அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மெடம் போவெரி - காலத்தை வென்ற பிரெஞ்சு நாவல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஆங்கிலத்தில் : எட்வெர்ட் அஸ்க்ரொவ்ற்  
Wednesday, 14 July 2004

தமிழில்: திருவேணிசங்கமம்

மெடம் போவாரி உள்ள10ர் டொக்டர் ஒருவரின் மனைவியைப் பற்றிய கதையாகும். தனது திருமணத்தால் மகிழ்ச்சியடையாத அவள் இருவரைக் காதலிக்கிறாள். வட்டிக்குப் பணம் கொடுப்பவனும் வியாபாரியுமான ஒருவனிடம் கடன் வாங்குகிறாள். கடனை அடைக்க முடியாது போகவே அவள் வீடு 'சீல்" வைக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள். 1856ல் இந்நாவல் வெளி வந்தது. அந்நாட்களில் இங்கிலாந்திலும் பிரான்சிலும் விக்டோரியன் வகையிலான பொய்மைத்தனம் நன்கு வேரூன்றி இருந்தமையினால் ஒரு முறை கேடான நு}லை வெளியிட்டமைக்காக நு}லாசிரியர் கஸ்டவ் பிளேவ்பெர்ட்டும் வெளியிட்டாளரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். அதே வேளை பௌடலயர் என்னும் கவிஞர் மீதும் இவ்வாறானதொரு அவது}று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவரின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. பிளெவ்பெர்ட்டுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம். மெடம் போவெரி சில கண்டிக்கத்த்க்க அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும், 'கீழ்த்தர உணர்ச்சியைத் திருப்திப்படுத்தல், மட்டற்ற காமவெறியைத் து}ண்டுதல், அல்லது எல்லோராலும் மதிக்கப் படும் விடயங்களை கிண்டல் செய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டவை" போன்றதல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இக்குற்றச்சாட்டின் காரணமாக பிளெவ்பெர்டின் நு}ல் கணிசமான விற்பனையைப் பெற்றுக் கொண்டது. அதே வேளை இலக்கிய விமர்சகர்களாலும் ஒரு வெற்றிகரமான படைப்பு என்று புகழப்பட்டது. பிரெஞ்சு மொழியில் முதல் முதல் எழுதப்பட்ட யதார்த்தவகை நாவல் இதுவாகும். அது வரையும், எல்லா மொழிகளிலும் உள்ளது போல் உயர்குல மக்களையும் வீர தீர சாகஸ செயல்களையும் பாடுபொருளாகக் கொண்டு இலக்கியம் படைக்கப்பட்டு வந்தது. யதார்த்தவாதிகளாக இருந்த பால்சாக், ஸ்டென்தால் போன்றவர்கள் கூட குற்றவாளிகள், கொள்ளைக்காரர்களைப் பற்றி போகிற போக்கில்தான் சில யதார்த்தமான சித்தரிப்புக்களைச் செய்தனர். மத்திய தர வர்க்கத்தைப் பற்றியோவெனில் Nஐன் ஒஸ்டின் படைப்புகளில் காணும் பாங்கான பாத்திரப் படைப்புகளையே காணமுடிந்தது. நாட்டுப்புற வாழ்வும் அதனோடு இணைந்துள்ள மக்களும் வைத்தியர், மதகுரு, மருந்துக்கடைக்காரர், நொத்தாரிசின் லிகிதர், வரி அறவிடுவோர், சிறு நிலச்சொந்தக்காரர் இலக்கியத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். இவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இந்நு}ல் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் பிளெவ்பெர்ட் இதை முற்றுப்படுத்த ஆறு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இழிந்த பொருளைப்பற்றியதாயினும் ஒரு நிகரற்ற எழுத்து நடையில் நு}ல் எழுதப்பட்டுள்ளது. ஒரு சொல்லோ, வசனமோ தேவையில்லாமல் இடம்பெறக்கூடாது என்ற பிரக்ஞை ஆசிரியருக்கு இருந்திருக்கிறது. ஒரு இசைக்கலைஞன் போல அவர் செயல்பட்டார். பால்ஸாக், டிக்கன்ஸ் போன்றவர்களைப் போல் அல்லாமல், அவர்கள் படைப்பாற்றல் மிக்கோர் ஆயினும் உடனுக்குடன் பிரதிகளை உற்பத்தி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டிருந்தனர். ஒரு தனிப்பக்கத்துக்காக பிளெவ்பெர்ட் எட்டு நாட்களுக்கு மேல் செலவிட்டார். நாவலில் வரும் ஒவ்வொரு இடமும் பொருளும் சூழ்நிலைகளும் மனிதர்களும் பூரணமாக வெளிப்பாடு பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கிருந்தது. எழுதியவைகள் எல்லாவற்றையும் பலமுறை சத்தம் போட்டுப் படிக்கப்பட்டு, அவைகளின் சீரான ஓசை நயம், நடையோட்டம் என்பன நன்கு பரிசீலிக்கப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டன. 'தன்னில் இணைந்துள்ள எல்லா மூச்சுக்களையும் வெளியிடும் போதில் மாத்திரமே ஒரு சொற்றொடர் உயிர்ப்புடையது. உயிர்ப்பற்றவை இதய உணர்வுகளை தொண்டையில் அடைத்து விடும்" என்று அவர் கூறுவார்.

நு}ற்றைம்பது வருடங்களாகியும் மனச்சிக்கல்கள் கொண்ட அத்தியாயங்கள் நிறைந்த இந்நு}ல் அதன் எழுத்து நடை, உணர்வின் தௌ;ளிய சித்தரிப்பு, துல்லியமான வர்னணைகள் போன்றவற்றால் நினைவில் நிற்கக்கூடியதாக உள்ளது. உதாரணத்துக்கு எம்மா போவெரி இரண்டாவது தடவையாக வழக்குரைஞரின் லிதிகர் லியோனுடன் காதல் வசப்படுவதை யாரால் மறக்க முடியும்? அவர்கள் றோயனில் உள்ள மாதா கோவிலில் சொத்துரிமை மாற்றுவது சம்பந்தமான அலுவலில் ஈடுபட்டுகொண்டிருக்கிறார்கள். அப்போது கோயிற்பணியாள் அக்கோயிலின் வரலாற்றைச் சொல்லி அவர்களை 'போரடிக்க" வைக்கிறார். இந்த அறுவையிலிருந்து தப்புவதற்காக நைசாக ஓடிப்போய் ஒரு வாடகை வண்டியில் ஏறிக்கொள்கின்றனர். வண்டி போகிறது. அது நிறுத்தப்படும் போதெல்லாம் அதனை நிறுத்த வேண்டாம் என்று வண்டிக்காரனை லியோன் அதட்டுகிறான். இப்படி வண்டி மாலை வரையும் இலக்கில்லாமல் எங்கெல்லாமே அலைகிறது. அந்நிகழ்வு குறிக்கோள் அற்ற எம்மாவின் வாழ்க்கையின் குறியீடாகவும் நாவலில் அமைந்துள்ளது.

'கப்பல் துறையில், பாரவண்டிகளுக்கும் பீப்பாய்களுக்குமிடையில், வீதிகளில், முடுக்குகளில் நின்று யாதுமறியா மக்கள், அந்தப் பிரதேசத்துக்கு அசாதாரணமான அக்காட்சியை, ஒரு கல்லறையையும் விட இறுக்கமாக மூடப்பட்ட வண்டியொன்று காற்றினால் அள்ளுண்டு போகும் படகுபோல் செல்வதைப் பார்த்தனர். மத்தியானமளவில், ஒரு வெட்ட வெளியில், சூரியனின் கிரணங்கள் பழைய தகரலாம்பில் பட்டு பயங்கரமாக தெறித்துக் கொண்டிருக்கும் போது, மஞ்சள் கன்வாஸ் துணியில் உள்ள சிறிய யன்னல் திரைச்சீலைகூடாக வெற்றுக்கரமொன்று நீண்டு, கிழிக்கப்பட்ட காகிதத்துண்டுகளை வீசியது. அவைகள் 'வண்ணத்திப் பூச்சிகள் போல் பூத்துக்கிடந்த செம் புல்வயல் வெளிக்கு மேலால் பறந்து போயின"

நோர்மண்டிப் பிரதேச விவசாயி ஒருவரின் மகளான எம்மா போவெரி ஒரு கொன்வென்ரில் கல்விகற்றவள். படிக்கும்போது புத்திசாலித்தனத்துக்கும் துடுக்குத்தனத்துக்கும் பேர் பெற்றவள். வேத பாடத்தில் குருவானவர் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பாள். இரத்தம் வடியும் இதயத்துடன் சிலுவையில் தொங்கும் இயேசுவையும் நொடிந்துபோன ஆட்டுக்குட்டியையும் நேசித்தாள். ஆயினும் ஆராதனைக்கு செல்லாமல் மட்டம் போடுவாள். பாவமன்னிப்பு கேட்கும் போது, குருவானவர் முணுமுணுத்துக் கொண்டிருப்பதை, முழங்காலில் நின்று, இரும்புக் கிராதியை நோக்கி கைகளை நீட்டி, சற்று நேரம் வேடிக்கை பார்க்க விரும்பி சிறிய பாவங்கள் சிலதை இட்டுக்கட்டிச் சொல்வாள். இவ்விதமாகவே அவளுடைய குணபாவம் அமைந்திருந்தது.

கொன்வென்ரில், பட்டுத்துணிகளைத் தைக்கும் வேலைக்கார கிழவி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு போன நு}ற்றாண்டு கீர்த்தனைகள் நல்ல மனப்பாடம். அவள் சிறுமிகளுக்கு காதல் கதைகளையும், நாவல்களையும் கொண்டுவந்து கொடுப்பாள். அவற்றில் காதல் வெறிகொண்ட வீரர்களின் தறிகெட்ட குதிரையோட்டங்கள், வசந்தகால கானகங்களில் மயங்கித்திரியும் மங்கையர்கள், மற்றும் வாக்குறுதிகள், விம்மல்கள், கண்ணீர்கள், நிழற்சோலையில் கூவும் குயில்கள் இத்தியாதி அம்சங்களுடன் சிங்கம் போன்ற உறுதியும் ஆட்டுக்குட்டி போன்ற மென்மையும் கொண்ட வீரர்களின் காதல் விவகாரங்கள் நிறைந்திருக்கும்.

அவளுடைய தந்நை கொன்வென்ரிலிருந்து அவளை அழதை;துச் செல்லும் போது இந்த வகைமாதிரியான சிறுமியாக அவள் உருவாகி இருந்தாள். அவளின் பிரிவு பற்றி கன்னியாஸ்திரிகள் பெரிதாக அலட்டிகொள்ளவில்லை. பத்தொன்பதாம் நு}ற்றாண்டின் நடுக்கால கட்டத்தின் மனோரதியக் கற்பனைகள் நிறைந்த பெண்ணாக அவள் உருவாகியிருந்தாள். இது பற்றி பிளெவ்பெர்ட் எழுதுகையில் 'அவள் பூக்களுக்காகவே சேர்ச்சையும்(தேவாலயம்) பாட்டின் சொற்களுக்காகவே இசையையும் உணர்ச்சித் து}ண்டலுக்காகவே இலக்கியத்தையும் விரும்பினாள். புதிரான நம்பிக்கைகள் கண்டிப்புகளாக மாறி சிரமம் தருவதால் அவைகளை எதிர்த்தாள். இந்த அம்சங்கள் அவளின் முரண்பாடான குணவியல்புகளாக இருந்தன."

அவளுக்கு எவ்வித பிரேமையும் ஏற்படுத்தாத, எதிலும் ஈடுபாடு இல்லாத பலவீனமான உள்ள10ர் டொக்டர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி விதி அமைகிறது. மிகைப் படுத்தப்பட்ட தனது மனைவியின் மனோரதிய எண்ணங்களை சீர்படுத்துபவனாகவோ, அவள் அவ்வாறு உள்;ளாள் என்பதைத் தானும் உணர்ந்தவனாகவோ அவன் இல்லை. எம்மா தனது கணவனை மதிப்பார்வத்துடனேயே நோக்கினாள். அவன் அதை உணர்ந்ததாக இல்லை பாவம் அவன். அவன் ஒரு சாதாரணமான டொக்டர். அவ்வளவுதான்.

அவன் இரண்டு சந்தர்ப்பகளில் தரம் குறைய நேர்கிறது. பிரபு ஒருவன் மணமக்களை நடனவிருந்துக்கு அழைக்கிறான். அங்கே எம்மா விலையுயர்ந்த உடையணிந்த சீமாட்டிகள் நாகரிகமான இளைஞர்களுடன் நடனமாடுவதைக் காண்கிறாள்.

'செல்வச் செழிப்பு அவர்கள் மேனி வண்ணத்தில் பிரதிபலித்தது. அது பீங்கான் பாத்திரங்களின் வெளிறிய நிறத்தில், பட்டுத் துணிகளின் பளபளப்பில் பழைய மரத்தளபாடங்களின் மேற் பூச்சின் மினுமினுப்பில் இன்னும் மிகைபடதோன்றியது. ஒரு கைதேர்ந்த அலங்காரப் படைப்பிரிவொன்று தனது உச்ச திறமையை அங்கு வெளிகாட்டியது போல அது இருந்தது. அவர்களுடைய கழுத்து (கழுத்துப்) பட்டியில் மிகலாவகமாக அசைந்தது. நீண்ட கிருதா சட்டைக் கொலரைத் தொட்டது. முதலெழுத்துக்களுடன் பூவேலைப்பாடு செய்திருந்த கைலேஞ்சியை எடுத்து உதடுகளைத் துடைத்துக் கொண்டனர். அப்போது அதிலிருந்து நறுமணம் வீசியது. பெரியவர்களாக வளரத் தொடங்கியிருந்தவர்களின் இளமையின் விகசிப்பும் இளைஞர்களாக இருந்தவர்களில் ஒரு பக்குவமும் தெரிந்தது. அவர்களின் இயல்பான பார்வையில் சதா திருப்தியாக இருப்பதனால் ஏற்படுமும் ஒரு அமைதி இருந்தது. மென்மையான அவர்கள் இயல்பில் சாதிக்குதிரையையும் முறைதவறிய பெண்களையும் அடக்கக் கூடிய ஏதோ இனம் புரியாத முரட்டுத்தனம் ஊடுருவி இருப்பதை உணர முடிந்தது."

ஒரே இரவில் பெரும் புயற் காற்றொன்று மலை மீது ஒரு வெடிப் பொன்றை ஏற்படுத்திவிட்டது போல் இந்நிகழ்ச்சி அவள் வாழ்வில்; பெரும் பிளவை தோற்றுவிக்கக்கூடிய சிறுகீறலை உண்டுபண்ணியது. உடைந்து போன கப்பலின் மாலுமி, தனித்து தத்தளித்து அடி வானத்தில் தெரியும் கப்பல்களின் பாய்மரத்தைப் பார்த்து ஏங்குவது போல் அவளானாள். சித்திரம் தீpட்டுவதையும் இசை பயில்வதையும் கைவிட்டாள். தன்னையும் வீட்டையும் கவனியாது விட்டாள். நரை நிற பருத்தி காலுறைகளை அணியத்தொடங்கினாள். கொழுப்பில் செய்த மலிவான மெழுகுதிரிகளை வாங்கி எரித்தாள்.

இக்காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்கிறது. அவர்கள் ரோயனுக்கு பக்கத்திலுள்ள யோன்வில்லே என்ற ஊருக்கு இடம் பெயருகிறார்கள். அங்கே எம்மா, லியோன் என்பவனைச் சந்திக்கிறாள். அவன் நொத்தாரிஸின் லிகிதராக பணிபுரிபவன். பெண்ணியல்புடைய அவன் அவள்போல் மனோரதிய கற்பனைகளில் திளைப்பவன். இருவரும் மலைகள்,கடல், சுற்றுலா என்பவற்றில் விருப்பமுள்ளவர்கள். இந்த உணர்வு ரீதியான கூட்டு இருவருக்கும் திருப்தியளித்தது. ஆனால் லியோன் பரீட்சை எழுதுவதற்காக பாரிசுக்குப் போக நேர்கிறது. மீண்டும் ஒரு தடவை எம்மாவின் வாழ்க்கை வெறுமையாகிறது. அவளுக்கு இப்போது வயது முப்பது ஒரு குழந்தைக்குத் தாய். எனினும் அவளது மிகையுணர்ச்சி மனபான்மை மாறவில்லை.
அடுத்ததாக ரொடோல்வ் பெனலங்கா வருகிறான். சிறு நிலச் சொந்தக்காரனான அவன் பெண்களோடு மிகவும் பரிச்சயம் உள்ளவன். வெளிறிய நிறமும் துருதுருவென்ற கண்களும் கொண்ட பெண்கள் மீது அவனுக்கு ஒரு பித்து. அவளுக்கு கணவன், ஒரு மதலை உள்ளனர் என்பதையும் மற்றும் அயலவர்களின் வம்புப் பேச்சையும் பொருட்படுத்தாமல் அவளை வசமாக்க முயல்கிறான். அவள் தனக்குள்ளே சொல்லிக்கொள்கிறாள் 'எனக்கொரு காதலர் உள்ளார்".
பிளெவ்பெர்ட் இதை எழுதும் போது 'ஒரு கூட்டம் விலை மகளிர் அவன் நினைவில் நின்று இன்னிசை கீதம் பாடினார். அவர்கள் வசிகரமான குரலில் அவனை ஈர்த்தெடுத்தனர்". பெண்களை வசப்படுத்த என்ன தந்திரத்தைக் கையாள வேண்டும் என்பதில் ரொடொல்ப் கைதேர்ந்தவன். அதனால் சோலைகளுக்கூடாக அவளை அழைத்துச் செல்கிறாள். அப்போது அவளை வசப்படுத்த முனைகிறான். அவளும் அவன்மீது தீவிர காதல் கொள்கிறாள். எங்கையாவது ஓடிப்போக வேண்டுமென்கிறாள். அவர்கள் வெனிஸ் நகரம் போக திட்டமிடுகிறார்கள், ஆனால் அவள் மீது அவனுகு;கு சலிப்புதட்டி விடுகிறது. அவன் 'தனது ஆழ்ந்த காதலை கைவிட்டு விட்டதாக அவளுக்கு கடிதம் அனுப்புகிறான்.
எம்மா மிகவும் மனமொடிந்து போகிறாள். ரொடேல்ப் அனைத்துக்கும் மேலாக அவளைத் திருப்திப் படுத்தினான். ஒரு காதலனுக்கு மேலாக, அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவன் அவன். அவனின் புயலார்ந்த காதலின் வெளிப்பாடுதான் அவனது முரட்டுத்தனம் என்றும், அவனின் சலிப்பு பைரனுடையது போன்றது என்றும் எம்மா சொன்னாள். அவனது இழப்பு ஒத்திசைந்து வாழும் அநுபவத்தின் இழப்பு மாத்திரமல்லாது அவளது ஆன்மாவிலும் பெரும் காயமொன்றை ஏற்படுத்தி விட்டது. சமயப்; பணிகள், பக்தி, பொதுநலசேவை ஆகியவற்றில் ஈடுப்பட்டாள். பிரார்த்தனை செய்வதற்கு வசதியாக முக்காலி ஒன்றையும் வாங்கினாள். திருப்திகாண முடியாத அவளது மனோரதியக் கற்பனைகள் சற்று அடங்கிப் போயின. அவள் மெல்ல மெல்ல தேறிவரத் தொடங்கினாள்.

ஆனால் இப்போக்கு நீண்ட காலம் நிலைக்கவில்லை . லியோன் தொழில் நிமித்தம் றோயனுக்கு திரும்பி வருகிறான். வண்டிக்குள் நடந்த காதல் விளையாட்டை து}ண்டியவளும் அதன் பிரதான பங்காளியும் அவள்தான். எப்படியும் அவன்தான் அவளின் காதல் விவகாரங்களின் ஆரம்பம். அப்பாவியான கணவனிடம் ஒரு வாரத்துக்கு இசைப்பயிற்சி பெற்றுவருவதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு றோயனுக்கு போகிறாள். அங்கே ஒரு ஹொட்டலில் விலைமாதர், தவறணை, அரங்கு என்பவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் இருவரும் தங்கி ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இன்னும் தனது கணவனிடம் சொத்துக்களுக்கான உரிமையை மாற்றி எடுத்துக் கொண்டாள். இப்போது விலையுயர்ந்த உடைகளுக்கும் ஆடம்பரப் பொருட்களுக்குமான பேராவல் கடிவாளம் அறுந்து ஓடியது. விதவிதமான விலையுயர்ந்த தரைவிரிப்புகள், திரைச்சீலைகள் என வாங்கி வீட்டை அலங்காரித்தாள். அவ்வப்போதைய தனது மனநிலைக்கேற்ப அவைகளை மாற்றியும் வந்தாள். யோன்வில்லேயில், எல்கேரியச் என்னும் கபடத்தனமும் பேராசையும் கொண்ட வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் அவள் கேட்ட போதெல்லாம் அறாவட்டிக்கு கடன் கொடுத்து அவளைக் கொள்ளையடித்தான்.

அவள் உணர்வு பூர்வமான காதலின் பரிசுத்தத்தை இழந்த போது, அவளுக்கு பணநெருக்கடி மிகுந்த போது விவாக பந்தத்தின் இடத்தில் விபச்சாரம் மெல்ல மெல்ல நுழையத் தொடங்கியது. அவள் தன்னையே விற்கத் தொடங்கினாள். கடனை அடைக்க முடியாமல் போக வீடு ஏலத்தில் போடுவதற்காக 'சீல்" வைக்கப்பட்ட போது தாங்க முடியாது மனத்துயரத்துடன் ஓடிப்போய் எல்கேரியச்சிடம் மன்றாடுகிறாள். அது பயனற்று போக உள்ள10ர் நொத்தாரிஸிடம் 8000 பிராங்க் கடன் கேட்கிறாள் அவனோ அவளை வசப்படுத்த முனைகிறான். அவள் மறுத்துவிட்டு வரி அற விடுபவனிடம் ஓடுகிறாள். அதுவும் சரிவராமல் போக கடைசியில் ரோடொல்பின் மாளிகையை நோக்கிவருகிறாள் அங்கும் பயனில்லாமல் போகிறது. எல்லாமுயற்சிகளும் பயனற்றுப் போக ஒரு கையளவு ஆசனிக் நஞ்சை எடுத்து விழுங்கி விடுகிறாள். அவளுடைய மரணவேதனை மிகவும் விஸ்தாரமாக பிளெவ்பெர்ட்டால் விபரிக்கப்படுகிறது. ஒரு கைக்கண்ணாடியில் அவள் தன்னைப் பார்த்து விம்மி விம்மி அழுவது, சிலுவையை முத்தமிடுதல் அதனால் சில வினாடிகள் மரண அவஸ்த்தை தணிதல் என்பன எல்லாம் நன்கு வர்ணிக்கப்பட்டுள்ளன.

சில விமர்சகர்கள் பிளெவ்பெர்ட்டின் நு}ல் பூர்ஷ்வா வர்க்கத்தின் மீது எல்லையற்ற வெறுப்பையும் ஒரு மிகைப்படுத்திய எரிச்சலையும் வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர். இக் கூற்று பொருத்தமற்றது. ஏனெனில் எம்மாவின் து}ரதிஷ்டம் சார்ல்ஸ் போவெரிக்கு வாழ்க்கைப்பட்டது, சுய நலமிக்க ரொடெல்ப்பால் வசமாக்கப்பட்டது, பெண்ணியல்புடைய லியொன்னைக் காதலித்தது. அடுத்தது அவளைச் சூழ இருந்த மக்கள் மந்த புத்தியுள்ளவர்களாக மற்றவர்களின் உணர்வை விளங்கிக்கொள்ள முடியாது கட்டித்த மனபான்மை உள்ளவர்களாக அவர்கள் இருந்தனர் சுயநலம், பேராசை, குறுகிய மனபான்மை அவர்களின் இயல்புகள். அவர்கள் அவ்வாறு இல்லை என்பதைக் காட்டும் இயல்புகள் எவையும் அவர்களிடம் காணப்படவில்லை. ஆயினும் மருந்துக்கடைக்காரன் ஹொமஸ் ஆச்சரியமான பாத்திரப் படைப்பாவான். அவன் போன்ற அவளைப்புரிந்து கொள்ளக்கூடிய ஒரிருவரையாது அவளால் சந்திக்க முடிந்ததா?
எம்மா போவெரியின் கதை ஒரு துன்பியில் நாடகம் அல்ல. ஏனெனில் தவிர்க்க முடியாமை அங்கு குறைவு. அவளுடைய கற்பனாலோக மனோபாவம் அவளுடைய துர்- அதிர்ஷ்டமான கலியாணத்தாலும் எதிர்பாராத நிகழ்வுகளாலும் பெருந்தன்மை உள்ள மக்கள் சூழ இன்மையாலும் ஒரு சோகமுடிவை எய்துகிறது. இப்புத்தகம் வாழ்க்கையின் ஆழத்திலிருந்து சீவி எடுக்ப்பட்ட ஒரு கீற்று என்று குறிப்பிடப்படுகிறது. எம்மா எப்பொழுதும்,எங்கும் காணகிடைக்கின்ற பெண் எமில் பேகற் என்னும் தலைசிறந்த பிரெஞ்சு விமர்சகர் அது பற்றி குறிப்பிடுகையில் 'மெடம் போவெரி, ஒரு சிரஞ்சீவி. பால்சாக், ஷேக்ஸ்பியர் உள்ளடங்கலாக, நான் அறிந்த இலக்கியங்களில் உள்ளவற்றையும் விஞ்சிய ஒரு முழுமையான பெண் சித்திரம். ஒரு வெறும் வாழ்க்கை வரலாற்றுடன் பிளெவ்பெர்ட் திருப்தியடைந்து விடவில்லை மிகப் பொறுமையுடன், ஆண்டுக்கு ஆண்டு, சில சமயங்களில் நாளுக்கு நாள், சிறு சிறு அற்ப விடயங்களையும் தவற விடாமல், இப்பாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியை உணர்வு பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் அவர் சித்தரித்துள்ளார். ஒரு நிகழ்வும் அதன் தொடர் வினைவுகளும் கூட பூடகமாக சொல்லப்பட்டுள்ளன.
ஓர் ஆன்மாவின் பூரணமான வாழ்வு எங்கள் கண்முன்னே விரிகிறது, அதன் தர்க்கரீதியான நிகழ்வுப் போக்குகளுடன். கற்பனா மனோபாவம் என்னும் நோய், அதற்கு என்ன பெயரிட்டாலும் அடிவானத்துக்கு அப்பால் அவளை வாழத் து}ண்டுகிறது. ஏனெனில் அதனால் சுற்ற உள்ளவைகளின் நயத்தை, அழகை, இசைவை, கவிதையை கண்டுணரமுடியாது. அந்நோய் இல்லாதவர்களே அவற்றை உணர்வர். இந்த மனோரதிய உணர்வை தனது நாடித்துடிப்பில் கொண்டிருந்த பிளெவ்பெர்ட் அதைக் கலைப்படைப்பாக்கினார். 'எனது கதாநாயகி மெடம் போவெரி என்னைப் போல" என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்தில் : எட்வெர்ட் அஸ்க்ரொவ்ற்
தமிழில்: திருவேணிசங்கமம்

'100 பசநயவ டிழழமள" என்னும் நு}லிலிருந்து எடுக்கப்பட்டது.


     இதுவரை:  24714163 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4361 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com