அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தாசீசியஸ் நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கானா பிரபா  
Monday, 04 June 2007
பக்கம் 8 of 8

கானா பிரபா: தொடர்ந்தும் தமிழ்க் குடில் வாயிலாக நீங்கள் எந்தெந்த  முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றீர்கள்..?

தாசீசியஸ்: தமிழ்க் குடில் என்னுடைய கனவென்றே சொல்லலாம்.  அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்குமோ தெரியாது. இந்த தமிழ்க்  குடிலை தமிழ் ஊடகர்களின், தமிழ்க் கவிஞர்களின் குடிலாக நான்  மாற்றியமைக்க விரும்புகிறேன். முதலில் இதை இருபத்திநான்கு நேர வானொலியாக ஆக்க முனைகிறேன். வேவ்வேறு நாடுகளில் உள்ள  வானொலிகள். வேவ்வேறு நாடுகளில் உள்ள ஒலிபரப்பாளர்கள்  அவர்கள் சிறிது சிறிது நேரமெடுத்து இதில் பங்கெடுத்துக்கொண்டால்  இதை இருபத்திநான்கு நேர வானொலியாக மாற்றலாம். ஏனென்று  சொன்னால் நீயூசிலாந்தில் இருந்து அமெரிக்கா வரையில் உள்ள  நாடுகளில் எங்களுடைய மக்கள் வாழ்கிறார்கள். அங்கே  கலைஞர்களும் வாழ்கிறார்கள், ஒலிபரப்பாளர்களும் வாழ்கிறார்கள்.  ஒலிபரப்பில் ஆர்வமுள்ளவர்களும் இருக்கிறார்கள். இப்பொழுது  எல்லோருடைய வீடுகளிலும் கணனி இருக்கிறது. அதில் இருந்து  தங்கள் குரலைக் கொடுப்பதற்கு ஒரு மைக் ஒன்றுதான். அதைத்  தமிழ்க் குடிலோடு இணைத்துவிட்டால் இருபத்திநான்கு மணிநேரமும் அந்தச் செய்தி போய்க்கொண்டே இருக்கும். அதற்கான ஒரு  திட்டத்தை நாங்கள் அழகாக தயாரித்து வைத்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாங்கள் வானொலியாளர்களோடு தொடர்பு  கொண்டிருக்கிறோம். உங்களிடம்கூட நான் பகிரங்கமாக இந்த  வேண்டுகோளை விடுக்கிறேன். நீங்கள் நிறைய எங்களுக்கு உதவி  செய்யலாம். ஏனென்றால் இது எங்களுக்காக அல்ல இது தமிழ்  மக்களுக்காக. இன்னுமொன்று அதில் செய்ய விரும்புகிறேன். பள்ளிப் பிள்ளைகள் தொடக்கம் பெரிய கலைஞர்களாக உள்ளவர்கள்  தங்களுடைய ஆக்கங்களை, தங்களுடைய குரலில் பதிந்து  வெளியிடுவதற்கான ஒரு தளமாக இந்த தமிழ்க் குடிலை நாங்கள்  ஆக்கவேண்டும். ஒரு கவிஞனுடைய குரலிலே அவனுடைய கவிதை  இங்கு பதியப்பட வேண்டும். அதற்கான திட்டங்களையும் இப்போது  செய்துகொண்டிருக்கிறேன். பிரான்ஸில் இருந்து கலைஞர்களையும்,  பள்ளிப் பிள்ளைகளையும் திரட்டித் தருவதற்கு பரா என்ற நெல்லியடி பெருங் கலைஞர் முன் வந்திருக்கிறார். கனடாவிலும் ஒரு சிலர் முன் வந்திருக்கிறார்கள். ஒன்று இரண்டு வானொலிகள் ஓமென்று  இருக்கிறார்கள் அவர்களும் இணைந்து கொண்டால் நாங்கள் தமிழ்க்  கலைஞர்களை ஒன்று திரட்டும் ஒரு தளமாக அதைப் பயன்படுத்திக்  கொள்ளலாம். இந்த தமிழ்க் குடிலுக்குள் ஒவ்வெருவருடைய குரலும்  வரவேண்டும் அவர்களுடைய ஆக்கங்களும் வரவேண்டும். இனி  குறிப்பாக வளரும் பிள்ளைகளுடைய ஆக்கங்கள் அவர்கள் கற்கும்  மொழிகளில் ஜேர்மன் மொழியில், பிரஞ்சு மொழியில், ஆங்கிலத்தில்  இவைகள் கூட வரவேண்டும். ஏனென்றால் அவர்களை நாங்கள்  தூண்டிவிட்டால் அடுத்த கட்டமாக அவர்கள் தமிழிலும் தரத்  தொடங்குவார்கள். இதற்கெல்லாம் உங்களைப் போன்றவர்கள்  அனுபவசாலிகள், இந்தத் துறையில் ஈடுபட்டவர்கள், கவிஞர்கள்,  கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்  எல்லாருமாகச் சேர்ந்து ஒரு நல்ல தமிழ்க் குடிலாக அமைக்க  உதவவேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதே போலத்தான் நான்  'நாராய் நாராய்' என்னும் நாடகப் பணயணத்தை களரி  உறுப்பினர்களோடு பத்தாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில்  மேற்கொண்டேன். அதன் நோக்கம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  நடப்பது போன்று உலகத் தமிழ் நாடகக் கூட்டமும் மூன்று  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவேண்டும். அப்படியான ஒரு  திட்டத்தையும் அன்ரன் பொன் ராஐா வளர்த்து எடுத்துக்  கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தில்கூட கலைஞர்கள் பங்கெடுக்க  வேண்டும். அங்கே நாங்கள் ஒன்றுகூட வேண்டும். அந்த ஒன்றுகூடல்  பெரிய ஒரு சக்தியாக மாறவேண்டும். புலம்பெயர்ந்த இடங்களுக்குப்  போகும் போது அடுத்த கட்டத்துக்கு எங்களை நகர்த்திச் செல்ல  உதவியாக இருக்கும். அப்படித்தான் பல மொழிகளில் செய்து  கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வசதிகள் பெருகிக்கொண்டிருக்கும் போது தமிழ்மொழியில் நாங்கள் ஏன் செய்யக்கூடாது என்பதுதான்  என்னுடைய பிரார்த்தனை, என்னுடைய வேண்டுகோள் என்னுடைய  கனவு. உங்களைப் போன்றவர்களுடைய உதவியோடு அது  நிறைவேறும் என்பது என்னுடைய எண்ணம்.

ஒலிப்பதிவை எழுத்தாக்கியவர்: வசீகரன்

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)
 




     இதுவரை:  24713450 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6312 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com