அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 12 September 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 5 arrow ஈழம் - மலேயா: ஈழத்து இலக்கிய சாட்சியம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழம் - மலேயா: ஈழத்து இலக்கிய சாட்சியம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Wednesday, 14 July 2004

(இரண்டாம் பகுதி)

மலேயா ஈழம் பற்றி முதல் கட்டுரை எழுதி முடித்ததன் பின்னர் வேறு சில நு}ல்கள் படிக்கக் கிடைத்தன. அதனால்தான் இந்த இரண்டாம் பகுதி எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்நு}ல்கள் பெரும்பாலும் ஈழம் - மலேயா உறவு பற்றி மலேசிய கண்ணோட்டத்தில் விபரிப்பவையாகும். இவற்றில் வெளிவந்த சிலவற்றையே இங்கே தொகுத்துக் கூற முயன்றுள்ளேன். அத்துடன் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தியையும் இங்கே கூறவேண்டியவனாக உள்ளேன். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் இணைப் பேராசியராகப் பணியாற்றிவரும் ச.சத்தியசீலன் அவாகள் மலேசிய புலப்பெயர்வு பற்றி ஆய்வு செய்துள்ளாளர். அவருடைய முதுமாமணிப் பட்டத்திற்கான அவ்வாய்வேடு விரைவில் நு}ல்வடிவம் பெற உள்ளது. அவ்வாய்வேடு இப்புலப்பெயர்வு பற்றிய விரிவான தகவல் தரவுகளைக் கொண்டிருக்கும் என நம்பலாம். தற்போது எனது விடயத்திற்கு வருகின்றேன்.

முதலில் 'மலேசியா சிங்கப்பூரில் இந்தியர்கள்" என்னும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதான நு}லினுள்ளிருக்கும் சில விடயங்கள் கவனத்திற்குரியவை. இந்த வரலாற்று நு}ல் சின்னப்பா அரசரெட்ணம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த நு}ல் பிரித்தானியரால் மலேயாவுக்கு அழைத்துவரப்பட்ட இந்தியர் இலங்கைகயர் பற்றிய வரலாற்றைப் பேசுகின்றது. பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியில் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் அதிகார வர்க்கதினரின் உதவிக்கு தகமைவாய்ந்த உதவியாளார்கள் பெருமளவில் தேவைப்பட்டனர். இத்தேவைக்கு மலாயாவுக்கு வெளியே இருந்து முதன் முதலில் அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அந்நு}ல் பதிவு செய்துள்ளது. இப்படியான முதல் தொகுதி இலங்கைத் தமிழர்கள் 1890ம் ஆண்டளவில் வந்து பணியாற்றத் தொடங்கினார்கள் என்றும் அது கூறுகின்றது. இவர்கள் பெரும்பாலும் தொடருந்து போக்குவரத்துச் சேவையிலும் தபால்தந்திச் சேவையிலும் கணக்காய்வு சேவையிலும் திறைசேரியிலும் பணியாற்றினராம். இதன் பின்னரே அதாவது 1920களிலேயே இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த மலையாளிகள் மலாயாவுக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த இரு சமூகத்தவர்களும் மலாயாவில் உள்ள தோட்டத் தொழிலாளர்களால் வெறுக்கப்பட்டனர் என்றும் அந்த நு}ல் குறித்துள்ளது. இதனை இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலுடன் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.
அங்கு வாழ்ந்த இலங்கைத் தமிழாரான யாழ்பாணத்தவரைப் பற்றி மலாயாவின் தமிழ் எழுத்தாளரான சை.பீர்முகம்மது 'மண்ணும் மனிதர்களும்" என்ற நு}லில் இப்படி பதிவு செய்திருக்கிறார்.
'..அப்போது இராணுவத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனது மேலதிகாரி மிகவும் கெடு பிடிக்காரர்.யாரைக் கண்டாலும் எரிந்து விழுவார். எப்பொழுதும் சிடுசிடுதான். அவரைக் கண்டாலே அனைவருக்கும் ஒருவித பயம். கதை கட்டுரை என்றும் பொதுவாழ்க்கை என்றும் பத்திரிகைகளில் எனது பெயர் வந்து கொண்டிருந்ததால் ஒருநாள் என்னை அழைத்து 'நல்ல தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் கொடுப்பா" என்று கேட்டார். அவர் யாழ்பாணத் தமிழர். வெளியில் எதுவும் சாப்பிட மாட்டார். கையில் எப்பொழுதும் பிளாஸ்கில் தேநீர் கொண்டு வந்து விடுவார்."
இதனை மாதிரிகளில் ஒன்றெனக் கொண்டால் அது யாழ்பாணத்தவரின் மனோநிலை அல்லது குணாம்சத்தை விளக்கும் கண்ணாடி எனக்கருதலாம்.
ஈ ழம் மலேயா பற்றிய உறவுகளை மேலும் அறிந்து கொள்வதற்கு மலேசிய தமிழ்க் கவிதைக் களஞ்சியம் உதவுகின்றது. இது கவிஞர் முரசு நெடுமாறனால் மலாயாவின் ஒரு நு}ற்றாண்டு கால கவிதைகளில் இருந்து தொகுக்கப்பட்ட பெரிய அளவிலான தொகுப்பாகும். இதில் மலேசியத் தமிழர் வரலாற்றில் இலங்கைத் தமிழர் என்னும் தனிப்பகுதி இடம்பெற்றுள்ளது.

'1920களில் அரசு பணிகளில் ஈழத்தமிழர் பேரளவு நிரம்பியிருந்தனர். பணிக்கு ஆள் தேவைப்படும் போதெல்லாம் தங்கள் உறவினர்களை மட்டுமே அப்பணியில் சேர்த்தனர். 1929இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பலர் வேலை இழந்தனர். பலர் தங்கள் தாயகம் திரும்பினர்....
... இந்நிலையில் கூட அரசு பணியகங்கள் முதலாய இடங்களில் ஈழத்தமிழருக்கிருந்த இடம் தொடரவே செய்தது. கூடுமானவரை இவர்கள் தம் இனத்தவரைத் தவிர மற்றவர் வேலைவாய்ப்பு பெற இடம் தருவதில்லை. இதனால் மற்றவர்-குறிப்பாயத் தமிழகத் தமிழரின் சினத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாயினர். பல நிலைகளில் தமிழ்நாட்டுத் தமிழர்க்குச் சேரவேண்டிய வாய்ப்புகளைப் பறித்து விட்டவர்களாய் ஈழத்தமிழர் கருதப்பட்டனர்.
கல்வி பொருளாதாரம் சமுதாய நிலைகளில் தமிழகத் தமிழரைவிட உயர்நிலை பெற்றிருந்த ஈழத்தமிழர் தமக்கெனச் சமுதாய, பொருளாதார, சமய, அரசியல் இயக்கங்களை அமைத்துக் கொண்டனர். கோயில்கள் உட்பட அவர்தம் அமைப்புகளில் தமிழகத் தமிழர்க்கு இடந்தரவில்லை.
அரசு நியமனப் பதவிகளில் தொடக்கத்தில் இந்திய நாட்டு தமழர்க்கு வாய்ப்பே இல்லாதொழிந்தது. அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கே போய்ச் சேர்ந்தன."

ஆனால் இத்தனைக்கும் யாழ்ப்பாணத் தமிழர் அங்கு மிகப் பெருந்தொகையாக வாழவில்லை. மக்கள் கணப்பெடுப்பின் படி 1947ம் ஆண்டில் 15,411ஆகவும், 1970களில் 24,436ஆகவும், இருந்த இவர்கள் 1991ல் அண்ணளவாக 13,000 பேராக கணக்கிடப்பட்டுள்ளனர். ஆங்கிலத்தைத் தாய்மொழியாக வரித்துக்கொண்டு அதனையே வீட்டு மொழியாக மாற்றிக் கொண்டு அதே வேளையில் அழுத்தமான சமயப்பற்றோடு வாழும் இவர்கள் தமிழிலக்கியப் படைப்புகளில் கருத்துச் செலுத்தியதில்லை. இதற்குச் சான்றாக தொகுக்கபட்டுள்ள இந்த மலேசிய தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தினை காட்டலாம். 256 கவிஞர்களின் கவிதைகளை கொண்டுள்ள இந்த தொகுப்பில் இரண்டு யாழ்ப்பாணத் தமிழரின் கவிதைகளே இடம்பெற்றுள்ளன. அவையும் கடவுள் துதிப் பாடல்களே. வாழ்வியல் பேசும் எந்தகவிதையும் அவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் யாழ்ப்பாணத்தைச் சோந்த பெற்றோருக்கு மலேசியாவில் பிறந்த இராணி மூர்த்தி கலை இலக்கிய ஆர்வலராகத் தன்னை அடையாளங்காட்டி உள்ளார். இடதுசாரி ஐனநாயகத் சிந்தனை கொண்ட இவருடைய பெற்றோர் யாழ்ப்பாண மரபுச் சிந்தனைகளில் இருந்து தம்மை விடுவித்து வளர்த்தாக பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இலண்டனில் வசித்துவரும் இவர் பிரித்தானிய ஊடகங்களில் ஒன்றான பிபிசி-2 ல் பணியாற்றுகிறார். 'தனி நடிப்பு" என்னும் அரங்காற்றுகைக் கலைஞராக திகழும் இவர் அண்மையில் தனது தாயகமான இலங்கை சென்று தனது அரங்காற்றுகைகளை நிகழ்த்தியிருந்தார். தான் கலைத்துறையில் ஈடுபடுவதற்கு 1969ல் மலேசியாவில் நிகழ்ந்த இன வன்முறைகளே காரணமென பேட்டியொன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளையில் கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என யாழ்ப்பாணத்தில் நன்கு அறியப்பட்ட திரு. மு.கார்த்திகேசன் அவர்கள் மலேசியாவில் பிறந்தவர் என்று அறிய முடிகின்றது. 1919ல் மலேசியாவில் பிறந்த இவர் தனது 18 வயதுவரையில் மலேசியாவில் வாழ்ந்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் பொதுவுடமை இயக்கக் கருத்துக்களைப் பரப்புவதிலும் அவ்வியக்கத்தைக் கட்டுவதிலும் அவன் முன்னோடியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியப் புலப்பெயர்வு இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் எவ்வகை விளைவகளை ஏற்படுத்தியது என்பதனை கலாநிதி சத்தியசீலன் அவர்களின் ஆய்வு நு}ல் வெளிவந்ததும் படித்தறியலாம் என நம்புகின்றேன்.
- கி.பி.அரவிந்தன்


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 12 Sep 2024 17:11
TamilNet
Even though I first met Viraj Mendis in Geneva, his reputation as a fearless advocate for Tamil liberation preceded him. The movement respected Viraj, and many of our leaders in the diaspora and the homeland sought his clarity and insight. I consider myself fortunate to have worked with him and learned from him.
Sri Lanka: Viraj exposed West?s criminalization of Tamil struggle


BBC: உலகச் செய்திகள்
Thu, 12 Sep 2024 17:08


புதினம்
Thu, 12 Sep 2024 17:09
















     இதுவரை:  25647899 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10723 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com