Monday, 24 December 2007
ஏகாந்தம் இனிது எனச் சொன்னாள் அவ்வை. ஏகாந்தம் தனிமை இரண்டுமே ஒன்றா?
நான் நானாகவே என்னைத் தனிமைப் படுத்தல்தான் ஏகாந்தமா?
பிறரால் நான் தனித்து விடும்போதுதான் நான் தனிமைப் படுகிறேனா?
எவரும் என்னை பொருட்படுத்தவில்லை என்பதை உணர்கையில் நான் அடையும் தனிமை சோகம் தருவதுதான்!
ஆனால்,
நானே யாவற்றையும் விட்டொதுங்கித் தனியே இருக்கும்போது நான் அனுவவிக்கும் உணர்வு அதுதான் ஏகாந்தமாக இருக்க வேண்டும்!
எனவே ஏகாந்தம் இனிதுதான்.
ஏன்?
எல்லா உறவுகளும், நட்புகளும் என்னை மறந்து பிரிந்துவிட்ட வேளையில் என்னுடன் கூடவே இருக்கின்ற இறுதி நண்பன் ஏகாந்தமே!
இந்த நண்பன் என் நினைவுகள் மறையும் வரையில் என்னுடன் கூடவே இருப்பான்!
இவன்வேறு, என் நினைவுகள் வேறு அல்ல!
என் நினைவுகள்தான் எனது நல்ல நண்பன். ஆனால், எனது நினைவுகள்தான் நான்.
எனவே நல்ல நண்பன் நானேதான்! |