அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 24 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


முட்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 31 October 2007

முட்கள் எப்போது தோன்றின?
முதலில் தோன்றியவை முட்கள்தானா?

இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.

ஏதோ ஒன்றைப் பாதுகாக்க வேண்டியே
முட்கள் முதலில் தோன்றியிருக்க வேண்டும்.

தன்னைப் பாதுகாக்க இயலாத
உயிர்க் கலம் ஒன்று
தான் தாக்கப்படுகையில்
ஏதோவோர் வகையில் எதிர்க்கவே செய்யும்.
இறக்குமட்டிலும் இந்த எதிர்ப்பு
இருக்கவே செய்யும்.

இந்த எதிர் முனைப்பு
இறந்த பின்னரும்
இறவாமலேயிருந்து மறுபடி பிறக்கையில்
கூடவே பிறக்கின்றதா?

பிறப்பெடுத்த உடலுக்குள்
அதுவோர் முனைப்பாய், மொக்காய்
உருவெடுக்கின்றதா?

ஆயிரம் ஆண்டுகளின் பின்னர்
ஒரு புழுவுக்கு கொம்பு முளைக்கும்
இயற்கையின் அதிசயம் இதுவா?

கொம்பாய், பல்லாய்
முள்ளாய், விஷமாய்
இங்கு இருப்பவை யாவும்
தற்பாதுகாப்புக்கான கருவிகள்தானா?

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  24799926 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3668 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com