அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 11 April 2026

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 5 arrow நளாயினியின் இரண்டு கவிதைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நளாயினியின் இரண்டு கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நளாயினி தாமரைச் செல்வன்  
Monday, 14 July 2003

1. நம்பிக்கை

வசந்தங்கள் எல்லாமே
தொலைந்து போனதாய்.

யாரும் என்பெயர் கொண்டு
அழைத்தால் கேளாதவளாய்
அல்லது கதைக்கப்பிடிக்காதவளாய்.

யாராவது சோகமாக இருந்தால்
ஓடிச்சென்று ஆறுதல் கூறவேண்டும்
என்ற பரபரத்த உணர்வாய்

ஆனாலும் கடினப்பட்டு
என் உணர்வை சாகடித்துக்கொள்கிறேன்.
யாரையுமே தெரியாத இந்த
வெள்ளையர் கூட்டத்துள்.

இதனால் என் வாழ்வே
சூனியமானதாய்.

இப்போதெல்லாம் என்னைச்சூழ
மிருகங்களின் சாயலில்
ஒத்த குணங்களில்
என்னைப் பயமுறுத்தும்
குரல்களாய்.

ஆனாலும் எனக்கான
நட்பின் குரலாய்
என் உணர்வின் குரலாய்
எங்காவது
ஓர் உள்ளம்
இருந்திடாதா என்ன..!!!?


நளாயினி தாமரைச்செல்வன்.
28-04-2003

2. எனக்குள் நீ!!

நீர்த்தடாகத்துள்
விழும் மழைத்துளியாய்
கண்மூடி கிறங்கி ரசிக்கிறேன்.

சின்ன சின்ன
குமிழ்களாய்
தோன்றுவதும்
மறைவதுமாய்--

இப்படித்தான்
உன் நினைவுகள்
எனக்குள் இப்போ.

கண் மூடி கிறங்கி
சலசலப்பை உணர
சுகமாகத்தான் உள்ளது.

குமிழ்கள் உடையும்போது
ஏற்படும் நீர்ச்சலனம்
மெது மெதுவாக
எங்கும் வியாபித்து
தடாகத்துள் அலை போன்ற
அசைவைத்தருவது போல்
உயிரின் அந்தம் வரை நீயும்
அதிர்வை தரத்தான் செய்கிறாய்.


நளாயினி தாமரைச்செல்வன்
11-1-2003


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 11 Apr 2026 16:32
TamilNet
Intensifying rivalries between major powers are reshaping global geopolitics and elevating the strategic importance of the Indian Ocean. As the unipolar dominance of the United States faces increasing challenges from Russia and China, emerging fractures within the Western alliance system and expanding military confrontations across several regions are drawing renewed attention to the island of Sri Lanka. Situated at a critical maritime crossroads, the island is becoming increasingly significant within the evolving strategic calculations of competing global powers.
Sri Lanka: Multipolar rivalries elevate Indian Ocean geopolitics


BBC: உலகச் செய்திகள்
Sat, 11 Apr 2026 16:07


புதினம்
Sat, 11 Apr 2026 16:07
















     இதுவரை:  28511529 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4654 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com