அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எனது நாட்குறிப்பிலிருந்து - 04   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Tuesday, 29 May 2007

ஒரு நேர்காணலும் சில மனப்பதிவுகளும்


01.

ஈழத்தமிழர் தேசியத்தின் படிமுறைசார்ந்த வளர்ச்சியானது பல்வேறு தடைகள் குறுக்கீடுகள் என்பவற்றின் வழி நகர்ந்த ஒன்றாகும். இது தமிழர் தேசிய அரசிலுடன் பரிச்சயமான எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவ்வாறான குறுக்கீடுகளில் கருத்தியல் சார்ந்த குறுக்கீடுகளும் எதிர்வாதங்களும் முக்கிய இடத்தை பெறுகின்றன. மார்க்சிய வழி சிந்தித்த பலர் ஈழத்தமிழர் தேசியம் என்பதே ஒரு குட்டி முதலாளித்துவக் கோரிக்கை என்றனர், பின்னர் அவ்வாறு கூறிய பலரே ஈழத்தமிழர் தேசியம் என்பது தவிர்த்துச் செல்லக் கூடிய ஒன்றல்ல என்ற முடிவிற்கு வந்தனர். அவ்வாறானவர்களில் சிலர் காலப்போக்கில் தம்மை தமிழ் தேசிய அரசியல் செயல்பாடுகளுடனும் இணைத்தும் கொண்டனர். ஒரு வகையில் காலம் அவர்களை அவ்வாறு சிந்திக்கவேண்டிய நிலைக்கு தள்ளியது என்றும் சொல்லலாம். இப்பொழுது மீண்டும் சில பின்நவீனத்துவாதிகள் பெருங்கதையாடல் என்ற சொற்பிரயோகத்துடன் ஈழத்தமிழர் தேசியத்துடன் சற்று உரசிப்பார்க்க முயல்கின்றனர். துயரங்களையே வாழ்வனுபவமாகக் கொண்டிருக்கும் நமக்கு இவ்வாறானவற்றில் கவனம் செலுத்துவதற்கு நேரமில்லாவிட்டாலும் இவ்வாறான வாதங்களும் தாண்டிச் செல்ல வேண்டிய ஒன்றென்ற வகையிலேயே நான் இது குறித்து கவனம் கொள்கின்றேன். 1990களில் தமிழக சூழலில் குறிப்பாக இலக்கிய தரப்பினர் மத்தியில் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குதல் என்ற கோசத்துடன் களமிறங்கிய பின்நவீனத்துவம் மார்க்சியம், தேசியம் என்பவற்றை பெருங்கதையாடல் என பிரகடனப்படுத்தியது. மார்க்சியம் போதாமை மிக்கதென கூறிய தமிழ் பின்நவீனத்துவவாதிகள் தேசியத்தை பாசிசத்துடன் இணைத்து விவாதித்தனர். ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கிய பின் எஞ்சியிருக்க போவது என்ன என்பது பற்றி இவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான். ஒரு அழகான கண்ணாடிக் குவளையை கீழே வீசிவிட்டு சிதறிப்போன அதன் துண்டுகளை, தான் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக இறுமாப்புடன் பார்த்து ரசிக்கும் ஒருவனின் மனநிலைதான் தமிழ் பின்நவீனர்களின் நிலையும். இன்று பின்நவீனத்துவம் பற்றி பேசாமல் விட்டால் அது ஒரு மாபெரும் முட்டாள்தனம் என்பது போன்ற வாதங்கள் உலவுகின்றன. ஒரு வகையில் பின்நவீனர்களுக்கு இதில் வெற்றி என்றும் சொல்லாம். ஏனென்றால் பின்நவீனத்துவத்தை முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் சித்தாந்தங்களின் நீட்சியென விமர்சித்த, நிராகரித்த மார்க்சியர்களும் அது குறித்து புத்தகங்களை போடும் நிலைக்கு தாவியிருக்கின்றனர். இதன் தாக்கம் நமது சூழல் வரைக்கும் நீண்டிருக்கின்றது. சமீபத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வியியல் துறை பேராசிரியர் சபா.ஜெயராசா ‘பின்நவினத்துவத்தை விளங்கிக் கொள்ளுதல்’ என்னும் நூலொன்றை எழுதியிருக்கின்றார். இதனை கைலாசபதி வட்டமும் இலங்கை முற்போக்கு இலக்கிய பேரவையும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து தேசிய கலை இலக்கிய பேரவை அணியினரும் ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றனர்.

02.
சமீபத்தில் தமிழக சிந்தனைச் சூழலில் நன்கு அறியப்பட்ட அ.மார்க்சின் நோர்காணலொன்றை பார்க்க கிடைத்தது. அதில் அ.மார்க்ஸ் பின்நவீனத்துவ நோக்கில் ஈழத்தின் அரசியல், இலக்கிய, கருத்தியல் சூழல் பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றார். இந்த நேர்காணல் குறித்த எனது அபிப்பிராயங்களை பதிவு செய்வதற்கு முன்னர் வேறு ஒரு கலந்துரையாடல் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஏனெனில் அந்த நேர்காணலுக்கும், இந்த கலந்துரையாடலின் போது நான் குறிப்பிட்ட சில விடயங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. சமீபத்தில் கோட்பாட்டு இதழாக தன்னை அடையாளப்படுத்த முயலும் ‘கூடம்’ என்னும் காலாண்டிதழை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்போது ஈழத்தின் புலமைத்து போக்கு குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பாக நமது சூழலில் மானிடவியல், சமூகவியல், தத்துவார்த்த உரையாடல் ஆகிவற்றில் பெரிய வறுமை நிலவுவதாகவும் நாம் இதில் தமிழக சிந்தனையாளர்களையே நம்பியிருக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர்களையே இங்கும் தொடர வேண்டியிருப்பதாவும் ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது குறித்த எனது வாதமோ, புலமைத்துவ உரையாடல் என்ற பேரில் கோஷ்டிவாத விவாதங்களில் ஈடுபடும் தமிழக சிந்தனையாளர்களை தொடர்வதில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குதல், எழுதப்படாதவற்றை எழுதுதல் போன்ற கோசத்துடன் களமிறங்கியிருக்கும் பின்நவீனத்துவத்தை எமது தேவைகளுக்கு ஏற்ப எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதாக எனது கருத்துக்கள் அமைந்திருந்தன. நான் குறிப்பிட்ட நேர்காணலிலும் அ.மார்க்ஸ் ஈழத்தின் சிந்தனைத் தேடலிலுள்ள தேக்கம் பற்றி கூறியிருக்கின்றார்:


 â€œ ஒரு காலத்தில் தமிழ்ச் சூழுலுக்கு வழிகாட்டியாக இருந்த நிலை போர்ச் சூழலினால் மாறிவிட்டது. ஒரு தேக்கத்தைத்தான் காண முடிகின்றது. சிவத்தம்பி, நுஃமான் போன்றோரெல்லாம் ஒரு கட்டத்தில் நின்று விட்டனர். ஈழத்து எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மத்தியில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை அவர்களிடம் பின்னி பிணைந்து கிடக்கும் சைவக் கருத்தியல்தான். அதன் பிடியிலிருந்து யாரும் முழுமையாக விடுபடவில்லை. பிறப்பால் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்தவர்களிலும் கூட பலர் இப்படித்தான் உள்ளனர். ஒன்றை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. தமிழ்ச் சூழலில் இருந்த அளவுக்கு மேலை நவீனத் தத்துவங்கள் குறித்த அவதானிப்பும், அறிமுகமும் ஈழத்தில் நடைபெறவில்லை இத்தனைக்கும் கைலாசபதி, சிவத்தம்பி முதலானோர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஜார்ஜ் தாம்சன் போன்றோரிடம் கற்கும் வாய்ப்பு பெற்றவர்கள். ஈழச் சிந்தனையாளர்களிடம் ஆக அதிகமாக வெளிப்பட்டது சைவ மயப்பட்ட மார்க்சியமே. எழுபதுக்குப் பின் மேலெழுந்த தேசியவாதமும் இந்த தேக்கத்திற்கு ஒரு காரணம். அந்நியமாதல், ஸ்டக்சுரலிசம், எக்ஸிஸ்டென்றியலிசம். போஸ்ட்மார்டனிசம் போன்ற சிந்தனை அறிமுகம் தமிழகத்தில்தானே உருவாகியது. ஈழ அறிஞர்கள் மத்தியில் இன்றளவும் இவற்றின் மீது எதிர்ப்புத்தானே உள்ளது. எல்லாவற்றிலும் போல் இதிலும் விதிவிலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்” 

à®….மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கும் சைவக் கருத்தியல் குறித்து நான் யோசித்தேன் அது என்ன சைவக் கருத்தியல், சைவமயப்பட்ட மார்க்சியம்? à®….மார்க்ஸ் என்ன அடிப்படையில் இது பற்றி கூறியிருக்கின்றார்? உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் பேராசிரியர் கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரை அடிப்படையாக வைத்துத்தான் மார்க்ஸ் இந்த கண்டுபிடிப்புக்களை செய்திருக்கவேண்டுமென்று. கைலாசபதி வீரயுகக் கவிதைகள் பற்றியும் ஆறுமுக நாவலர் பற்றி பேசியதையும், சிவத்தம்பி பக்கிதிப்பாடல்களின் இலக்கியத் திறன் பற்றி பேசிவருவதையும் அடியொற்றித்தான் அவர் சைவமார்க்சியம் என்ற ஒன்றை உருவாக்கியிருக்கின்றார். உண்மையில் ஈழத்தின் மார்க்சிய சிந்தனை மரபென்பது ஒரு கைலாசபதியும் சிவத்தம்பியும் அல்ல அவர்களது பங்களிப்பு மார்க்சிய நோக்கில் சமூக, இலக்கிய நிலைப்பட்ட சிந்தனைகளில் தாக்கம் செலுத்தியதுதான். அன்றைய சூழலில் அந்த தலையீடு என்பது தமிழ்ச் சிந்தனைச் சூழலில் புரட்சிகரமான தலையீடாக இருந்தது. ஆனால் ஈழத்தின் இடதுசாரி அரசியல் சிந்தனைத்தளம் என்பது பிறிதொரு தளமாக இயங்கியது. அது பெருமளவிற்கு சன்முகதாசன் தலைமையிலான சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தாகவே இருந்தது. சண் தலைமையிலான கட்சியே அன்றைய சூழலில் ஈழத்தின் இடதுசாரி அரசியல் சிந்தனைகளின் தொட்டிலாக இருந்ததெனலாம். ஆனால் இதெல்லாம் ஒரு கட்டத்துடன் முடக்கம் கண்டன. தமிழர் மீதான ஒடுக்குமுறையின் விஸ்தீரணமும், அதற்கு எதிரான மக்களின் உணர்வுகளை இடதுசாரிகளால் தமது அரசியல் தளத்தில் பிரதிபலிக்க முடியமால் போனமையும் இடதுசாரி அரசியலை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தது எனலாம். இப்பொழுது இலங்கையில் இடதுசாரி அரசியல் என்ற ஒன்றே கிடையாது. இருப்பது இனத்துவ அரசியல் மட்டும்தான். இது பற்றியெல்லாம் à®….மார்க்ஸ் போன்றவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. à®….மார்க்ஸ் போன்றவர்களின் பெரிய பிரச்சனையே ஈழத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் ஈழம் பற்றி பேச முற்படுவதுதான். மார்க்ஸ் சமீப காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கூறிவரும் கருத்துக்களை பார்த்தால், அவருக்கு ஈழத்தின் நிலைமைகள் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதைத்தான் காட்டுகின்றன. செவிவழிக் கதைகளை கேட்டு அபிப்பிராயம் சொல்ல முற்படுவது ஆரோக்கியமான ஒன்றல்ல. à®….மார்க்ஸ் தீராநதியில் எழுதிவரும் பத்தித் தொடரில் சமீபத்தில் ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டிருந்தார் தமிழகத்தை விட ஈழத்தில்தான் சாதிப்பிரச்சனை அதிகமாம். இதனை வாசித்து புல்லரிப்பிற்கு ஆளான ஈழத்து அதிஸ்டசாலிகள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. தமிழக சாதி அமைப்புக்களின் இறுக்கமும் சாதியத்தின் பேரால் அங்கு அரங்கேறும் கொடுமைகளும் உலகில் வேறு எங்குமே நடாக்காதவை. இந்த நூற்றாண்டிலும் தாழ்த்தப்பட்டவர்களை மலம் தின்ன வைக்கும் கொடுமைகளை நாம் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றோம். நிலைமை இவ்வாறிருக்க à®….மார்க்ஸோ தமிழகத்தைவிட ஈழத்தில்தான் சாதிப்பிரச்சனை அதிகம் என்பதை என்வென்று சொல்வது. ஈழத்தில் சாதிப்பிரச்சனையே இல்லலையென்பதல்ல எனது வாதம். ஒரு காலத்தில் குறிப்பாக யாழ் சமூக அமைப்பில் சாதியம் என்பது மிகவும் இறுக்கமாக இருந்தது உண்மைதான். ஆனால் அது இப்பாழுதும் அதே இறுக்கத்துடன் இருக்கிறது என்ற ஒருவர் குறிப்பிடுவாராயின் அவருக்கு சமகால ஈழத்தை தெரியாது என்பதுதான் அர்த்தம். தவிர இன்றைய சூழலில் ஈழத்தில் சாதியத்தை முதன்மைப்படுத்தும் அரசியல் போக்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒன்று. இங்கு ஈழத் தமிழர் தேசிய அரசியலில் சாதியை தனித்துவப்படுத்தி நோக்க விரும்புபவர்கள் ஒன்றை கருத்தில் கொள்வது அவசியம். அதாவது சிங்கள மேலாதிக்கம் தமிழர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட போது இவர் முதலாளி, இவர் வேளாளர், இவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகள் மீது தனது ஒடுக்குமுறைகளை  மேற்கொள்ளவில்லை. தமிழர் என்ற அடையாளத்தின் மீதே தனது ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்தது. எனவே சிங்களம் எந்த அடையாளத்தின் மீது கைவைத்ததோ எதனை அழித்தொழிக்க முற்பட்டதோ அந்த அடையாளத்தை மையப்படுத்தியே இன்றைய ஈழத்தமிழர் தேசிய அரசியல் தோற்றம் கொண்டது. இது எளிமைப்பபடுத்தி நோக்கக் கூடிய ஒரு விடயமல்ல

03.    
அ.மார்க்ஸிற்கு ஈழத்தின் சமகால பிரச்சனைகள் பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை என்பதற்கு இன்னொரு வலுவான சான்று இந்த நேர்காணலிலுள்ள பிறிதொரு கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதில்.

கேள்வி: முழுக்க முழுக்க உங்களுக்கு எதிரானதாகவே இலங்கைச் சூழல் இருக்கின்றது. உதாரணம் நுஃமான், சிவத்தம்பி, சிவசேகரம், சேரன் இவர்கள் தமிழர் தேசத்து ஆதிக்க சக்திகளுக்கு சாய்வானவர்கள். ஏன் அவர்கள் உங்களைக் காய்வதிலே குறியாக இருக்கின்றார்கள்?

அ.மார்க்ஸின்; பதில் “உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கின்றது. அவர்கள் தமிழர் தேசத்து ஆதிக்க சக்திகளுக்கு சாய்வானவர்கள். ஈழத்தில் மட்டுமல்ல. தமிழகத்திற்கு அவர்கள் வரும்போதும் அப்படியே. ஈழத் தமிழர்களுக்கு இங்குள்ள பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் விளங்காது. முஸ்லிமாக இருந்தபோதும் நுஃமானும் அப்படியே. காலச்சுவடு போன்ற உள்ளாந்த முஸ்லிம் எதிர்ப்பு உள்ள, பார்ப்பனியத் தன்மை மிகுந்த, கார்ப்பரேட் பரிமாணம் கொண்ட சக்திகளுடன் நுஃமானும், சேரனும் கொண்டுள்ள உறவும் காட்டும் விசுவாசமும் இழிவானது. சிவத்தம்பி ஒரு சைவத் தமிழ் தேசியவாதி, சிவசேகரம் ஒரு இறுகிப்போன மார்க்சிஸ்ட் எல்லோரும் ஒரு கட்டத்தில் தேங்கிப் போனவர்கள்”

கேள்வி கேட்பவர்கள்தான் விளக்கிமில்லாமல் ஏதோ உளறுகின்றார்கள் என்றால் பதிலளித்திருக்கும் மார்க்ஸோ இன்னொரு உளறலை பதிலாக முன்வைத்திருக்கின்றார். இதனை வாசித்த பின்னர் சற்று ஆழ்ந்து சிந்தித்தேன் அ.மார்க்ஸ், ஈழத்தின் ஆதிக்க சக்திகள் என்று யாரை குறிப்பிடுகின்றார் விடுதலைப்புலிகளையா? அப்படியானால் மார்க்ஸ் இங்கு குறிப்பிடும் சேரன், நுஃமான், சிவசேகரம் ஆகியோர் எப்போது சார்ந்திருந்தனர். தவிர ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒரு அமைப்பு எப்படி ஆதிக்க சக்தியாக இருக்க முடியும். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இவரது பட்டறையில் வளர்ந்த ரவிக்குமார் காலச்சுவடு பார்பனிய சக்திகளுடன் இணைந்திருப்பது குறித்து அக்கறை கொள்ளாமல் இருப்பதுதான். சுந்தரராமசாமி இறந்த போது பி.பிசி தமிழ்ச் சேவை ரவிக்குமாரிடம் சுந்தரராமசாமி பற்றி அபிப்பிராயம் கேட்குமளவிற்கு அவர் காலச்சுவட்டின் குடும்ப நன்பராக மாறியிருக்கின்றார். தனது அருகில் இருந்த ஒருவருக்கே அ.மார்க்ஸ் கூறும் கார்ப்பரேட் பார்பனியம் விளங்கவில்லையென்றால் தூரமாக இருக்கும் சேரனுக்கும், நுஃமானுக்கும் எப்படி விளங்கப் போகின்றது. ஆனால் இங்கு மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு இங்குள்ள பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிவற்றின் முக்கியத்துவம் விளங்காதென்ற வாதத்தை நான் ஏற்றுக் கொள்வேன. ஒரு குறிப்பிட்ட நிலைமைகளுக்கு மட்டுமே பொருந்திப் போகும் பிரச்சனைகளின் தார்ப்பரியம் பிறிதொரு சூழலில் வாழ்பவர்களுக்கு போதியளவு விளங்க வாய்பில்லை என்பது உண்மைதான். எப்படி தமிழகச் சூழலுக்கே உரித்தான பிரச்சனை எங்களுக்கு விளங்காதோ அதே போன்றுதான் ஈழத்திற்கே உரித்தான பிரச்சனைகளின் தார்ப்பரியம் அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு விளங்கப் போவதில்லை

அ.மார்க்ஸின் புரிதலிலுள்ள இன்னொரு தவறு அவர் ஈழத்திலுள்ள முஸ்லிம்களை விளிம்பு நிலை மக்களாகக் கருதுவது. உண்மையில் ஈழத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் விளிம்பு நிலை மக்கள் என்பது அபத்தமான கருத்து. தமிழகத்தில் தலித்துகளை அடிப்படையாகக் கொண்டு கைக்கொள்ளப்படும் விளிம்புநிலை என்ற சொல்லை ஈழத்தில் முஸ்லிம்களுக்கு பயன்படுத்த முயலும் போதே இந்த தவறு நேர்கின்றது. பாசிச எதிர்ப்பு என்ற நாணயத்தின் மறு பக்கமாகவே எங்களது முஸ்லிம் ஆதரவு இருப்பதாகக் கூறும் அ.மார்க்ஸ் முஸ்லிம் குழுக்கள், புலமையாளர்கள் உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலுடன் தம்மை இணைத்துக் கொள்வது குறித்து எந்த தெளிவுமற்றிருப்பதுதான் வேடிக்கையானது. அ.மார்க்ஸின் நூல்கள் பலவற்றை நான் படித்திருக்கின்றேன் அது ‘மார்க்சியத்தின் பெயரால்’ என்பதிலிருந்து ‘அதிகாரத்தை நோக்கி உண்மைகளை பேசுவோம்’ என்பது வரை அடங்கும். ஆனால் ஆரம்பத்தில் அ.மார்க்சிடம் இருந்த தெளிவான நிலைப்பாடு அவரது பின்னைய எழுத்துக்களில் இருப்பதாகத் தெரியவில்லை. நான்தான் புதிதாகச் சொல்லுகின்றேன் என்று பறைசாற்றுவது போன்று இருக்கின்றது அவரது எழுத்துக்கள். இன்று தமிழக சிந்தனையாளர்கள் பலரது நிலை இதுதான் தங்களுக்கான ஒரு குழு, ஒரு சஞ்சிகை அதனுடாக முட்டி மோதிக் கொள்வது இப்படியாக போகின்றது தமிழக சிந்தனைப் பரப்பு. இதனை எப்படி ஈழத்தில் தொடர முடியும்? அ.மார்க்ஸ் போன்றவர்கள் யாரை தாம் எதிர்க்க வேண்டுமென்று சதா பேசி வருகின்றார்களோ அவர்கள் மத்தியிலோ எந்த கோஸ்டி வாதமோ பிடுங்கல்களோ இல்லை. இந்து ராம், துக்களக் சோ, சுஜாத்தா, சுப்பிரமணிய சுவாமி இவர்களுக்கிடையில் எங்கு இருக்கின்றது முட்டி மோதல்கள். திராவிட அரசிலை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் அவர்கள் மத்தியில் என்ன முரண்பாடிருக்கின்றது? அ.மார்க்ஸ் இது குறித்து தனது கவனத்தை சிறிது செலுத்துவாராக இருந்தால் அது தமிழகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு பயனுடையதாக இருக்கும். அ.மார்க்ஸ் மீது எனக்கு மதிப்புண்டு அ.மா, ரவிக்குமார், வேல்சாமி ஆகியோரின் தொகுப்பாக 1994இல் வெளிவந்த தேசியம் ஒரு கற்பிதம் என்னும் நூலில் இடம்பெற்ற எடவேட் செய்தின் கட்டுரையின் தலைப்பு ‘பாலஸ்தீன பிரச்சனையும் அறிவுத்துறை அயோக்கியத்தனமும்’ என்பதாக இருந்தது. அ.மார்க்சும் எதிர்காலத்தில் இப்படியொரு தலைப்பிற்கான ஆய்வுப் பொருளாகிவிடக் கூடாது என்பதுதான் எனது கவலை.

 

பிற்குறிப்பு - 1
மேற் குறிப்பிட்ட அ.மார்க்ஸின் நேர்காணல் ஈழத்தின், அக்கரைப்பற்றிலிருந்து வெளிவருகின்றது ‘பெருவெளி’ என்ற சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளது. ‘இலங்கையில் தமிழ் கிடையாது தமிழ்கள்தான்’ உண்டு என்ற தலைப்பில் இந் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இச்சஞ்சிகைக் குழுவினர் ஈழத்து தமிழ் இலக்கியம் என்பதை ஒரு பெருங்கதையாடல் என்றும் அதனை நிராகரித்துச் செயற்படுவதே தமது நோக்கமென்றும் கூறுகின்றனர். ஆனால் இதே குழுவினரே முஸ்லிம் தேச இலக்கியம் என்பதை கட்டமைக்கின்றனர். தமிழர் தேசம் என்பது பெருங்கதையாடல் என்று நிராகரிக்கும் இவர்கள் முஸ்லிம் தேசம் என்று குறிப்பிடுவது வேடிக்கையானதாகும். பின்நவீனத்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக குறிப்பிடும் இவர்கள் அடிப்படையிலேயே மதவிரோதப் போக்கு கொண்ட மேற்கின் பின்நவீன சிந்தனையை எவ்வாறு இஸ்லாமிய சிந்தனையுடன் இணைக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அத்துடன் சமீப காலமாக என்னிடமிருக்கும் ஒரு கேள்வி இஸ்லாமிய தமிழர்கள் என்பது பிழையானது அது முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது அப்படியானால் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு எப்படி சாத்தியப்படும் இது உங்கள் சிந்தனைக்கு.

பிற்குறிப்பு - 2
தமிழகத்தைவிட ஈழத்தில்தான் சாதியப்பிரச்சனை அதிகம் என்ற அ.மார்க்சின் கருத்து அவர் ‘பேசாப் பொளுளை பேச நான் துணிந்தேன்’ என்ற தலைப்பில் தீராநதியில் எழுதிவரும் பத்தித் தொடர் ஒன்றில் குறிப்பிடப்பட்டது. மண் திரைப்படம் குறித்த தனது அபிப்பிராயத்தை வெளியிடும் போதே இந்த கருத்தை குறிப்பிட்டிருந்தார்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)
 

 


     இதுவரை:  24713978 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4240 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com