குண்டுபட்டு வெம்பிநாறும் வீண்பழம்.

19.
செல்வந்த நன்னகரம் என்று
சொன்னார்யாழ்ப் பாணம்தனை அன்று
   சொல்லியதன் அர்த்தமது
   சோக்காய் புரிகின்றது
செல்வந்து தினம்வீழ்ந்து இன்று.

20.
பாஞ்சாலி ஐவர்கரம பிடித்தாள்
பார்போற்றும் படியாக நடித்தாள்
   ஆம்கண்ணா எந்தன்மனம்
   ஆறாவதாய் கர்ணனையும்
ஏஞ்சாமி ஏங்கியதோ? ..(நா) கடித்தாள்.

இன்னும் வரும்..
       

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  19976966 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3294 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com